1967ல் உருவாக்கப்பட்ட இந்த ஆசிரமம் முனி-கே-ரெடி அருகில் அமைந்துள்ளது. லக்ஷ்மண ஜுலாவிற்கும், சிவானந்தா நகருக்கும் அருகில் இருக்கும் இந்த ஆசிரமம் கங்கைக் கரையில் அமைந்துள்ளது.
புகழ்பெற்ற இந்து சந்நியாசியும், தத்துவஞானியும், எழுத்தாளருமான எச்.டி.பரமஹம்ச ஓம்கிரானந்த சரஸ்வதி அவர்களால் இந்த ஆசிரமம் அமைக்கப்பெற்றது. ஓம்கிரானந்தாவின் ஆசிரமங்கள் அனைத்தும் கோவில் வடிவில் உள்ளதால் பக்தர்கள் இங்கு பஜனை பாடுவதிலும், வழிபாடு செய்வதிலும் ஈடுபடுகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் இங்கு யோகா, யக்னா மற்றும் தியான வகுப்புகளும் நடைபெறுகின்றன. ஓம்கிரானந்தா தர்ம சம்ஸ்தான், ஓம்கிரானந்தா தொண்டு அறக்கட்டளை, ஓம்கிரானந்தா கல்வி அறக்கட்டளை ஆகிய தொண்டு நிறுவனங்களும் இந்த ஆசிரமத்தால் நடத்தப்படுகின்றன.
சமூக, ஆன்மீக, கலாச்சார, கல்வி வளர்ச்சி ஆகிய பணிகளில் இந்த ஆசிரமம் ஈடுபட்டுள்ளது. ஆசிரமத்தின் உள்ளே அமைந்திருக்கும் பள்ளியில் கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம் ஆகியவை பொதுமக்களுக்கு கற்றுத் தரப்படுகிறது.



Click it and Unblock the Notifications