Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவின் சிறந்த சுற்றுலா கிராமம் என்றால் அது இந்த கிராமம் தானாம்!

இந்தியாவின் சிறந்த சுற்றுலா கிராமம் என்றால் அது இந்த கிராமம் தானாம்!

சுற்றுலா மூலம் கலாச்சார பாரம்பரியம் மற்றும் நிலையான வளர்ச்சியை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பதில் குறிப்பிடத்தக்க முயற்சிகளுக்காக இந்த ஒரு குறிப்பிட்ட கிராமத்திற்கு சிறப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டது. 125 ஆண்டுகள் பழமையான ஹவேலிகளை (மூதாதையர் வீடுகளை) மிகுந்த அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் பாதுகாத்து வருவதால் இந்த கிராமத்திற்கு மத்திய சுற்றுலா அமைச்சகத்தால் "சிறந்த சுற்றுலா விருது" வழங்கப்பட்டுள்ளது!

பஞ்சாபின் நவன் பிண்ட் சர்தாரன் கிராமம்

குர்தாஸ்பூர் பஞ்சாப் மாவட்டத்தில் அமைந்துள்ள நவன் பிண்ட் சர்தாரன், உலக சுற்றுலா தினத்தன்று, 2023 ஆம் ஆண்டு இந்தியாவின் சிறந்த சுற்றுலா கிராமமாக விருது பெற்ற கிராமமாகும். சுற்றுலா மூலம் பஞ்சாபின் கலாச்சார பாரம்பரியம் மற்றும் நிலையான வளர்ச்சியை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பதில் குறிப்பிடத்தக்க முயற்சிகளுக்காக நவன் பிண்ட் சர்தரனுக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.

விண்ணப்பித்த 750 கிராமங்கள்

சிறந்த சுற்றுலா கிராமங்கள் போட்டி என்பது கிராமப்புற சுற்றுலா தலங்களை அங்கீகரிக்கும் ஒரு போட்டியாகும். 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து மொத்தம் 750 கிராமங்கள் சிறந்த சுற்றுலா கிராம விருது 2023 க்கு விண்ணப்பித்திருந்தன. அதில் 35 கிராமங்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டன.

nawanpindsardaran

வெற்றி பெற்ற நவன் பிண்ட் சர்தாரன்

அவற்றில் கலாச்சார மற்றும் பாரம்பரிய பாதுகாப்பு, இயற்கை வள மேலாண்மை, பொருளாதார நிலைத்தன்மை, சமூக மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் சுற்றுலா மேம்பாடு உள்ளிட்ட நிலையான வளர்ச்சி இலக்குகளை அடிப்படையாக நவன் பிண்ட் சர்தரன் கிராமத்திற்கு விருது கிடைத்தது.

125 ஆண்டு கால வரலாறு

நவன் பிண்ட் சர்தாரன் கிராமம் 125 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றைக் கொண்டுள்ளது. நவன் பிண்ட் சர்தரன் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நரேன் சிங்கால் நிறுவப்பட்டது. அவர் தங்குவதற்கும், விளைபொருட்களை சேமித்து வைப்பதற்கும், விவசாயக் கருவிகளை சேமித்து வைப்பதற்கும், பண்ணை தொழிலாளர்களுடன் பழகுவதற்கும் ஒரு 'ஹவேலி'யைக் கட்டினார். 1886 ஆம் ஆண்டில், அவரது மகன் பியாந்த் சிங் 'கோதி' எனப்படும் ஒரு வீட்டைக் கட்டினார்.

கடின உழைப்பிற்கு பலன்

'சங்க சகோதரிகள்' என்று பிரபலமாக அறியப்படும் குர்சிம்ரன் கவுர் சங்கா, குர்மீத் ராய் சங்கா, மன்ப்ரீத் கவுர் சங்கா, கீதா சங்கா, மற்றும் நூர் சங்கா எனும் ஐந்து சகோதரிகள் இரண்டு மூதாதையர் வீடுகளை ஆர்வமாக பராமரித்து வந்தனர். 'கோதி' மற்றும் 'பிப்பல் ஹவேலி' ஆகிய இரண்டு வீடுகளைப் பாதுகாப்பதில் அவர்களின் கடின உழைப்புக்குப் பலன் கிடைத்தது, சமீபத்தில் மத்திய சுற்றுலா அமைச்சகத்திடம் இருந்து 2023 ஆம் ஆண்டின் இந்தியாவின் சிறந்த சுற்றுலா கிராமமாக அவர்களின் கிராமம் வென்றது.

சுற்றுலாவை மேம்படுத்தும் கிராமம்

சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் உள்ளூர் சமூகத்திற்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கும் சிறந்த பங்களிப்பிற்காக நவன் பிண்ட் சர்தரன் விருது வழங்கப்பட்டுள்ளது. குர்தாஸ்பூர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இந்த இடத்தைப் பராமரிக்கும் குடும்பம் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும், பொருளாதார நன்மைகளை வழங்கவும், இணக்கமான சமூக உணர்வை உருவாக்கவும் செய்கிறது.

தகுதியான நவன் பிண்ட் சர்தரன்

கைவினைத் தயாரிப்புகளுக்காக கிராமத்தில் மகளிர் சுயஉதவி குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன, மேலும் அறுபதுக்கும் மேற்பட்ட பெண்கள் ஹவேலிகளில் பணிபுரியும் போது கைவினைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இந்த கிராமம் தனது கலாச்சார பாரம்பரியத்தை நிலையான நடவடிக்கைகள் மூலம் வெற்றிகரமாக பாதுகாத்து, சிறந்த சுற்றுலா கிராமம் விருதுக்கு தகுதியுடையதாக ஆக்கியுள்ளது.

நீங்கள் பஞ்சாபிற்கு செல்லும் போது இந்த வரலாற்று கிராமத்தை காணத் தவறாதீர்கள்.

More News

    Read more about: travel news
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+