Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பானிபட் » ஈர்க்கும் இடங்கள் » பு-அலி ஷா கலந்தர் கல்லறை

பு-அலி ஷா கலந்தர் கல்லறை, பானிபட்

27

ஷையாக் ஷா புத்தீன் என்ற பெயரையுடைய பு-அலி ஷா கலந்தர் என்பவரின் நினைவாகவே பு-அலி ஷா கலந்தர் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. இவருடைய தந்தை ஷையாக் பக்தார் உத்தீன் அந்த காலத்தில் மிகப்பெரிய துறவியாகவும், கல்வியாளராகவும் இருந்தவர் ஆவார்.

கலந்தர் என்ற வார்த்தைக்கு கடவுளின் பக்தி யை மிகவும் ஆழமாக ஊட்டிக் கொண்டுள்ளவர் மற்றும் உலக இன்பங்களை தன்னுடைய தோற்றத்திலும் கூட காட்டிக் கொள்ளாதவர் என்று அர்த்தமாகும்.

பு-அலி ஷா கலந்தர் ஒரு மிகச்சிறந்த துறவியாவார். இவர்கள் எதையும் இரந்து பெற மாட்டார்கள் ஆனால் தானாக மக்களால் அல்லது பக்தர்களால் கொடுக்கப்படுபவற்றை ஏற்றுக் கொள்வார்கள்.

கி.பி.1190-ல் பிறந்த இவர் கி.பி.1312-ல் தனது 122-வது வயதில் இறந்தார். அலாவுதீன் கில்ஜியின் புதல்வர்களான கிஸிர் கான் மற்றும் ஷாதி கான் ஆகியோர் இந்த 700 ஆண்டுகள் பழமையான கல்லறையைக் கட்டினார்கள்.

பானிபட் நகரத்தின் மையத்தில் உள்ள இவரின் நினைவாக பெயரிடப்பட்டுள்ள கலந்தர் சௌக் என்ற இடத்தில் இந்த கல்லறை அமைந்துள்ளது. புகழ் பெற்ற உருது கவிஞரான கவாஜா அல்டாப் ஹுசைன் ஹாலி பானிபட்டி-யின் கல்லறையும் இங்குதான் உள்ளது.

ஒவ்வொரு வியாழக் கிழமைகளிலும் அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களும் இந்த கல்லறைக்கு வந்து தங்களுடைய பிரார்த்தனைகளை செலுத்தி அருள் பெறுவது வழக்கம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
03 Apr,Fri
Return On
04 Apr,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
03 Apr,Fri
Check Out
04 Apr,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
03 Apr,Fri
Return On
04 Apr,Sat