பெல்லிங் மற்றும் காங்டாக் இடையே அமைந்துள்ள ஓர் அழகிய சுற்றுலாத் தலம்தான் ரவங்க்லா. உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகளால் அடிக்கடி பார்வையிடப்படும் இவ்விடம் தென் சிக்கிம் பகுதியில் மிகவும் பிரபலம். இது கடல் மட்டத்தில் இருந்து 7000 அடி உயரத்தில் உள்ளது. இஞ்சி மற்றும் பெரிய ஏலக்காய் போன்றவற்றை கொண்டு விவசாயம் செய்யும் ஒரு சிறிய வர்த்தக சந்தையாக இருந்த இவ்விடம் சமீபத்தில் வர்த்தக மற்றும் வியாபாரத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது.
மலைகள் வழியில் சிறிய டர்க்ஸ் மூலம் பயணிக்க ரவங்க்லா உதவுகின்றது. அடர்ந்த காடுகள் மற்றும் மலைகள் சூழப்பட்டுள்ள அழகிய இடமான ரவங்க்லாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பதற்கென இடம் பெயர்ந்து வரும் பறவைகள், மவுண்ட் சிகரங்கள், கன்செஞ்ஜங்கா, பாண்டிம் மற்றும் சினியல்சு போன்ற சிகரங்களும் உள்ளன.
ரவங்க்லாவைச் சுற்றி அழகுற அமைந்துள்ள லெப்சா, யன்காங், தின்கிதம்,கியுசிங்,பார்பஃங், பக்கிம், பூட்டியா போன்ற கிராமங்களையும் சுற்றுலா வருவோர் ரசித்து மகிழலாம்.
கலாச்சாரம் மற்றும் திருவிழாக்கள்
பண்பாட்டிற்கும் திருவிழாக்களுக்கும் ரவங்க்லா பெயர்போனது என்றே சொல்லலாம். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் இங்கு உள்ள உள்ளூர்வாசிகள் சுற்றுலா, கைவினை மற்றும் கலாச்சாரம் சார்ந்த விழாக்களைக் கொண்டாடுகிறார்கள்.
மற்றொரு விழாவான பாங்லஹாப்சோல் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இங்கு கொண்டாடப்படுகிறது. மூன்று நாட்களுக்கு நடத்தப்படும் இந்த நீண்ட விழாவின் கடைசி நாளன்று 'சாம்' நடன நிகழ்ச்சியுடன் விழா முடிவடைகிறது.
சுற்றுலாத் தலங்கள்
இயற்கை அழகை அனுபவிக்க ஆசைப்படுபவர்களுக்கு அடர்ந்த காடுகள் மலைகள் மற்றும் அழகான தேயிலைத் தோட்டங்களைக் கொண்ட ரவங்க்லா ஒரு சொர்க்க பூமி. நகர வாழ்க்கையின் நெரிசலில் இருந்து தப்பித்து கிராமப்புர மண்வாசனையை அனுபவிக்க இவ்விடம் ஏதுவானதாக இருக்கும்.
போரோங், ராலாங், ஹாட் ஸ்பிரிங், புத்தர் பார்க், தெமி தேயிலை தோட்டம், கியுசிங் கிராமம் போன்ற இடங்கள் இங்கு ரசிக்கக் கூடியதாக இருக்கின்றது.



Click it and Unblock the Notifications