Search
  • Follow NativePlanet
Share
» »திருப்பதியில் லட்டு தயாரிக்க புதிய மெஷின்கள் – சுவை மற்றும் அளவில் எந்த மாற்றமும் இல்லை!

திருப்பதியில் லட்டு தயாரிக்க புதிய மெஷின்கள் – சுவை மற்றும் அளவில் எந்த மாற்றமும் இல்லை!

எவ்வளவு சாப்பிட்டாலும் சற்றும் சலிக்காத ஒரு சுவையோடு இருப்பது தான் திருப்பதி லட்டுகளின் சிறப்பம்சம். அதனால் தானோ என்னவோ? திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்க்தர்களால் திருப்பதி லட்டுகளின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. கட்டுக்கடங்காத விற்பனைக் காரணமாக திருமலை திருப்பதி தேவஸ் தானம் (TTD) லட்டு செய்ய புதிய ஆட்டோமேடிக் மெஷின்களை வாங்கியுள்ளது! இந்த மெஷின்கள் மூலம் ஒரு நாளைக்கு 6 லட்சம் லட்டு தயாரிக்கப்படும், மெஷினால் தயாரிக்கப்பட்டாலும் சுவையிலும் அளவிலும் எந்த குறையும் இருக்காது என TTD அறக்கட்டளை தெரிவித்துள்ளது!

அதீத சுவைக் கொண்ட திருப்பதி லட்டு பிரசாதம்

அதீத சுவைக் கொண்ட திருப்பதி லட்டு பிரசாதம்

நாமும் நம் வாழ்வில் எத்தனையோ பிரசாதங்களை சாப்பிட்டு இருப்போம் மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ்ந்திருப்போம். ஆனால் திருப்பதி லட்டு என்பது கூடுதல் ஸ்பெஷல் தானே! அனைவரும் போட்டி போட்டு வாங்குகின்றனர் என்பதற்காகவே லட்டின் விலை ரூ. 25 இல் இருந்து ரூ. 50 ஆக விலையேற்றப்பட்டது. ஆனாலும் லட்டு விற்பனை தொடர்ந்து உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருந்தது. கடந்த 2022 ஏப்ரல் முதல் இன்று வரை லட்டு விற்பனை மூலம் மட்டுமே 365 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. ஒருவரே நூற்றுக்கணக்கில் கூட லட்டு வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்டு தயாரிக்கும் உரிமை என்றுமே TTDயைச் சார்ந்தது

லட்டு தயாரிக்கும் உரிமை என்றுமே TTDயைச் சார்ந்தது

திருமலை திருப்பதி தேவஸ்தான கோவில்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ளன. கல்யாண உற்சவம், ஊஞ்சல் உற்சவம், விர்ச்சுவல் சேவை பார்ப்பவர்களுக்கு, இ - உண்டியலில் டொனேஷன் செய்பவர்களுக்கு இந்த மாநில கிளைக் கோவில்களில் திருப்பதி லட்டு பிரசாதம் வழங்கப்படும். எத்தனை கோவில்கள் வந்தாலும் கூட லட்டு தயாரிக்கும் உரிமை என்பது எப்பொழுதும் திருமலையில் மட்டுமே இருக்கும். ஆக, அனைவரையும் சென்றடைய வேண்டும் என்றால் லட்டுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் அல்லவா!

ஒரு நாளைக்கு 6 லட்சம் லட்டு தயாரிப்பு

ஒரு நாளைக்கு 6 லட்சம் லட்டு தயாரிப்பு

தற்போது, கோயிலின் வளாகத்தில் உள்ள "லட்டு போடு" எனப்படும் தனி சமையலறையில் லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன, இங்கு தினமும் 80,000 முதல் ஒரு லட்சம் பக்தர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 500 பேர் வேலை செய்கின்றனர். இருந்தும் லட்டு தேவை என்பது பற்றாக்குறையாக இருந்து வருகிறது. இதனை பூர்த்தி செய்யும் வகையில் ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின் ஆதரவுடன் ரூ.50 கோடி மதிப்பிலான ஆறு லட்சம் லட்டுகள் தயாரிக்கும் இரண்டு இயந்திரங்கள் தயாரிக்கப்படுகின்றன.

விறகு அடுப்புகளில் லட்டு தயாரிப்பு

விறகு அடுப்புகளில் லட்டு தயாரிப்பு

வறுத்த பேரீச்சம்பழம், கொதிக்கும் தூய நெய், சர்க்கரை பாகு, முந்திரி, ஏலக்காய் மற்றும் திராட்சை மற்றும் சர்க்கரை ஆகியவற்றின் கலவையான திருப்பதி லட்டு 1984 க்கு முன்பு விறகுகளால் இயங்கும் அடுப்புகளில் தயாரிக்கப்பட்டது. பின்னர், TTD திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு மூலம் இயக்கப்படும் அடுப்புகளை அறிமுகப்படுத்தியது. இப்போது ஆட்டோமேடிக் மெஷின்கள் வந்துவிட்டன.

சட்டென லட்டு தயார்

சட்டென லட்டு தயார்

தானிய மாவு மற்றும் பிற மூலப்பொருட்களின் கலவை நேரடியாக தானியங்கி "பூந்தி பொட்டு"க்கு அனுப்பப்படும் மற்றும் இயந்திரம் அதிக வெப்பநிலையில் சுத்தமான நெய் கொதிக்கும் பாத்திரத்தில் கலவையை இறக்கும். இயந்திரம் கொதிக்கும் நெய்யிலிருந்து பூந்தியை பிரித்து மற்றொரு இயந்திரத்திற்கு அனுப்புகிறது, அங்கு முந்திரி, ஏலக்காய், திராட்சை, சர்க்கரை மற்றும் சர்க்கரை பாகு ஆகியவை கலக்கப்படும். பின்னர் அவை யாவும் "லட்டு பொட்டு"க்கு கன்வேயர் பெல்ட்கள் மூலம் அனுப்பப்படும். அவ்வளவுதான் சுவையான லட்டு மிக்ஸ் தயார்.

லட்டு போடும் தொழிலாளர்கள், தானியங்கி இயந்திரங்களில் கிடைக்கும் கலவையில் லட்டு தயாரித்து, சம்பந்தப்பட்ட கவுன்டர்களுக்கு அனுப்புவார்கள். இதன் மூலம் பக்தர்களுக்கு கூடுதலாக சுகாதாரமான, சுவையான லட்டு பிரசாதங்களை தயாரித்து வழங்க முடியும். எது எப்படி இருந்தாலும்,திருப்பதி லட்டுக்கு மவுசு என்பது என்றுமே குறையாது மக்களே!

More News

    Read more about: tirupati andhra pradesh
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+