சாங்க்லாவின் மலைகள் முழுவதும் பாய்ந்து செல்லும் பாஸ்பா நதி பிரபலமானதாக மட்டுமில்லாமல், முக்கியமான நீராதாரமாகவும் திகழ்ந்து வருகிறது. இந்த நதியில் ப்ரவுண் ட்ரவுட் மற்றும் வானவில் ட்ரவுட் ஆகிய மீன்கள் காணப்படுவதால் தூண்டில் கொண்டு மீன் பிடிக்கிறவர்களுக்கு மிகவும் வசதியான மற்றும் ஏற்ற இடமாக கருதப்படுகிறது.
இந்நதியின் குறுக்காக உல்லாசமாக பரிசல் பயணம் செல்வதை பயணிகள் வெகுவாக விரும்புகின்றனர். அதோடு டிரெக்கிங் பிரியர்களுக்கும், முகாமிடுபவர்களுக்கும் இந்தப் பகுதி சிறப்பான அனுபவத்தை கொடுக்கிறது.
மேலும் இந்த நதியை சுற்றி காணப்படும் தேவதாரு மரங்கள் மற்றும் கருவாலி காடுகள் இயற்கை ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.



Click it and Unblock the Notifications