Search
  • Follow NativePlanet
Share

சஹரன்பூர் - குடிசை தொழில்களின் மையம்!

17

இந்தியாவில் இருக்கும் உத்திரப்பிரதேச மாநிலத்தில் பல அருமையான சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன. அவற்றில் ஒரு முக்கியச் சுற்றுலாத் தலமாக சஹரன்பூர் அறியப்படுகிறது.

சஹரன்பூர், வீட்டு உபயோகப் பொருள்களைத் தயாரிக்கும் ஏராளமான நிறுவனங்களுக்கும் மற்றும் மர வேலைப்பாடுகளுக்கும் பிரசித்தி பெற்றது. அதே நேரத்தில் மாம்பழம் மற்றும் பாசுமதி அரிசிக்கும் இந்த நகரம் முக்கிய இடமாக விளங்குகிறது.

சஹரன்பூர் நகரம் மிகச் சிறந்த வரலாற்றுச் சிறப்பைக் கொண்டது. மேலும் இந்த நகரம் ஏராளமான அரசர்களின் எழுச்சிக்கும் மற்றும் வீழ்ச்சிக்கும் அடையாளமாகவும் விளங்குகிறது.திகழ்ந்து வருகிறது.

சஹரன்பூரைச் சுற்றியுள்ள முக்கியச் சுற்றுலாத் தலங்கள்

சஹரன்பூர் நகரத்தில் பிரசித்தி பெற்ற பழம்பெரும் இந்து சமய ஆலயங்கள் பல உள்ளன. அவற்றில் மிகவும் முக்கியமானவையாக சக்கும்பரி தேவி ஆலயம் மற்றும் தியோபான்ட் பகுதியில் இருக்கும் சக்தி பீதாஸ் என்று அழைக்கப்படும் பால சுந்தரி ஆலயமும் விளங்குகின்றன.

இந்த ஆலயங்களை தரிசித்து இறைவனின் ஆசீரைப் பெறுவதற்காக, வருடம் முழுவதும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவற்றைத் தவிர்த்து இங்கு அமைந்திருக்கும் நவ்கஜா பீர் என்ற ஆலயத்திலும் கனிசமான அளவில் பக்தர்கள் கூட்டத்தை பார்க்கலாம்.

கோயில்கள் மட்டும் அல்லாமல், காலணி ஆதிக்கத்தில் கட்டப்பட்ட பல கட்டிடங்கள் சஹரன்பூரில் இன்னும் கம்பீரமாக எழுந்து நிற்கின்றன. ஆங்கில கிழக்கிந்திய நிறுவனத்தால் அமைக்கப்பட்ட பொட்டானிக்கல் பூங்கா சஹரன்பூரை மிக சிறப்பாக அலங்கரிக்கிறது.

அதோடு பொட்டானிக்கல் ஆராய்ச்சி மையமாகவும் சஹரன்பூர் விளங்குகிறது. மேலும் இங்கு அமைந்திருக்கும் அம்பேத்கர் பூங்காவும் சுற்றுலாப் பயணிகளின் மனதிற்கு நிம்மதி மற்றும் புத்துணர்ச்சியை வழங்கும்.

சஹரன்பூருக்கு செல்ல போக்குவரத்து வசதி

விமானம், தொடர்வண்டி அல்லது பேருந்து மூலமாக சஹரன்பூரை மிக எளிதாகச் சென்றடையலாம். சஹரன்பூருக்கு மிக அருகில் டேராடூன் விமான நிலையம் அமைந்திருக்கிறது.

சஹரன்பூருக்குச் செல்ல ஏற்ற காலம்

சஹரன்பூருக்குச் செல்ல ஏற்ற காலம் நவம்பர் முதல் ஏப்ரல் வரை ஆகும்.

சஹரன்பூர் சிறப்பு

சஹரன்பூர் வானிலை

சிறந்த காலநிலை சஹரன்பூர்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது சஹரன்பூர்

  • சாலை வழியாக
    சஹரன்பூருக்கு ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எனவே பேருந்துகள் மூலம் சஹரன்பூருக்கு மிக எளிதாகச் செல்லலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    சஹரன்பூரில் ஒரு பெரிய தொடர்வண்டி நிலையம் அமைந்திருக்கிறது. கான்பூர், ஜம்மு தவி, ஹவ்ரா, அமரிட்சர், உஜ்ஜன், சென்னை, டெராடுன் மற்றும் ஹரித்வார் போன்ற இடங்களிலிருந்து சஹரன்பூருக்கு அடிக்கடி தொடர்வண்டிகள் இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    சஹரன்பூருக்கு விமானத்தின் மூலம் செல்ல வேண்டும் என்றால், சஹரன்பூருக்கு அருகில் டேராடூனில் அமைந்திருக்கும் ஜாலி விமான நிலையம் அமைந்திருக்கிறது. இந்த விமான நிலையத்தில் இறங்கி, பேருந்து மூலமாகவோ அல்லது வாடகை டாக்ஸி மூலமாகவோ ஒரு மணி நேரத்தில் சரன்பூருக்கு செல்ல முடியும்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed