Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பானிபட் » ஈர்க்கும் இடங்கள் » பானிபட் அருங்காட்சியகம்

பானிபட் அருங்காட்சியகம், பானிபட்

27

ஹரியானா அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட பானிபட் போர் நினைவு சங்கம், இந்நகரத்தில் நிகழ்ந்த மூன்று பானிபட் யுத்தங்கள் மற்றும் அவை இந்திய வரலாற்றின் ஒட்டு மொத்த வரலாற்றிலும் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்த நிகழ்வுகளை காட்சிப்படுத்தியுள்ள இடமாக இந்த அருங்காட்சியகம் உள்ளது.

இங்கு நடந்த மூன்று போர்களின் விளைவுகளை பற்றிய தகவல்களை கொடுக்கும் விதமாக கலை, வரலாறு, கைவினைப் பொருட்கள் மற்றும் தொல்லியல் சான்றுகளை வைத்திருக்கும் பொருட்டாகவே இந்த மியூசியம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அருங்காட்சியகத்தில் சிற்பங்கள், பழங்கலைப் பொருட்கள், ஆயுதங்கள், மட்பாண்டங்கள், நகைகள், முக்கியமான ஆவணங்கள், ஓலைச்சுவடிகள், கலை மற்றும் கைவினைப் பொருட்கள், வரைபடங்கள், கட்டுரைகள், புகைப்படங்கள் மற்றும் தகவல் ஏடுகள் என பல்வேறு பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், முஸ்லீம் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து இம்மண்ணினைக் காப்பதற்காக உயிரைத் தியாகம் செய்த மண்ணின் மைந்தர்களின் நாட்டுப்பற்றையும், வீரத்தையும் காட்டும் விதமான பொருட்களும் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன.

சாம்ராட் ஹேம சந்திர விக்ரமாதித்யா – ஹரியானாவின் ரேவாரியைச் சேர்ந்த உள்ளூர் வீரர், ராஜஸ்தானின் பரத்பூரைச் சேர்ந்த இராஜா சுராஸ் மால், பாட்டியாலா மகாராஜா மற்றும் மராத்திய வீரர்களான சதாசிவ ராவ் பாவ், துகுஜ் சிண்டே, விஸ்வாஸ் ராவ் பேஸ்வா மற்றும் எண்ணற்ற  வீரர்களின் நினைவுகளை கொண்டுள்ள இடமாக இந்த மியூசியம் உள்ளது. பிஞ்சிஹோலின் கனால் ரெஸ்ட் ஹெளஸில் (Canal Rest House) பானிபட் மியூசியம் அமைக்கப்பட்டுள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 Mar,Wed
Check Out
12 Mar,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu