Search
  • Follow NativePlanet
Share
» »சுற்றுலா செல்லும் ஆர்வத்தில் குழந்தையை விமான நிலையத்திலேயே மறந்து விட்டுச் சென்ற பெற்றோர்கள்!

சுற்றுலா செல்லும் ஆர்வத்தில் குழந்தையை விமான நிலையத்திலேயே மறந்து விட்டுச் சென்ற பெற்றோர்கள்!

விமானத்தில் ஏற வேண்டும் என்ற அவசரத்தில் பெற்ற குழந்தையை தம்பதிகள் விமான நிலையத்திலேயே மறந்து விட்டுச் சென்ற செய்தி இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. நாம் சுற்றுலா செல்ல வேண்டும் ஆனால் இப்படி எல்லாம் குழந்தையை மறந்துவிட்டு செல்லக் கூடாது என நெட்டிசன்கள் உலகம் முழுவதும் கருது தெரிவித்து வருகின்றனர். குழந்தைக்கு டிக்கெட் வாங்கவில்லை என்பதற்காக குழந்தையை விமான நிலையத்தில் விட்டுவிட்டு விமானத்தில் ஏறி சென்றுள்ளனர் அந்த பெற்றோர்!

Airport

குழந்தையை மறந்துச் சென்ற பெற்றோர்கள்

பெல்ஜிய பாஸ்போர்ட்டை வைத்திருந்த அடையாளம் தெரியாத பெற்றோர்கள், பெல்ஜியத்தின் தலைநகரான பிரஸ்ஸல்ஸுக்குச் செல்லும் ரியான்ஏர் விமானத்தில் ஏற முயன்றபோது, தங்கள் குழந்தையை கேரியரில் விட்டுச் சென்றதாக இஸ்ரேல் விமான நிலையங்கள் ஆணையம் செய்தி தெரிவித்துள்ளது. இந்த வினோத சம்பவம் பென்-குரியன் விமான நிலையத்தில் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன!

குழந்தைக்கு கட்டணம் செலுத்துவது அவசியம்

இந்த ஜோடி Ryanair ஏர்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தது, அதன் இணையதளத்தின்படி, ஆன்லைன் முன்பதிவு செயல்பாட்டின் போது குழந்தைகளை விமான முன்பதிவில் சேர்க்கலாம். ஒரு கைக்குழந்தையுடன் பயணம் செய்ய திட்டமிடும் போது, ஒரு பெரியவரின் மடியில் அமர்ந்து குழந்தை எடுக்கும் ஒவ்வொரு ஒரு வழி விமானத்திற்கும் 27 அமெரிக்க டாலர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது விதிமுறையாகும்.

குழந்தைக்கு டிக்கெட் வாங்காமல் வந்த பெற்றோர்கள்

மேற்கூறியவற்றை செய்யாமல் வந்த அந்த பெற்றோர்கள், விமானத்தில் ஏற முற்பட்டபோது, குழந்தைக்கு டிக்கெட் இல்லை, பெற்றோர்கள் விமானத்தில் ஏறச் சென்றபோது, குழந்தைக்கும் டிக்கெட் வேண்டும் என்று கூறப்பட்டது.

Airplane

குழந்தைக்கு தனி டிக்கெட் வாங்க வேண்டும் என்று கூறியதை அடுத்து அவர்கள் தங்கள் குழந்தையை விமான நிலையத்தில் உள்ள செக்-இன் கவுண்டரில் விட்டு சென்றுள்ளனர்.

குழந்தையை விட்டு தனியே விமானம் ஏறச் சென்ற தம்பதி

தனித்து விடப்பட்ட குழந்தையை கண்டறிந்த விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் போலீசாரை தொடர்புக் கொண்டனர். அப்பொழுதுதான் டெல் அவிவில் இருந்து பிரஸ்ஸல்ஸுக்கு (ஜனவரி 31) பயணித்த இந்த பயணிகள், தங்கள் குழந்தைக்கு முன்பதிவு செய்யாமல் செக்-இன் செய்ய போனது தெரிய வந்தது. தம்பதியினர் குழந்தைகளுக்கான டிக்கெட்டை முன்கூட்டியே வாங்கவில்லை என்றும், விமான நிலைய பணியாளர்களின் கூற்றுப்படி, அவர்கள் தங்கள் குழந்தையை மேசையின் அருகே குழந்தை இழுபெட்டியில் விட்டுவிட்டு பாஸ்போர்ட் கட்டுப்பாட்டிற்குச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தை

போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் நிலைமை சீரடைந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். குழந்தையை மறந்துச் சென்ற பெற்றோர்கள் இருந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டு குழந்தை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தை பெற்றோருடன் இருப்பதாகவும், மேலதிக விசாரணை எதுவும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதனால் விமான நிலையத்தில் ஏற்பட்ட பரபரப்பு நீங்கி இயல்பு நிலைக்கு திரும்பியது.

என்ன தான் தலை போகும் அவசரமாக இருந்தாலும் கூட குழந்தையை மறந்து சென்றது அனைவரையும் வியப்புக்குள்ளாக்கி இருக்கிறது. இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்குறீர்கள்?

Read more about: airport
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X