Search
  • Follow NativePlanet
Share
» »திறக்கப்படும் பாதியளவு சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸவே - தமிழ்நாட்டு சாலை எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

திறக்கப்படும் பாதியளவு சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸவே - தமிழ்நாட்டு சாலை எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

262 கிமீ தூரத்தை 3 மணி நேரத்தில் கடக்க வைக்கும் பெங்களூரு-சென்னை கிரீன்ஃபீல்ட் விரைவுச் சாலையின் கர்நாடக பகுதி அதாவது 71 கிமீ தூர சாலை தற்போது தயாராக உள்ளது. தாபஸ்பேட்டையை ஹோஸ்கோட்டுடன் இணைக்கும் இந்த சாலை இந்த ஆண்டு டிசம்பருக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு பகுதி எப்போது ரெடியாகும் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்!

கர்நாடகாவில் பயன்பாட்டுக்கு வரும் எக்ஸ்பிரஸ்வே

பெங்களூரு மற்றும் சென்னை இடையே வழக்கமான ஏழு மணி நேர பயணத்தை தோராயமாக மூன்று மணி நேரமாகக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள ன்னிந்தியாவின் முதல் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ்வே கூடிய விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) கர்நாடகாவை கடந்து செல்லும் பெங்களூரு-சென்னை விரைவுச்சாலையின் முக்கியமான 71 கிலோமீட்டர் பகுதியை 2024 நவம்பர் இறுதியில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மூன்று கட்டங்களாக முடிவடைந்த பணிகள்

விரைவுச் சாலையின் கட்டுமானம் கர்நாடகாவில் மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டம் ஹோஸ்கோட்டிலிருந்து மாலூர் வரை 27.1 கிலோமீட்டர், இரண்டாவது மலூரிலிருந்து பங்கார்பேட் வரை, மூன்றாவது கட்டம் பங்கார்பேட்டிலிருந்து பெத்தமங்களா வரை 17.5 கிலோமீட்டர்கள். இந்த பிரிவுகள் அனைத்தும் இந்த நவம்பர் மாதத்திற்குள் திறக்கப்பட உள்ளது.

இரு நகரங்களுக்குமான பயண நேரம் குறையும்

262 கிமீ நீளமுள்ள பெங்களூரு-சென்னை விரைவுச் சாலை கிட்டத்தட்ட 18,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு, கர்நாடகா (71 கிமீ), ஆந்திரப் பிரதேசம் (85 கிமீ), தமிழ்நாடு (106 கிமீ) ஆகிய மாநிலங்கள் வழியாகச் செல்லும். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதன்மையான உள்கட்டமைப்பு திட்டமான பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் இந்த அதிவேக நெடுஞ்சாலை உருவாக்கப்படுகிறது. இந்த பாரிய திட்டத்திற்கு மே 26, 2022 அன்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். கட்டுமானத்தில் உள்ள விரைவுச்சாலை (BCE), முடிந்ததும், இரண்டு பெருநகரங்களுக்கிடையேயான பயண நேரத்தை மூன்று மணி நேரத்திற்குள்ளாக குறைக்கிறது.

தமிழகத்துடன் பெங்களூரை விரைவாக இணைக்கும் சாலை

தற்போது, ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி வழி, பழைய மெட்ராஸ் சாலை மற்றும் கோலார்-கேஜிஎஃப்-வி கோட்டா மற்றும் வேலூர் மார்க்கம் உட்பட, சென்னை மற்றும் பெங்களூரு இடையே பயணிக்க மூன்று மாற்று வழிகள் உள்ளன. ஆனால், எதில் சென்றாலும் இரு நகரங்களுக்குமான பயண நேரம் 5-6 மணி நேரம் ஆகும். புதிய விரைவுச் சாலை பெங்களூரு மற்றும் சென்னை இடையேயான தூரத்தை 300 கி.மீ லிருந்து 262 கி.மீ ஆக குறைத்து, பயண நேரத்தை 2-3 மணி நேரமாகக் குறைக்கும். இது பயண நேரத்தை குறைப்பது மட்டுமல்லாமல், பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும்.

சுரங்கப்பாதைகள், மேம்பாலங்கள் மற்றும் பாலங்கள்

அதிவேக நெடுஞ்சாலையில் 71 வாகன சுரங்கப்பாதைகள், மேம்பாலங்கள் மற்றும் இலகுரக வாகன சுரங்கப்பாதைகள், மூன்று ரயில் பாலங்கள், 31 பெரிய பாலங்கள், 25 சிறிய பாலங்கள், 147 கல்வெட்டுகள், ஆறு சுங்கச்சாவடிகள் மற்றும் ஐந்து பரிமாற்றங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. நெடுஞ்சாலையில் பயணிகள் இரண்டு ஓய்வு பகுதிகள் மற்றும் இரண்டு டிராக் லே பேக்கள் இருக்கும்.

தமிழ்நாட்டில் துரிதமாக முடிவடைந்து வரும் வேலைகள்

தமிழ்நாட்டில், 106 கிமீ தூரம் செல்லும் கிரீன்ஃபீல்ட் விரைவுச்சாலை, குடிபாலா (ஏபி) முதல் வாலாஜாபேட்டை, வாலாஜாபேட்டை முதல் அரக்கோணம், அரக்கோணம் முதல் காஞ்சிபுரம் மற்றும் காஞ்சிபுரம் முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை நான்கு தொகுப்புகளின் கீழ் கட்டப்பட்டு வருகிறது. வாலாஜாபேட்டை முதல் அரக்கோணம் வரையிலான பகுதியில் 78 சதவீதம் பணியும் அரக்கோணம் முதல் காஞ்சிபுரம் வரை 51 சதவீதம் பணியும் முடிவடைந்து உள்ளது.

தமிழ்நாடு பகுதி எப்போது ரெடியாகும்

இதில் கர்நாடகாவில் உள்ள 72 கிலோமீட்டர் தூர சாலை பணிகள் முழுமை பெற்றுவிட்டன. ஆனால் 106 கிலோமீட்டர் தூரம் கொண்ட தமிழ்நாட்டில் இன்னும் பணிகள் நடந்து வருகின்றன. சென்னை அடுத்த இருங்காட்டுகோட்டையில் இருந்து ஆந்திர மாநிலம் குடிபாலா வரை 4 வழிச் சாலை பணிகள் நடக்கின்றன. இதனை இடையில் உள்ள நகரங்கள் உடன் தொடர்பு ஏற்படுத்தும் வகையில் இணைப்பு சாலைகளும் அமைக்கப்படுகின்றன. இதுதொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கூறுகையில், நிலம் கையகப்படுத்துதல் முடிந்துவிட்டன. சாலை கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இன்னும் 15 சதவீதப் பணிகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன என்று NHAI கூறியுள்ளது.

தமிழகத்தில் 2025 க்குள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்ப்பு

இந்த திட்டம் 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் முடிவடையும் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டாலும், பல்வேறு தாமதங்கள் தற்போது முழு நிறைவு காலக்கெடுவை 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதி வரை நீட்டித்துள்ளன. இருப்பினும், கர்நாடகாவில் வரவிருக்கும் விரிவாக்கத்தின் தொடக்கமானது ஒரு முக்கியமான சாதனையைக் குறிக்கிறது, இது இணைப்பு, பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்துகிறது. இதே போல தமிழகத்தில் பணிகள் துரிதமாக முடிக்கப்பட்டு ஆகஸ்ட் 2025 க்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

More News

    Read more about: chennai bangalore expressway
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+