திரிவேணி சங்கமம் என்ற பதம் மூன்று நதிகள் ஒன்று கூடும் இடத்தை குறிக்கிறது. இங்குதான் தக்ஷிண கங்கா அல்லது தென்னிந்தியாவின் கங்கா என்று அழைக்கப்படும் பம்பை நதி வடக்கில் மணிமாலா ஆற்றுப் பள்ளத்தாக்குடனும், தெற்கில் அச்சன்கோயில் ஆற்றுப் பள்ளத்தாக்குடனும் சங்கமமாகிறது.
இந்த வழியாக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் நீராடுவதும், இந்தப் பகுதியில் கொஞ்சம் இளைப்பாறி செல்வதும் வழக்கமாக உள்ளது. அதோடு திரிவேணி சங்கமத்தில் நீராடினால் தங்களுடைய பாவங்களுக்கு விமோச்சனம் கிடைக்கும் என்று பக்தர்கள் மத்தியில் ஒரு ஆழ்ந்த நம்பிக்கை உள்ளது.



Click it and Unblock the Notifications