ஒவ்வொரு ஆண்டும் மே மற்றும் ஜூன் மாதங்களில் சிம்லாவின் கோடைத்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து கலாச்சாரங்களின் மையமாக விளங்கும் சிம்லாவின் ரிட்ஜில் இந்த வண்ண மயமான திருவிழா ஏற்பாடு செய்யப்படுகிறது. மிகவும் ஆடம்பரமாக கொண்டாடப்படும் இந்த திருவிழா சிம்லாவின் அணைத்து தரப்பு மக்களையும் ஈர்க்கிறது.
மிகவும் தாமதமாக தற்போது தான் குஃப்ரி மற்றும் நல்தேரா போன்ற பகுதிகளிலும் மக்கள் இந்த பண்டிகையை கொண்டாட துவங்கியுள்ளனர். இந்தத்திருவிழாவில் பாரம்பரியமாக நாட்டுபுற நடனங்களே நடத்தப்பட்டன, எனினும் இந்நாட்களில் இந்தியா முழுவதிலுமிருந்து பிரபலமானவர்கள் நடத்தும் தற்காலத்திய கலை நிகழ்ச்சிகளையும் காண முடிகிறது.
இந்தத்திருவிழாவின் போது, உள்ளூர்வாசிகள் பல்வேறு கடைகள் அமைத்து இமாச்சல பிரதேசத்தின் அற்புதமான கைவினைப் பொருட்களை காட்சிப்படுத்துகின்றனர். இந்நேரத்தில் சிம்லாவின் வெப்பநிலை குளிராக இருப்பதால், இப்பண்டிகை உலகம் முழுவதிலிருந்து திகைப்பூட்டும் எண்ணிக்கையிலான சுற்றுலாப்பயணிகளை கவர்கிறது.



Click it and Unblock the Notifications