நகர மையப்பகுதியான ரிட்ஜிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள க்லென் பார்வையாளர்களை வசீகரிக்கும் சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும். களகள வென ஓசையுடன் 1830 மீட்டர் உயரத்தில் இருந்து விழும் சாட்விக் நீரோடை இந்த இடத்தை கடந்து செல்கிறது.
இத்தலம் தேவதாரு மற்றும் பைன் மரங்களால் சூழப்பட்டுள்ளது. செசில் ஹோட்டல் மற்றும் கென்னெடி ஹவுஸ் போன்ற இருவேறு வழிகள் மூலம் இவ்விடத்தை அடையலாம். ஸ்காண்டல் பாயிண்டிலிருந்து இங்கு வர வாடகை ஊர்திகள் கிடைக்கும் மேலும் கால்நடையாகவும் இவ்விடத்தை அடைய முடியும்.



Click it and Unblock the Notifications