கங்கை ஆற்றின் கரையில் இருக்கும் வஷிஷ்ட குஹா ரிஷிகேஷில் இருந்து 16கிமீ தொலைவில் அமைந்துள்ளது. ஏராளமான குலார் மரங்கள் என அழைக்கப்படும் ஃபிகஸ் மரங்களுக்கு மத்தியில் அமைந்திருப்பதால் இவ்விடம் தியானத்திற்கு ஏற்றதாக கருதப்படுகிறது.
இந்துக்களால் புனிதமானதாகக் கருதப்படும் சிவலிங்கம் குகைக்கு அருகில் அமைந்திருக்கிறது. 1928 முதல் 1961 வரை இவ்விடத்துக்கு வருகை தந்த ஸ்ரீஸ்வாமி புருஷோத்தமானந்தா ஜீ அவர்களின் ஆசிரமம் குகைக்கு அருகிலேயே அமைந்திருக்கிறது. ஏராளமான பயணிகள் ஆசிரமத்திற்கும் வருகை தருகிறார்கள்.
இந்தியாவில் இருக்கும் முக்கியமான வனவிலங்கு சரணாலயங்களில் ஒன்றாக கருதப்படும் இவ்விடத்தில் 315 வகைப் பறவைகளும், 23 வகை பாலூட்டிகளும் வசிக்கின்றன.
அதுமட்டுமல்லாது ஆசிய யானைகள், புலிகள், கரடிகள், ராஜ நாகம், வேங்கைகள், காட்டுப் பன்றிகள், இந்திய முயல்கள், காட்டுப் பூனைகள், காகர்கள் ஆகிய விலங்குகளும் இங்கு இருக்கின்றன. இவற்றுடன் சிறுத்தைப் புலிகள், மான்கள், குரைக்கும் மான்கள் ஆகிய விலங்குகளையும் இங்கு காணலாம்.



Click it and Unblock the Notifications