Search
  • Follow NativePlanet
Share

புல்வாமா - காஷ்மீரின் அரிசிக் கிண்ணம்!

14

‘காஷ்மீரின் அரிசிக் கிண்ணம்' என்று அழைக்கப்படும் புல்வாமா மாவட்டம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அழகிய மாவட்டமாகும். 323 கிராமங்களை கொண்டு, அவந்திபோரா, ஷோபியான, புல்வாமா, ட்ரால் மற்றும் பாம்போர் என்று 5 தாலுகாக்களாக பிரிக்கப்பட்டுள்ள இந்த மாவட்டம் மாநிலத்தின் கோடைகால தலைநகர் ஸ்ரீ நகரில் இருந்து 40 கிமீ தொலைவிலேயே உள்ளது. 1979-ல் மாவட்ட அந்தஸ்து பெற்ற புல்வாமா, முந்தைய காலங்களில் பன்வாங்கம் என்றும், பிறகு புல்காம் என்றும் அழைக்கப்பட்டு வந்த நகரமாகும்.

புல்வாமா மாவட்டம் கி.பி.1346 முதல் கி.பி.1586 வரையில் காஷ்மீர் சுல்தானிய ஆட்சியின் கீழ் இருந்தது. முகலாயர்கள் 16-வது நூற்றாண்டிலும், ஆப்கானியர்கள் 19-வது நூற்றாண்டிலும் இப்பகுதியை ஆட்சி செய்ய துவங்கினர். புல்வாமாவிற்கு சுற்றுப் பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் எண்ணற்ற மத மற்றும் வரலாற்று தலங்களை காண முடியும்.

இந்த மாவட்டத்தின் மிகவும் பிரபலமான வரலாற்று சுற்றுலா தலமான முகலாய சாலைக்கு பல்வேறு இடங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வர்.

அஹர்பால் நீர்வீழ்ச்சி, ஷிகர்கா, அரிபால் நாக், ஹுர்போரா மற்றும் தார்சார் மற்றும் மார்சார் ஏரிகள் இம்மாவட்டத்தை நோக்கி சுற்றுலாப் பயணிகளை படையெடுக்க வைக்கும் சுற்றுலா தலங்களாகும். குங்வாட்டன் மற்றும் நாக்பெரான் ஆகியவை இங்குள்ள பிற சுற்றுலா தலங்களாகும்.

பேயர் கோவில், அவந்தீஸ்வரர் கோவில், ஷா ஹம்தான் வழிபாட்டுத்தலம் மற்றும் சையது ஹாசன் மன்டாக்கி வழிபாட்டுத்தலம் ஆகியவை இங்குள்ள முக்கியமான மதத்தலங்களாகும். ஜும்மா மசூதி ஷோபியான் மற்றும் ஆசார் ஷரீஃப் பிஞ்சோரா ஆகியவை புல்வாமாவிலுள்ள பிற மதத்தலங்களாகும்.

இந்த சுற்றுலா தலத்தை முதன்மையான போக்குவரத்து சாதனங்களைக் கொண்டு எளிதில் அடைய முடியும். ஸ்ரீ நகரில் உள்ள ஷேக் உல் ஆலம் விமான நிலையம் புல்வாமாவிற்கு மிகவும் அருகிலுள்ள விமான நிலையமாகும்.

இந்த விமான நிலையம் மும்பை, ஜம்மு, புது டெல்லி மற்றும் பெங்களூரு விமான நிலையங்களுடன் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. இவ்விடத்திற்கு மிகவும் அருகிலுள்ள ஜம்மு தாவி இரயில் நிலையம் இந்தியாவின் பிற முக்கியமான பகுதிகளுடன் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது.

புல்வாமா தன்னுடைய இயற்கையழகிற்காகவும் மற்றும் சாதகமான சுற்றுச்சூழலிற்காகவும் மிகவும் புகழ் பெற்றுள்ள இடமாகும். வெப்பமான கோடைக் காலங்களையும், குளிர்ச்சியான குளிர்காலங்களையும் கொண்டிருக்கும் புல்வாமாவிற்கு ஏப்ரல் முதல் அக்டோபர் மாதங்களில் சுற்றுப் பயணம் செய்யலாம்.

புல்வாமா சிறப்பு

புல்வாமா வானிலை

சிறந்த காலநிலை புல்வாமா

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது புல்வாமா

  • சாலை வழியாக
    ஸ்ரீ நகரில் இருந்து புல்வாமா செல்வதற்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சுற்றுலாப் பயணிகள் அருகிலுள்ள இடங்களான ஜம்மு, சண்டிகர், லே, பாஹல்கம் மற்றும் டெல்லியிலிருந்து ஸ்ரீ நகருக்கு பேருந்துகளில் வர முடியும். மேலும் ஜம்மு காஷ்மீர் சாலைப் போக்குவரத்துக் கழகமும் (J&KSRTC) ஜம்முவிலிருந்தும், ஸ்ரீ நகரிலிருந்தும் புல்வாமா வசதியான பேருந்துகளை இயக்கி வருகிறது.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    புல்வாமாவில் இருந்து 281 கிமீ தொலைவில் இருக்கும் ஜம்மு தாவி சந்திப்பு தான் மிகவும் அருகில் உள்ள இரயில் நிலையமாகும். இந்த இரயில் நிலையம் பிற இந்திய நகரங்களான பெங்களூரு, டெல்லி, திருவனந்தபுரம் மற்றும் சென்னையுடன் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. ஜம்மு தாவி இரயில் நிலையத்திற்கு வெளியிலேயே சுற்றுலாப் பயணிகள் டாக்ஸிகளை அமர்த்திக் கொண்டு விட முடியும்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    ஸ்ரீ நகரில் உள்ள ஷேக் உர் ஆலம் விமான நிலையம் புல்வாமவிற்கு மிகவும் அருகிலுள்ள விமான நிலையமாகும். இந்தியாவின் முதன்மையான நகரங்களான டெல்லி, மும்பை, சண்டிகர் மற்றும் சிம்லாவுடன் இந்த விமான நிலையம் நல்ல தொடர்பிலுள்ளது. இவ்விமான நிலையத்திற்கு வெளியிலேயே சுற்றுலாப் பயணிகள் டாக்ஸிகளை அமர்த்திக் கொண்டு விட முடியும். 876 கிமீ தொலைவில் இருக்கும் புது டெல்லியின் இந்திரா காந்தி விமான நிலையம் புல்வாமாவிற்கு அருகிலுள்ள சர்வதேச விமான நிலையமாகும்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 Mar,Wed
Check Out
12 Mar,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu