Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ரோஹ்தக் » ஈர்க்கும் இடங்கள் » ஜமா மஸ்ஜித்

ஜமா மஸ்ஜித், ரோஹ்தக்

17

பெரும்பாலான மசூதிகள் யாவுமே அவற்றை கட்டியவர்களின் பெயரால் அழைக்கப்படுவது வழக்கம். ஆனால் அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களிலும் கட்டியவர்  பெயரிலோ அல்லது இருக்கும் இடத்தின் பெயரிலோ அழைக்கப்படாத ஒரு பொது மசூதி ஒன்று இருக்கும்.

அதுவே ஜமா மசூதி என்று அறியப்படுகிறது. அப்படி ரோஹ்தக் மாவட்டத்தில் மேஹம் எனும் நகரத்தில் உள்ள உள்ள ஜமா மசூதி ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது.

இது எப்போது யாரால் கட்டப்பட்டது என்பது குறித்த குழப்பமும் உள்ளது. இந்த மசூதியில் இரண்டு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இந்த இரண்டிலும் இருவேறு மன்னர்களின் பெயர்களும் வருடமும் பொறிக்கப்பட்டிருக்கின்றன.

இங்குள்ள படிக்கட்டுகளுக்கு கீழ் காணப்படும் ஒரு கல்வெட்டில் இது ஹுமாயூன் மன்னரால் 1531ம் ஆண்டு கட்டப்பட்டது எனும் தகவல் பொறிக்கப்பட்டிருக்கிறது.

இருப்பினும், மசூதியின் தெற்கு விதான வாசல் அமைப்பில் காணப்படும் மற்றொரு கல்வெட்டில் இது ஔரங்கசீப் மன்னரால் 1667-68ம் ஆண்டில் கட்டப்பட்டது எனும் தகவல் பொறிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஔரங்கசீப் மன்னரின் ஆணைப்படி அவரது 10 வது ஆட்சி வருடத்தில் க்வாஜா ரஹ்மத் உல்லா என்பவர் இதனை நிர்மாணித்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.

மற்றொரு வேறுபட்ட கணிப்பாக, இந்த மசூதி ஹுமாயுன் காலத்திற்கு முன்பிருந்தே இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. தற்போது இந்த மசூதி ஒரு குருத்வாராவாக மாற்றப்பட்டு தினமும் பிரார்த்தனைகள் நடைபெறும் வழிபாட்டுத்தலமாக பயன்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 May,Sat
Return On
31 May,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 May,Sat
Check Out
31 May,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 May,Sat
Return On
31 May,Sun