புனிதப் பயணம் வரும் பக்தர்கள் தங்குவதற்காக 1000 அறைகளுக்கு மேல் இருக்கும் பார்மாத் நிகேதன் ஆசிரமம் ரிஷிகேஷில் இருக்கும் பெரிய ஆசிரமங்களில் ஒன்றாகும். தங்குமிடம் மட்டுமல்லாது ஆயுர்வேத மருத்துவம், இசை மருத்துவம் ஆகிய சேவைகளும் இங்கே அளிக்கப்படுகிறது.
இமயமலை அடிவாரத்தில் கங்கை நதிக்கரையில் அமைந்திருக்கும் இந்த ஆசிரமம் 1942ல் பூஜ்ய ஸ்வாமி ஷுக்தேவானந்தாஜி மஹாராஜா என்பரால் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் சர்வதேச யோகா திருவிழா நடக்கும் சமயங்களில் இந்த ஆசிரமம் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழிகிறது.
யோகா மற்றும் தியானம் பயில்வதற்காக இந்த ஆசிரமத்திற்கு ஏராளமான மக்கள் வருகை தருகிறார்கள். மேலும் கட்டிடத்தின் அருகிலேயே ஆசிரமத்தால் நிர்வகிக்கப்படும் பள்ளியும் இருக்கிறது.



Click it and Unblock the Notifications