Search
  • Follow NativePlanet
Share

ஷில்லாங் - கிழக்கின் ஸ்காட்லாந்து!

49

கிழக்குலகின் ஸ்காட்லாந்து என அழைக்கப்படும் ஷிலாங்க் வடகிழக்கு மாகாணங்களின் புகழ்பெற்ற சுற்றுலாதளமாகும். பச்சைப்பசேலென்ற புல்வெளிகள், மலை உச்சிகளைத் தழுவும் மேகங்கள், மகரந்தம் வீசும் மலர்கள், இனிமையாகப் பழகும் மக்கள் என அழகாய் தோன்றும் ஷிலாங்கின் பரபரப்பான நகரவாழ்க்கையும் சேர்த்து நமக்கு மறக்கமுடியாத சுற்றுலா உணர்வை அளிக்கிறது.

ஷில்லாங் அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்

ஏராளமான நீர்வீழ்ச்சிகளையும் அழகான மலை உச்சிகளையும் தன்னகத்தே கொண்டிருக்கும் ஷிலாங் மிகுந்த எழிலுடன் விளங்குகிறது. எலிஃபண்ட் நீர்வீழ்ச்சி, ஸ்வீட் நீர்வீழ்ச்சி, ஷில்லாங் மலைச்சிகரம், லேடி ஹைதரி பூங்கா, வார்ஸ் ஏரி, போலீஸ் பஜார் ஆகியவை முக்கியமான சுற்றுலாத் தளங்களாகும். டான் பாஸ்கோ மையம் என்ற அருங்காட்சிகமும் முக்கியமான இடமாகக் கருதப்படுகிறது.  

காசிஸ் -ஷிலாங்கின் ஆதிவாசிகள்

காசிஸ், ஜைன்டைஸ், கரோஸ் ஆகிய ஆதிவாசிகள் மேகலயா மாநிலத்தின் முக்கியமான மூன்று பூர்வகுடிகள் ஆவார்கள். காசிஸ் மலைப்பகுதியில் இருக்கும் ஷில்லாங்கில் காசிஸ் இன மக்களே பெரும்பான்மையாக வசிக்கிறார்கள்.

இந்தியாவில் மிகவும் அரிதான தாய்வழி உறவுமுறையின்படி வாழும் அம்மக்கள் பெண்குழந்தை பிறப்பதை விசேஷமாக கருதுகிறார்கள். மாப்பிள்ளை பெண் வீட்டுடனே தங்கும் பழக்கமும் இங்கு உள்ளது. திருமணம் போன்ற சடங்குகளில் தாய்மாமனே முக்கியஸ்தராக கருதப்படுகிறார்.

ஷில்லாங்கில் நிலவும் ஆங்கிலேய தாக்கம்

அந்தக்காலத்தைய பிரிக்கப்படா அசாமின் தலைநகராக ஷில்லாங் விளங்கியது. அதன் குளிர்ந்த வானிலையாலும், வங்காளத்திற்கு அருகாமையில் இருப்பதால் ஆங்கிலேயர்கள் இந்நகரை நிர்வாக தலைமையிடமாக உபயோகித்தார்கள்.

மூன்று கிராமங்கள் மட்டுமே இருந்த ஷில்லாங் பகுதியை ஆங்கிலேயர்கள் பலவழிகளில் முன்னேற்றினார்கள். பல மிஷனரிகள் இங்கே வந்தன. சிரபுஞ்சியின் வழியாக வந்த வெல்ஷ் மிஷனரி, ஷில்லாங்கின் வளர்ச்சியில் முக்கியப்பங்கு வகித்துள்ளது.

ஐரிஷ் மிஷனரி இங்கு செயிண்ட் எட்மண்ட்ஸ் பள்ளி, செயிண்ட் அந்தோணி, செயிண்ட் மேரி ஆகிய பள்ளிகளை உருவாக்கினார்கள். ஆங்கிலேயர்களும் தங்கள் பங்கிற்கு பைன் மவுண்ட் பள்ளி என்ற அரசுப் பள்ளியையும் இங்கு கட்டினார்கள்.   

ஷில்லாங்கில் வசிக்கும் வங்காளிகள்

சைஹ்லெட் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான வங்காளிகள் இங்கு வசிக்கிறார்கள். ஆங்கிலேயர் காலத்தில் அலுவல் பணிக்காக இங்கே வந்த பல வங்காளிகளுக்கு அடிப்படை வசதிகளை அரசே ஏற்படுத்திக் கொடுத்திருந்தது.

பாபுஸ் என்றழைக்கப்படும் வங்காளிகள் இப்பகுதியின் வளர்ச்சியில் பெரும்பங்கு ஆற்றியிருக்கிறார்கள். நடுத்தர வர்க்க வங்காளிகளுக்காக பல பள்ளிகளை இங்கே உருவாக்கியிருக்கிறார்கள்.

ஷில்லாங் செல்லா சிறந்த பருவம்

குளிர் மற்றும் மழைக்காலத்திற்கு அடுத்து வரும் மாதங்களான மார்ச் முதல் ஏப்ரல் வரையிலும், செப்டம்பர் முதல் அக்டோபர் வரையிலும் ஷில்லாங் பயணிக்கலாம்.

ஷில்லாங் பயணிக்கும் வழி

நாட்டின் பிற பகுதிகளுடன் பல வழிகளில் இணைக்கப்பட்டுள்ள ஷில்லாங் நகருக்கு தேசிய நெடுஞ்சாலை எண் 40ன் வழியாக செல்லலாம். கெளஹாத்தி யில் இருந்து இந்த நெடுஞ்சாலை வழியாக ஷில்லாங் செல்லலாம். ஷில்லாங்கில் இருந்து 30கிமீ தொலைவில் உள்ள அதன் விமான நிலையம் தற்சமயம் இயங்கவில்லை.

ஷில்லாங் வானிலை

குளிர்ந்த, மிதமான வானிலையே வருடம் முழுவது நிலவுவதால் சுற்றுலாப்பயணிகள் பெரிதும் விரும்புகிறார்கள். குளிர்காலத்தில் குளிர் அதிகமாகவும், வெயில் காலங்களில் மிதமான வானிலையும் நிலவுகிறது. மழைக்காலத்தில் மஐயின் அளவு மிகவும் அதிகமாக உள்ளது.  

ஷில்லாங் சிறப்பு

ஷில்லாங் வானிலை

சிறந்த காலநிலை ஷில்லாங்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது ஷில்லாங்

  • சாலை வழியாக
    தேசிய நெடுஞ்சாலை எண் 40ன் வழியாக கெளஹாத்தியில் இருந்தும், 44ன் வழியாக சில்சாரில் இருந்து ஷில்லாங் செல்லலாம். தேசிய நெடுஞ்சாலை எண் 40 அசாமின் தென்பகுதிக்கும், மணிப்பூர், திரிபுரா ஆகிய இடங்களுக்கும் மிக முக்கியமான சாலைகளாகத் திகழ்கின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    மேகாலயாவில் ரயில் வசதிகள் இல்லாததால் 100கிமீ தொலைவில் உள்ள கெளஹாத்தி ரயில்நிலையத்தையே பயன்படுத்த வேண்டும். நாட்டின் பல பகுதிகளில் இருந்து இங்கு தினமும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    ஷில்லாங்கில் இருந்து 30கிமீ தொலைவில் உம்ரொய் நகரில் உள்ள விமான நிலையம் தற்சமயம் இயங்கவில்லை. எனினும் 117கிமீ தொலைவில் உள்ள கெளஹாத்தி விமானநிலையத்தில் இருந்து ஷில்லாங் செல்லலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 Mar,Wed
Check Out
12 Mar,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu