சோம்நாத்தில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள வெராவல், மீன்பிடிப்புத் தொழிலுக்கு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு வருவோர், கைவினைக் கலைஞர்கள் பாரம்பரிய முறைகளை பயன்படுத்தி படகுகள் செய்வதையும், ட்ராலர்கள் மூலம் மீன் பிடிப்பு நடப்பதையும் கண்டு களிக்கலாம்.
இங்கு காற்றிலேயே மீன் வாசம் விரவி நிற்கின்றது; இவ்வாசம் உங்களுக்கு விரும்பத்தகாததாக இருப்பின் இங்கு செல்வதை நீங்கள் தவிர்ப்பது மேல். இது மிகச் சிறந்ததொரு கடற்கரை தொழில் மையமாகவும் விளங்குகிறது.
இங்கிருந்து ஜப்பான், ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியப் பகுதிகள், பெர்ஷிய வளைகுடா நாடுகள் மற்றும் யு.எஸ்.ஏ போன்ற நாடுகளுக்கு கடல் உணவுகள் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.



Click it and Unblock the Notifications