சங்க்ரூர் நகரில் இருந்து 19 கி.மீ. தொலைவில் உள்ள சுணம் என்ற சிறிய நகரத்தில் உள்ளது குருத்வாரா பட்ஷஹி பேலி. சமயஞ்சார்ந்த இந்த கம்பீரமான கட்டிடம் முதல் சீக்கிய குருவான ஸ்ரீ குரு நானக் தேவ் ஜி அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக கட்டப்பட்டதாகும்.
மால்வாவிற்கு செல்லும் போது குருஜி சிர்ஹிந்த் என்ற ஓடைக்கு அருகில் தங்கினார். அதன் பிறகு அவருடைய சீடர் ஒருவரின் வீட்டிற்கு சென்றார். அந்த இடத்தில் தான் இந்த குருத்வாரா கட்டப்பட்டுள்ளது.
1919-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த இடம் 1966-ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. இங்கே செவ்வக வடிவில் ஒரு அறையும், ஒரு அரங்கமும், ஒரு தாழ்வாரமும், செங்க கற்களால் ஆன ஒரு முற்றம் மற்றும் குவிமாட கோபுரமும் உள்ளது. நாம் நினைத்த அனைத்துமே இங்கே வந்தால் நடைபெறும் என்று நம்பப்படுகிறது.



Click it and Unblock the Notifications