• Follow NativePlanet
Share
» »மதுரை தேனி மக்களுக்கு குட் நியூஸ் - மதுரை போடி இடையே விரைவில் மின்சார ரயில்கள் இயக்கம்!

மதுரை தேனி மக்களுக்கு குட் நியூஸ் - மதுரை போடி இடையே விரைவில் மின்சார ரயில்கள் இயக்கம்!

மதுரை மற்றும் தேனி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவு நனவாக போகிறது. மதுரை - போடி இடையேயான ரயில்வே பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளது. தேனி மற்றும் மதுரை மக்களின் நீண்ட நாள் கனவு திட்டமான மதுரை முதல் போடி வழிதடத்தில் மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதனை அடுத்து விரைவில் மதுரை முதல் போடி வரை மின்சார ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kerala from Madurai Train

வெற்றிகரமாக நடந்த சோதனை ஓட்டம்

மதுரையிலிருந்து சென்னை வரை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ள நிலையில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் மதுரை முதல் போடி வரை நடைபெற்றது. தேனியில் இருந்து போடி வரையிலான தண்டவாளம் பொருத்தும் பணி நிறைவு பெற்று, ஜூன் 15 ஆம் தேதி முதல் சென்னையில் இருந்து போடி வரை ரயில் இயக்கப்பட உள்ள நிலையில் தற்போது இறுதி கட்ட இருப்புப் பாதை சோதனைக்காக அதிவேக சோதனை ஓட்டம் நடைபெற்றது.

துரிதமாக நடைபெற்ற பணிகள்

மதுரை-போடிநாயக்கனூர் இடையிலான மீட்டர் கேஜ் பாதை டிசம்பர் 31 2010 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டு அகல ரயில் பாதை திட்டப் பணிகள் தொடங்கி 12 ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வந்தது. இதில் கடந்த ஆண்டு மே மாதம் 26 ஆம் தேதி முதல் தேனியில் இருந்து மதுரை வரையிலான சேவை தொடங்கப்பட்ட நிலையில் மீதமுள்ள தேனி போடி இடையிலான பணிகள் துரிதமாக நடைபெற்றது.

முடிவடைந்த ரயில்வே பணிகள்

மேலும் மீதமுள்ள தேனி போடி இடையிலான பணிகள் வேகமாக நடைபெற்று வந்தது. அதன்படி தேனியில் இருந்து 15 கிலோமீட்டர் தூரம் போடி வரை அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள், போடி ரயில் நிலையத்தில் நடைமேடை விரிவாக்கம் செய்யும் பணி, சிக்னல்கள் பொருத்தும் பணி அனைத்தும் முடிவடைந்தது.

தேனிக்கு வந்த மின்சார ரயில்

இதனையடுத்து தேனி மற்றும் மதுரை மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான போடி முதல் சென்னை வரை ரயில் சேவை துவங்கப்பட்டது. ஆனால் மதுரையில் இருந்து போடி வரை மின்சார ரயில் இயக்க முடியாத சூழல் இருந்தது. தற்போது அதற்கான பணிகளும் முடிந்துவிட்ட நிலையில் நீங்கள் இனி மதுரையிலிருந்து தேனிக்கு விரைவில் மின்சார ரயிலில் பயணிக்கலாம்.

மதுரையிலிருந்து கேரளா செல்வதும் ஈஸி

இந்த சோதனைய ஓட்டத்தில் மதுரையில் இருந்து கிளம்பிய ரயில் ஆண்டிபட்டிக்கு 1.30 மணிக்கு வந்தடைந்தது. இந்த மின்சார ரயில் சோதனை ஓட்டத்தின் போது மின்மயமாக்கல் உபகரணங்களை தலைமை பொறியாளர்கள் ஆய்வு செய்தனர். மேலும் தெற்கு ரயில்வே முதன்மை தலைமை பொறியாளர் சித்தார்த்த தலைமையிலான பொறியாளர்கள் இந்த சோதனை ஓட்டத்தை மேற்கொண்டனர். கூடிய விரைவில் தேனியிலிருந்து மக்கள் மதுரைக்கு மின்சார ரயிலில் பயணிப்பதோடு, மதுரையிலிருந்து ஈசியாக கேரளாவுக்கும் கூட செல்லலாம்.

விரைவில் பயணிகள் பயணிக்கலாம்

மின் வழித்தட பாதையில் ஏதேனும் இடையூறுகள் ஏற்பட்டுள்ளதா, ரயில் இயக்கும்போது ஏதாவது பிரச்சினைகள் உருவாகிறதா என்பது பற்றியும் ரயில் பாதையில் இணையும் நடைமேடை பாலப்பகுதிகள் ரயில் பாதையில் உள்ள முக்கிய வளைவுகள் ரயில் நிலையங்களில் உள்ள மின் வழித்தட கருவிகள் பற்றி ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வுகள் முடிவு பெற்று அறிக்கை வந்தவுடன் விரைவில் மதுரை முதல் போடி வரையில் மின்சார ரயில் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News

    Read more about: kerala madurai indian railway
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+