பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகளுடன் குறிப்பிடத்தக்க உள்கட்டமைப்பு மேம்பாடுகளை தமிழ்நாடு காண உள்ளது. குறிப்பாக வணிகப் போக்குவரத்திற்காக இணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு பெரிய எக்ஸ்பிரஸ்வே நெட்வொர்க்கின் ஒரு பகுதியாக தமிழகத்தில் பல புதிய விரைவு சாலைகள் திறக்கப்படவுள்ளன. நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த விக்கிரவாண்டி-கும்பகோணம்-தஞ்சாவூர் விரைவுச்சாலைக்கும் இப்போது விடிவுகாலம் வந்துவிட்டது!
சென்னையில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூர், விக்கிரவாண்டி
தமிழகத்தில் முக்கிய நகரங்களுக்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி சென்னையில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூர் செல்ல விக்கிரவாண்டி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட முடிவு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட்டன. ஆனால், பணிகள் எதிர்பார்த்தபடி முடிவடையாததால், விக்கிரவாண்டி, கும்பகோணம் மக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

கிடப்பில் போடப்பட்ட விக்கிரவாண்டி-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை
விக்கிரவாண்டி-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை பணிகளை 8 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ள ஒன்றிய அரசு மீது கடும் அதிருப்தி எழுந்துள்ளது. இதுவரை 47 சதவீத பணிகளை மட்டுமே முடித்துள்ள ஒப்பந்த நிறுவனம் மற்ற பணிகளை மேற்கொள்ளாததால் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. சாலை பணிகள் முழுமை அடையாததால் டெல்டா மாவட்டத்துக்கு செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மாற்று வழிகளில் நீண்ட தூரம் சுற்றிக்கொண்டு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
ரூ.3,517 கோடி நிதி ஒதுக்கீட்டில் பணிகள்
விக்கிரவாண்டி, கும்பகோணம் சாலை நீட்டப்பட்டு தஞ்சாவூர் வரையிலான 165 கிலோ மீட்டர் தூரமுள்ள சாலை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 4 வழிச்சாலையாக கடந்த 2006ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து, இந்த சாலையை 4 வழிச்சாலையாக மாற்றவும் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து 2010ம் ஆண்டில் அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு கடந்த 2015ம் ஆண்டு விக்கிரவாண்டி-தஞ்சாவூர் இடையேயுள்ள சாலையையும், வழியில் உள்ள பாலங்களையும் புதிதாக அமைக்க ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுவதாலும், நேரம் வீணாவதை கருத்தில் கொண்டும் விபத்தில்லா சாலைகளை அமைக்கும் வகையிலும் ஒன்றிய அரசு கடந்த 2017ம் ஆண்டு மேலும் ரூ.3,517 கோடி ஒதுக்கீடு செய்தது.

ஆய்வு மேற்கொண்ட நிதின்கட்கரி
இந்த நிலையில், விக்கிரவாண்டி- சோத்தியாப்தோப்பு வரையிலான சாலைப் பணிகள் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டதால், மீதமுள்ள சேத்தியாத்தோப்பு முதல் தஞ்சாவூர் வரையிலான 2-ம் மற்றும் 3-ம் கட்டப் சாலைப் பணிகளை, சமீபத்தில் மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
8 ஆண்டு கால தாமதத்திற்கு வந்த பதில்
சென்னையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி விக்கிரவாண்டி வழியாக செல்லும் சாலைக்கான கடைசி டெண்டர் விடுக்கப்பட்டு உள்ளது. 8 ஆண்டு தாமதத்திற்கு பின் இறுதி டெண்டர் விடுக்கப்பட்டு உள்ளது. இதனால் விரைவில் அங்கே பணிகள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தனை காலம் அந்த சாலையில் லேன் மாறி மாறி நீங்கள் பயணம் செய்து . இந்தியாவில் இருக்கும் மோசமான சாலைகளில் ஒன்றாக அந்த சாலை திகழ்ந்து வந்த நிலையில், தற்போது அந்த கொடூரத்திற்கு முடிவு கட்டப்பட உள்ளது.
இந்தத் திட்டங்கள் தமிழகத்தின் சாலைக் கட்டமைப்பை நவீனப்படுத்தவும், பயணத்தை வேகமாகவும் திறமையாகவும் மாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.



Click it and Unblock the Notifications






