'என்' பியுலோங் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் புனிங் புல்வெளிகள் தெமங்லாங் மாவட்டத்தின் மற்றுமொரு பிரபலமான சுற்றுலா தலமாகும். டாமெய் நகரத்தில் உள்ள இந்த புல்வெளிகள், மேடு பள்ளமான சிறு சிறு குன்றுகள் தொடர்ச்சியாக இருக்கும் நிலப்பகுதிகளாக உள்ளன.
குறிப்பாக ஜுன் மாதத்தில் வரும் கோடைக்காலத்தில் பூத்து குலுங்கும் ஆர்கிட் மலர்களால் இந்த புல்வெளிகள் பேரழகு வாய்ந்த நிலப்பரப்பாக விரிந்திருக்கும். மேலும், காட்டு லில்லி பூக்களும் N-பியுலோங்கில் வளர்ந்து வருகின்றன.
ஹுலாக், கிப்பன், நரிகள் ஆகியவை புனிங் புல்வெளிகளில் காணப்படும் சில விலங்கினங்களாகும். வேறு எங்கும் காணக் கிடைக்காத தாவர மற்றும் விலங்கினங்களை உடைய இடம் என்று சொல்ல மிகவும் ஏற்ற இடமாக புனிங் புல்வெளிகள் உள்ளன. புனிங் புல்வெளிகளைப் போன்ற இடங்கள் தான் மணிப்பூரின் தெமங்லாங் மாவட்டத்தை சுற்றுலா தலமாக வைத்திருக்க பெரிதும் உதவுகின்றன.
கோடைக்காலம் நெருங்கிக் கொண்டிருக்கும் வசந்த காலங்களில் இந்த புல்வெளிகள் புதுமணப்பெண் போல அழகாக காணப்படும். ஆர்கிட், காட்டு லில்லி பூக்கள் மற்றும் சில வண்ணமயமான மலர்களால் இந்த மலைகள் அலங்கரிக்கப்பட்டு கற்பனைக்கெட்டாத காட்சிகளுடன் இருக்கும்.



Click it and Unblock the Notifications