Search
  • Follow NativePlanet
Share
» »பாலக்காடு ரயில்வே கோட்டம் மூடப்படுகிறதா – இதனால் கோயம்புத்தூருக்கு தான் முழு பலன் கிடைக்குதாமே?

பாலக்காடு ரயில்வே கோட்டம் மூடப்படுகிறதா – இதனால் கோயம்புத்தூருக்கு தான் முழு பலன் கிடைக்குதாமே?

பாலக்காடு ரயில்வே கோட்டத்தை மங்களூரு ரயில்வே கோட்டத்தின் பகுதியாக மாற்ற மத்திய அரசு சமீபத்தில் முடிவு செய்தது. பயணிகளின் எண்ணிக்கையிலும் வருவாயிலும் பாலக்காடு கோட்டம் மிகவும் முன்னிலையில் இருக்கும் போது எதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது? அதுமட்டுமல்லாமல் இதனால் கோயம்புத்தூருக்கு தான் பலன் என்றும் பரவலாக பேசப்படுகிறது? அது ஏன்?

பாலக்காடு ரயில்வே கோட்டத்தை மூட முடிவு

பாலக்காடு ரயில்வே கோட்டத்தை மூடும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக கேரள அரசு ஞாயிற்றுக்கிழமை கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தது. மாநில ரயில்வே அமைச்சர் அப்துரஹிமான், இது தொடர்பான முடிவில் இருந்து விலகக் கோரி, மத்திய ரயில்வே அமைச்சருக்கு கடிதம் அனுப்பினார். பயணிகளின் எண்ணிக்கையிலும் வருவாயிலும் பாலக்காடு கோட்டம் மிகவும் முன்னிலையில் உள்ளதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், எந்தக் குறையையும் சுட்டிக்காட்டாமல் மூடும் நடவடிக்கை அரசுக்கு எதிரான மறைமுக நடவடிக்கை என்றார்.

கேரளா தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறதா?

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பாலக்காடு கோட்டம் எப்படிப் பிரிக்கப்பட்டு சேலம் கோட்டத்தை உருவாக்கியது என்பதை அவர் நினைவு கூர்ந்தார். அதன்பிறகு, பாலக்காடு கோட்டத்தை வலுவிழக்க வேண்டுமென்றே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார். ரயில்வே வளர்ச்சியில் கேரளா தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இதற்கு மத்தியில், தற்போதுள்ள அமைப்புகளும் படிப்படியாக அகற்றப்படுகின்றன, என்று அவர் குற்றம் சாட்டினார்.

palakkaddivisiongoingtobeclosed

இது சரியான முடிவல்ல - கேரள அமைச்சர்

இந்த முடிவை திரும்ப பெற வலியுறுத்தி மத்திய ரயில்வே அமைச்சருக்கு மாநில ரயில்வே அமைச்சர் அப்துரஹிமான் கடிதம் எழுதியுள்ளார். எவ்வாறாயினும், பாலக்காடு கோட்ட அதிகாரிகள், இன்று ஒரு அறிக்கையில், ஒரு புதிய பிரிவை மூடுவது அல்லது நிறுவுவது குறித்து எந்த விவாதங்களும், முன்மொழிவுகளும் அல்லது திட்டங்களும் இல்லை என்று தெளிவுபடுத்தினர்.

இவை அனைத்தும் முற்றிலும் வதந்தி - தென்னக ரயில்வே

தெற்கு ரயில்வேயின் பாலக்காடு கோட்டம் மூடப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து சில ஊடகங்களில் பரவிய செய்திகளை ரயில்வே அதிகாரிகள் திங்கள்கிழமை (மே 14) நிராகரித்தனர், அவை "முற்றிலும் ஊகங்கள்" மற்றும் "எந்தவொரு உண்மை அடிப்படையும் அற்றவை" என்று கூறினர். பாலக்காடு பிரிவு அடுத்த நாள் விரிவான செய்தி அறிக்கையை வெளியிட்டது, இந்த அறிக்கைகளை உறுதியாக மறுத்தது, வதந்தியான மூடலுக்கு கேரள அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து வந்துள்ளது.

தேவையற்ற ஊகங்களை தவிர்க்க வலியுறுத்தல்

மேலும், ஊடகங்கள் தங்களது அறிக்கைகளால் பொதுமக்களிடையே தேவையற்ற குழப்பத்தையும் கவலையையும் ஏற்படுத்துவதாகவும் அவர்கள் விமர்சித்துள்ளனர். இந்த அறிக்கைகள் முற்றிலும் ஊகங்கள் மற்றும் எந்த உண்மை அடிப்படையும் அற்றவை என்பது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது என்று தென்னக ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் கோயம்புத்தூருக்கு தான் நன்மையா?

கோயம்புத்தூருக்கு ஆதரவு தரும் விதமகாவே பாலக்காடு ரயில்வே கோட்டத்தினை மூட மத்திய அரசு முடிவு செய்துள்ளது எனவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் உலா வருகின்றன. இந்த நகரம் இந்திய ரயில்வேயின் தெற்கு ரயில்வே மண்டலத்தின் சேலம் கோட்டத்தின் கீழ் வருகிறது. முக்கிய ரயில் நிலையம் கோயம்புத்தூர் சந்திப்பு ஆகும், இது சென்னை சென்ட்ரலுக்கு அடுத்தபடியாக தெற்கு இரயில்வே மண்டலத்தில் இரண்டாவது பெரிய வருமானம் ஈட்டும் நிலையமாக இருப்பதால் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக பாலக்காடு கோட்டத்தை மூடிவிட்டு, கோயம்புத்தூர் கோட்டம் உருவாக்கலாம் என்றும் யூகிக்கப்படுகிறது.

ஆனால் இந்த செய்திகள் அனைதையும் தென்னக ரயில்வே முற்றிலும் மறுத்து, இது பொய் என தெளிவுப்படுத்தியுள்ளது!

More News

    Read more about: irctc indian railways
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+