பெண்களாய் பிறந்த அனைவருக்குமே 'நம் திருமணம் இப்படி நடக்க வேண்டும், இந்த மண்டபத்தில் நடக்க வேண்டும், இந்த சேலை வாங்க வேண்டும்' என பல கனவுகள் இருக்கும். உலகிலேயே இந்தியாவில் தான் மிக பிரமாண்டமாக திருமணங்கள் நடைபெறுகின்றன. ஒரு சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்திலும் கூட ரூ.15 லட்சம் இல்லாமல் திருமணம் நடைபெறுவது இல்லை. அப்படி இருக்க, இந்தியாவின் பரம்பரை கோடீஸ்வரர்கள் வீடுகளில் நடைபெற்ற கோலாகல திருமண வைபவங்கள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டது உண்டா? அவற்றில் அதிகபட்சமாக ரூ.713 கோடியும் குறைந்த பட்சமாக ரூ.200 கோடியும் திருமணத்திற்காக செலவு செய்யப்பட்டுள்ளது மக்களே!

இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமல் (ரூ.713 கோடி)
இந்தியாவில் மற்றும் ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி வீட்டு திருமணம் முதலிடத்தில் இருப்பதில் ஆச்சர்யமில்லை. சுத்த சந்தன தாளில் திருமண அழைப்பிதழ், விருந்தினர்களுக்கு வெள்ளி பரிசு பொருட்கள், தங்க ஜரிகை உடைகள், வைர வைடூரிய நகைகள், இத்தாலியின் திருமணம் என இஷா அம்பானியின் திருமணத்தில் ரூ.713 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. திருமண விழாவில், ரஜினிகாந்த், ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் முதல் சல்மான் கான், ரன்வீர் சிங், தீபிகா படுகோன், வரை பாலிவுட், கோலிவுட் நட்சத்திரங்கள் பலரும் சச்சின் தொடங்கி பல கிரிக்கெட் வீரர்களும், ஹிலாரி கிளிண்டன் வரை பெரிய நட்சத்திர பட்டாளமே இதில் கலந்து கொண்டனர்.
சுஷாந்தோ ராய் மற்றும் சீமான்டோ ராயின் இரட்டை திருமணம் (ரூ.550 கோடி)
சஹாரா தலைவர் சுப்ரதா ராயின் மகன்களின் இரட்டை திருமணம் யாராலும் மறக்க முடியாத ஒன்று. இரண்டு சகோதரர்களுக்கும் 2004 இல் லக்னோவில் உள்ள சஹாரா ஆடிட்டோரியத்தில் ஒரே மேடையில் மிக பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. உலகெங்கிலும் உள்ள 110 உணவுகள், சப்யசாச்சி முகர்ஜி மற்றும் ரோஹித் பால் வடிவமைத்த திருமண ஆடைகள், பாலிவுட் பிரபலங்கள் மற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள் உட்பட 11,000 க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொள்ள மிக கோலாகலமாக நடைபெற்ற திருமணத்திற்கு ரூ.550 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

பிராமணி ரெட்டி மற்றும் ராஜீவ் ரெட்டி (ரூ.500 கோடி)
சுரங்க தொழிலதிபரும், அரசியல்வாதியுமான கலி ஜனார்த்தன ரெட்டியின் ஒரே மகளின் திருமணம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தியா முழுக்க பணப்புழக்க நெருக்கடி ஏற்பட்ட நேரத்தில் ரெட்டி தனது மகளின் திருமணத்தை மிக பிரமாண்டமாக நடத்தினார். பெங்களூரு அரண்மனையில் நடைபெற்ற ஐந்து நாள் கொண்டாட்டத்தில் பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட 50,000 விருந்தினர்கள் கலந்து கொண்டனர். ரூ.100 கோடிக்கு திருமண புடவை, விலையுயர்ந்த அணிகலன்கள், விருந்தினர்களுக்கு பரிசுப் பொருட்கள், பாலிவுட் கலை இயக்குனர்கள் வடிவமைத்த பழங்கால இந்திய கோவில்கள், விருந்தினர்களை ஏற்றிச் செல்ல காளைகள் இழுக்கும் வண்டிகள் என பெரிய திருவிழா போல இந்த திருமணம் நடைபெற்றது.
சிருஷ்டி மிட்டல் மற்றும் குல்ராஜ் பெஹல் (ரூ.450 கோடி)
எஃகுத் தொழிலதிபர் லக்ஷ்மி மிட்டலின் சகோதரரான பிரமோத் மிட்டல் தனது மகள் சிருஷ்டி மிட்டலுக்கு முதலீட்டு வங்கியாளர் குல்ராஜ் பெஹலுடன் திருமணம் செய்ய ரூ.450 கோடியை மிகவும் அசாத்தியமாக செலவு செய்தார். பார்சிலோனாவில் நடைபெற்ற இந்த மூன்று நாள் கொண்டாட்டத்தில் 500 விருந்தினர்கள் கலந்து கொண்டனர், மேலும் ஸ்பானிய பிரபல சமையல்காரர் செர்கி அரோலா வழங்கிய மெனு மற்றும் 60 கிலோ எடையுள்ள ஆறு அடுக்கு திருமண கேக் ஆகியவை அடங்கும். இந்த நிகழ்ச்சிக்காக இந்தியா மற்றும் தாய்லாந்தில் இருந்து சுமார் 200 பட்லர்கள் மற்றும் சமையல்காரர்கள் ஸ்பெயினுக்கு வரவழைக்கப்பட்டனர்.

வனிஷா மிட்டல் மற்றும் அமித் பாட்டியா (ரூ.200 கோடி)
எஃகுத் தொழிலதிபர் லக்ஷ்மி மிட்டல், 2004 இல் லண்டன் வங்கியாளர் அமித் பாட்டியாவுடன் அவரது ஒரே மகளான வனிஷாவின் திருமணத்திற்கு செய்த செலவான ரூ.200 கோடி திருமண செலவே நீண்ட காலத்திற்கு இந்தியாவில் அரங்கேறிய மிக பிரமாண்ட திருமணமாக இருந்தது. வெர்சாய்ஸ் அரண்மனையில் நடந்த நிச்சயதார்த்த விழாவைத் தொடர்ந்து, திருமணம் 17ஆம் நூற்றாண்டு வாக்ஸ் லெ விகாம்டே அரண்மனையில் நடைபெற்றது. 35க்கும் மேற்பட்ட கைவினைஞர்கள் மும்பையிலிருந்து ஒரு மண்டபம் அல்லது திருமண சடங்கு நடைபெறும் மேடையை எஸ்டேட்டின் பரந்த தோட்டங்களில் உள்ள ஒரு குளத்தில் அமைப்பதற்காக விமானத்தில் அனுப்பப்பட்டனர். பாரிஸின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற இந்த ஆறு நாள் கொண்டாட்டத்தில் கைலி மினாக் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் ஷாருக்கான் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோரின் நிகழ்ச்சி இடம்பெற்றது.



Click it and Unblock the Notifications







