Search
  • Follow NativePlanet
Share
» »IRCTC இன் மலிவான ‘போத்கயா சர்க்யூட்’ டூர் பேக்கேஜ் – விவரங்கள் இதோ!

IRCTC இன் மலிவான ‘போத்கயா சர்க்யூட்’ டூர் பேக்கேஜ் – விவரங்கள் இதோ!

ஆன்மீக சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு நற்செய்தி! இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் 'போத்கயா சர்க்யூட்' டூர் பேக்கேஜை அறிவித்துள்ளது.

'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' மற்றும் 'தேகோ அப்னா தேஷ்' முயற்சிகளின் கீழ் இந்த டூர் பேக்கேஜ் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது போத்கயா, ராஜ்கிர் மற்றும் நாளந்தாவுக்குச் செல்ல விரும்புவோருக்கு உண்மையிலேயே ஒரு நல்ல செய்தியாகும். IRCTC இந்த பாரம்பரிய தளங்களைச் சுற்றி சிறந்த மற்றும் மலிவான டூர் பேக்கேஜ்களை ஒன்றாக இணைத்துள்ளது. அதனைப் பற்றிய மேலும் விவரங்கள் இதோ!

போத்கயா சர்க்யூட்

போத்கயா சர்க்யூட்

புத்த கயா
உலகின் மிக முக்கியமான மற்றும் புனிதமான புத்த புனித யாத்திரை மையங்களில் ஒன்றாகும். இது பௌத்த மதத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட புத்தர் ஞானம் பெற்ற போதி மரம், பல்வேறு கோவில்கள் மற்றும் மடாலயங்களைக் கொண்டுள்ளது.

பச்சை பள்ளத்தாக்கில், பாறை மலைகளால் சூழப்பட்ட ராஜ்கிர்,
அடர்ந்த காடுகள், மர்மமான குகைகள் மற்றும் நீரூற்றுகளுக்கு மத்தியில் இயற்கையான அமைதியுடன் அமைந்திருக்கும் ஒரு ஆன்மீக நகரமாகும்.

நாளந்தா பல்கலைக்கழகம்
கிமு 5 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட பண்டைய சர்வதேச துறவற பல்கலைக்கழகத்திற்காக உலகம் முழுவதும் பிரபலமானது. இது இந்திய அரசாங்கத்தால் "தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம்"
என பட்டியலிடப்பட்டுள்ளது.

டூர் பேக்கேஜிற்கான கட்டணங்கள்

டூர் பேக்கேஜிற்கான கட்டணங்கள்

இந்த டூர் பேக்கேஜின் கட்டணம் சற்று குறைவு தான், அதிலும் நீங்கள் கூட்டமாக பயணித்தால் கூடுதல் சலுகைகள் கிடைக்கிறது. ஒரு தனி நபருக்கான கட்டணம் ரூ. 10,600 ஆகும். இருவர்
ஒன்றாக சேர்த்து புக் செய்யும் போது ஒரு தனி நபருக்கான கட்டணம் ரூ. 13,270 ஆகவும், மூன்று பேர்சேர்ந்து புக் செய்தால் ஒரு தனி நபருக்கான கட்டணம் ரூ.11,100 ஆகவும், நான்கு பேர்சேர்ந்து புக் செய்தால் ஒரு தனி நபருக்கான கட்டணம் ரூ.12,050 ஆகவும், ஆறு பேர்
சேர்ந்து புக் செய்தால் ஒரு தனி நபருக்கான கட்டணம் ரூ.10,600 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 5 முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ரூ. 6,500 செலவாகும்.

டூர் பேக்கேஜ் உடன் வரும் இதர சலுகைகள்

டூர் பேக்கேஜ் உடன் வரும் இதர சலுகைகள்

பீகாரில் உள்ள ராஜ்கிர், புத்தகயா மற்றும் நாளந்தா ஆகிய இடங்களை உள்ளடக்கிய இந்த பேக்கேஜ் 5 பகல் மற்றும் 4 இரவுகள் கொண்ட ஒரு சுற்றுலாப் பயணத் தொகுப்பாகும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து பயணம் தொடங்குகிறது.

பயணிகள் ஹவுரா, பந்தேல் ஜே.என்., பர்தாமான், போல்பூர் சாந்திநிகேதன், சைந்தியா ஜே.என். ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து ஏறிக் கொள்ளலாம்.

ஐஆர்சிடிசி பயணக் காப்பீடு, இடமாற்றம் மற்றும் சுற்றிப் பார்ப்பதற்கான வாகனம் மற்றும் இரவு தங்குவதற்கு, காலை உணவு மற்றும் இரவு உணவிற்கான ஹோட்டல் ஆகியவையும் இந்த டூர் பேக்கேஜில் அடங்கும்.

இந்த பேக்கேஜின் பெயர் போத்கயா சர்க்யூட் ரயில் டூர் எக்ஸ் ஹவுரா ஆகும். மேலும் பயணிகள் மூன்றாம் ஏசி வகுப்பில் பயணிக்கலாம்.

http://www.irctctourism.com/ என்ற இணையதளத்தில்
பயணிகள் டிக்கெட்டுகளை ஆன்லைனில் பதிவு செய்யலாம். IRCTC சுற்றுலா வசதி மையம், மண்டல அலுவலகங்கள் மற்றும் பிராந்திய அலுவலகங்களிலும் டிக்கெட்டுகளை புக் பண்ணலாம்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X