Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பஞ்ச்குலா » ஈர்க்கும் இடங்கள் » மானசா தேவி கோவில்

மானசா தேவி கோவில், பஞ்ச்குலா

10

மானசா தேவி கோவில் இந்துக்களுக்கு மிக முக்கியமான யாத்ரீக ஸ்தலமாகும். மானசா தேவி என்றழைக்கப்படும் சக்திக்கு இந்தக் கோவில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 100 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இக்கோவில் சிவாலிக் மலைகளின் அடிவாரத்தில் உள்ளது. நாடு முழுவதிலும் இருந்து நவராத்திரியின் போது இங்கு ஏராளமான பக்தர்கள் குவிகிறார்கள்.    

மகாராஜா கோபால சிங் என்பவரால் 1811ல் துவங்கி 1815யில் கட்டப்பட்ட இக்கோவில் இமயமலை மீதான நம்பிக்கையையும், கலாச்சாரத்தையும் எடுத்துரைப்பதாக இருக்கிறது.

இமயமலை சக்தி-சிவனின் இருப்பிடமாகக் கருதப்படுகிறது.னைந்த கோவில் மட்டுமல்லாது பஞ்ச்குலாவில் உள்ள பல கோவில்களில் சக்தியை வழிபடுகின்றனர்.

இவ்விடத்தில் அகழ்வாராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட சிதையல்கள் மக்களின் பண்டைய நாகரீகத்தை எடுத்துரைக்கும் வண்ணம் இருக்கின்றன. சக்தியிசம் என்ற கலாச்சாரம் இங்கு பின்பற்றப்பட்டதாக அச்சிதையல்கள் தெரிவிக்கின்றன. இங்குள்ள மக்களிடையே நினைத்த வரங்களை வழங்கும் மானசா தேவி புகழ்பெற்று விளங்கிறது.

நவராத்ரி விழா சீரும் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. ஒன்பது நாட்களுக்குத் தொடரும் இவ்விழாவில் பங்கேற ஏராளமான பக்தர்கள் குவிகிறார்கள். ஜடாயு என்ற யாத்திரை ஹரியான அரசால் ஏற்பாடு செய்யப்படுகிறது. ஷர்டிய நவராத்திரி மேளா அஸ்வினி மற்றும் சித்திரை மாதங்களில் நடக்கிறது.

பயணிகளுக்கு தேவையான தங்குமிட வசதிகள் கோவில் காரியாலயத்தால் ஏற்பாடு செய்யப்படுகிறது. கூடாரங்கள், போர்வைகள், தற்காலிக கழிவறைகள், தற்காலிக மருத்துவமனைகள், காவல் நிலையங்கள் போன்றவையும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. பக்தர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க பல வகைகள் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தொன்மை, புராண முக்கியத்துவம் மற்றும் இங்கு குவியும் ஏராளமான பக்தர்களின் பொருட்டு ஹரியானா அரசு இக்கோவிலின் உள்கட்டமைப்பு, நிர்வாகம் ஆகியவற்றை மேம்படுத்த பெரிதும் கவனம் செலுத்துகிறது. சுற்றியுள்ள கட்டிடங்கள் மீதும் கவனம் செலுத்தப்பட்டு இவ்விடம் ஒரு புராதானச் சின்னமாக பாதுகாக்கப்படுகிறது.

முப்பத்தி எட்டு சுவர் ஓவியங்களால் அழகுபடுத்தப்பட்டுள்ள இக்கோவிலின் வளைவுகள் மற்றும் உட்கூரை ஆகியவை பூ ஓவியங்களாம் அழகுபடுத்தப்பட்டுள்ளன.

பெரிய கலைப்படைப்பாக இல்லாவிடினும் பல மையநோக்குகளை வெளிப்படுத்துவதாய் அமைந்துள்ளன. பிரதான கோவிலின் கட்டமைப்பு முகாலய கட்டிடக்கலையை ஒத்து கூம்புகள் கொண்டதாக திகழ்கிறது.  

சண்டிகாரில் இருந்து 10கிமீ தொலைவிலும், பஞ்ச்குலாவில் இருந்து 4கிமீ தொலைவிலும் இக்கோவில் உள்ளது. உள்ளூர் பேருந்துகள் மூலமும் ஆட்டோக்கள் மூலமும் பயணிக்கலாம்.

நவராத்திரி சமயங்களில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. விமான மற்றும் ரயில் மார்கமாக பயணிப்பவர்கள் சண்டிகார் இருந்து இக்கோவிலை அடையலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed