Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பஞ்ச்குலா » ஈர்க்கும் இடங்கள் » யதவிந்த்ரா தோட்டங்கள் பிஞ்சூர்

யதவிந்த்ரா தோட்டங்கள் பிஞ்சூர், பஞ்ச்குலா

18

பிஞ்சூரில் அமைந்திருக்கும் இந்த தோட்டம் பாடியாலா ஆட்சியாளர்களால்  முகலாய பாணியில் கட்டப்பட்டுள்ளது. அவுரங்கசீப் ஆட்சிக்காலத்தில் 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த தோட்டம் மஹாராஜ யதவீந்திர சிங் என்பருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

வட இந்தியாவின் பழமையான அழகான தோட்டமாக இது கருதப்படுகிறது. விளக்குகளுடன் கூடிய நீரூற்றுகளும், அறை மற்றும் உணவு விடுதி வசதியும் பயணிகளுக்கு செய்து தரப்பட்டுள்ளது.

சண்டிகரில் இருந்து 22கிமீ தொலைவில் உள்ள யதவீந்த்ரா தோட்டத்தில் பல மாடிகளும், ராஜஸ்தானி-முகாலய பாணியில் கட்டப்பட்டுள்ள அரண்மனை ஒன்றும் உள்ளது.

பிரதான நுழைவாயில் இருக்கும் முதல் மாடியில் உள்ள அரண்மனை ஷிஷ் மஹால் மற்றும் ஹவா மஹால் என்ற அரங்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.  இரண்டாவது மாடியில் ரங் மஹாலும், மூன்றாவது மாடியில் மரங்களும், மலர் படுக்கைகளும் அமைந்துள்ளன. அதற்கு அடுத்ததாக பழ தோட்டங்களும் உள்ளன.  

நீரூற்று மற்றும் ஓய்வு படுக்கைகளுடன் கூடிய ஜல் மஹால் அடுத்த மாடியிலும், அதற்கடுத்ததாக அடர்ந்த மரங்களும், நீரூற்றுகள் உள்ளது. அடுத்த மாடியான கடைசி மாடியில் வட்ட வடிவில் அமைந்த திறந்தவெளி அரங்கம் உள்ளது. பூங்காவை ஒட்டி அமைந்துள்ள வனவியல் பூங்கா இன்னொரு சிறப்பம்சம்.    

இதே வளாகத்தில் நன்கு ஒளியூட்டப்பட்டு சிறந்த பாதைகளுடன் கூடிய கோவிலும், திறந்தவெளி அருங்காட்சியகம் ஒன்றும் அமைந்துள்ளது. பாரம்பரிய ரயில் ஒன்று வளாகத்தினுள் உள்ள தோட்டங்கள் மற்றும் சின்னங்களிடையே ஓடும் வண்ணம் புதுமையாக அமைக்கப்பட்டுள்ளது.   

கக்கார் நதியின் சிறுநதிகளான கவுசல்யா மற்றும் ஜஜ்ஜார் நதிகளுக்கு அருகாமையில் இத்தோட்டம் அமைந்துள்ளது. பாண்டவர்களின் நகரமான பஞ்ச்புராவில் இருந்து இதன் பெயர் தோன்றியதால் இவ்விடத்திற்கு வரலாற்று மற்றும் மத முக்கியத்துவமும் உள்ளது. 

ஷிவாலிக் மலைகளுடன் சங்கமிக்கும் வண்ணம் அமைந்துள்ளது இதன் இயற்கை அழகிற்கு மேலும் மெருகூட்டுகிறது.

ஏப்ரல் மாதத்தில் நடக்கும் பைசாகி மற்றும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடக்கும் மாம்பழத் திருவிழா ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வண்ணம் அமைந்துள்ளன.

பிஞ்சூர் பாரம்பரிய திருவிழா ஹரியான சுற்றுலாத் துறையால் 2006ல் துவங்கப்பட்டது. யதவீந்திரா தோட்டத்தின் பிரம்மாண்டமும், பிஞ்சூர் நகரின் பாரம்பரியமும் இந்த விழாவில் பறைசாற்றப்படுகிறது. 

பிரபல கலைஞர்கள் பங்கேற்கும் கலாச்சார நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. பீமாதேவி கோவில் யதவீந்திரா தோட்டத்தின் அருகிலேயே அமைந்துள்ளது. சாலை, ரயில் மற்றும் விமானம் மூலமாக எந்த மூலையில் இருந்தும் இங்கு வரலாம்.

ஷிம்லாவிற்கு செல்லும் வழியில் உள்ள கல்கா இந்த இடத்தில் இடத்தில் இருந்து 5கிமீ தொலைவில் உள்ளது. பழங்கற்காலத்தைச் சேர்ந்த கோபுரங்களுக்காகவும் பிஞ்சூர் புகழ்பெற்று விளங்குகிறது.

10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழம்பொருட்கள் இங்கு நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன்அ.  ஒன்றரை கோடி வருடங்களுக்கு முன்பே இங்கு மனிதன் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
01 Apr,Wed
Return On
02 Apr,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
01 Apr,Wed
Check Out
02 Apr,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
01 Apr,Wed
Return On
02 Apr,Thu