தவாங் மலைநகரத்திலிருந்து 3 கி.மீ தூரத்தில் இந்த உர்ஜெல்லிங் மடாலயம் அமைந்துள்ளது. தவாங் பகுதியிலுள்ள புராதனமான மடாலயங்களில் ஒன்றாக கருதப்படும் இது 14ம் நூற்றாண்டு துவங்கி இருந்து வருவதாக நம்பப்படுகிறது.
உர்கென் சங்போ எனும் குருவால் கட்டப்பட்டதாக சொல்லப்படும் இந்த மடாலயம் அவரால் கட்டுவிக்கப்பட்ட மூன்று மடாலயங்களில் முதலாவதாக கட்டப்பட்டது என்றும் கருதப்படுகிறது.
6வது தலாய் லாமாவான ட்சங்யாங் கியாம்ட்சோ இந்த இடத்தில் 1683ம் ஆண்டு பிறந்ததாகவும் சொல்லப்படுகிறது. டெர்டன் பெர்மலிங்பா வம்சாவளியை சேர்ந்த அவர் டஷி டென்சின் லாமாவின் புதல்வர் ஆவார்.



Click it and Unblock the Notifications