இந்த இஸ்க்கான் (ISKCON) கோயில் முக்கிய ஆன்மீக வழிப்பாட்டுத்தலமாகவும் பொழுதுபோக்குத்தலமாகவும் ராஜமுந்திரி நகரத்தில் பிரசித்தமாக அறியப்படுகிறது. கௌதமி காட் என்ற பெயரிலும் இது அழைக்கப்படுகிறது.
இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோயில் நாட்டிலுள்ள இஸ்க்கான் கோயில்களிலேயே இரண்டாவது பெரிய கோயில் எனும் புகழைப்பெற்றுள்ளது. முதல் பெரிய இஸ்க்கான் (ISKCON) கோயில்
பெங்களூர் நகரத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இஸ்க்கான் (ISKCON) எனப்படும் ‘இண்டர்நேஷனல் சொசைட்டி ஃபார் கிருஷ்ணா கான்சியஸ்னஸ்’ எனும் பிரசித்தமான ஆன்மீக அறக்கட்டளை அமைப்பானது கோதாவரி ஆற்றின் கரையிலேயே இந்த கோயிலை கட்டியுள்ளது.
ஸ்ரீ சைதயன்ய குருவும் ராமானந்த ராயா எனும் யோகியும் இங்கு சந்தித்து உரையாடியதன் நினைவாக இந்த மடாலயம் ‘ராமானந்த ராய கௌடியா மடம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
வரலாற்றுக்குறிப்புகளின்படி ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மஹாபிரபு எனும் யோகி இந்த ஸ்தலத்தில் 500 ஆண்டுகளுக்கு முன்னர் கிருஷ்ண பஹவானின் அவதாரமாகவே வணங்கப்பட்டுள்ளார் என்பதாக சொல்லப்படுகிறது.



Click it and Unblock the Notifications