ஆர்யபட்டா சைன்ஸ் அன்ட் டெக்னாலஜி சொசைட்டி எனப்படும் இந்த அறிவியல் தொழில்நுட்ப கழகம் 2006ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி ராஜமுந்திரி நகரத்தில் திறக்கப்பட்டது.
ஹவுசிங் போர்ட் காலனியின் உள்ள இந்த மையத்திற்கு மிகச்சுலபமாக சென்றடையலாம். இங்கு பல அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் கருவிகளின் தத்ரூப மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் 36 அடி நீளம் கொண்ட ஒரு கான்கிரிட் விமான வடிவமைப்பு குறிப்பிடத்தக்கது. இங்கு சிறுவர்களுக்காக ஒரு கோளரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது. இவை தவிர பல கடல் உயிரினங்கள் மற்றும் ஊர்வன விலங்குகளின் பதப்படுத்தப்பட்ட உருவங்களும் இங்கு பார்வையாளர்களுக்காக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த அறிவியல் காட்சியகத்துக்கு மாணவர்கள், பொதுமக்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் என்று பல தரப்பினரும் விரும்பி விஜயம் செய்கின்றனர்.



Click it and Unblock the Notifications