சிர்சிக்கு வரும் பயணிகள் கண்டிப்பாக 1886-ஆம் ஆண்டு கட்டப்பட்ட கோபாலகிருஷ்ணர் ஆலயத்துக்கு செல்ல வேண்டும். இது மஹா கணபதி கோயிலுக்கும், மாரிகம்பா கோயிலுக்கும் அருகில் அமைந்துள்ளது. எனவே இந்தக் கோயில்களுக்கு வரும் பயணிகள் கோபாலகிருஷ்ணர் ஆலயத்துக்கும் சென்று வழிபடுவது சிறப்பானது.
இங்கு வியாழக்கிழமை தோறும் பிரஸ்ன சேவா என்ற பெயரில் விட்டலாச்சாரியாவின் சீடர்கள், பக்தர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பர்.
இந்தக் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி, செப்டம்பர் மாதம் நடைபெறும் அனந்த் விரத அர்ச்சன பூஜை, வைசாக சுக்ல சப்தமியில் நடைபெறும் ஜெயந்தி திருவிழா மற்றும் கோபல்கலா பத்ரபதா சுக்ல திரயோதசி போன்ற விசேஷ நாட்களில் பக்தர்களின் கூடம் அலை மோதும்.



Click it and Unblock the Notifications