கங்கை ஆற்றின் மேற்கு கரையில் அமைந்திருக்கும் ஸ்வர்க ஆசிரமம் ரிஷிகேஷில் இருந்து 5கிமீ தொலைவில் உள்ளது. கலி காம்லி வாலா என பெரும்பாலானவர்களால் அழைக்கப்படும் விஷுதானந்த் என்ற இந்துத் துறவியை பெருமைப்படுத்தும் வண்ணம் இந்த ஆசிரமம் அமைக்கப்பட்டுள்ளது.
வளாகத்தின் உள்ளே கடைகள், ஆயுர்வேத மருந்தகங்கள், நூலகங்கள், தியான மண்டபங்கள், பூங்காக்கள், உணவகங்கள், தேநீரகங்கள் ஆகியவற்றுடன் ஏராளமான சிறிய ஆசிரமங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் பயணிகளுக்கு யோகா மற்றும் ஆயுர்வேத மருத்துவமும் கற்றுத்தரப்படுகிறது. கங்கை நதியின் மேல் எழுப்பப்பட்டிருக்கும் ராம் ஜூம்லா பாலத்தின் வழியாக ஸ்வர்க ஆசிரமத்தை அடையலாம். ஆசிரமத்தின் உள்ளேயே கோவில்கள், குகைகள், மாணவர்களுக்காக வீடுகளும் அமைக்கப்பட்டுள்ளன.



Click it and Unblock the Notifications