மேலதிருவேங்கடநாதபுரம் திருக்கோவிலானது, மேலதிருவேங்கடநாதபுரம் என்னும் பெயருடைய அழகியதொரு சிற்றூரில் அமைந்துள்ளது. சிறிய மலையுச்சியில் கட்டப்பட்ட இக்கோவில் , திருநன்கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.
புராணக்கதைகளின்படி, மகரிஷி வியாசமுனிவரின் சீடரான பிள்ளார்* முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் தவம் இருந்தாராம். அவரது தவத்தை மெச்சி, மகாவிஷ்ணு அவர் முன் ஸ்ரீனிவாசப் பெருமாளாகத் தோன்றி அருளினாராம். பிள்ளார் முனிவரின் வேண்டுகோளின்படி, மகாவிஷ்ணுவானவர், அவ்வூரிலேயே நிரந்தரமாக தங்கி அருள சம்மதித்தாராம்.
பிள்ளார் முனிவர்தான் இக்கோவிலை கட்டக் காரணமானவர். ஆயினும் நாம் இப்போது காணும் கோவிலை கட்டியவர், ராஜா வெங்கடப்ப நாயக்கர் என்பவராவார். கோவிலுக்கு அருகில் தாமிரபரணி நதியில் காணப்படும் நீராடும் பகுதிக்கு, ஸ்ரீனிவாச தீர்த்த கட்டம் என்று பெயர்.
இங்கு கொண்டாடப்படும் மிக முக்கியமான திருவிழா, கருட சேவை ஆகும். இத்திருவிழாவானது, ஆங்கில மாதங்களான செப்டம்பருக்கும், அக்டோபருக்கும், இடையில் வரும் புரட்டாசி மாதத்தில், திருவோணம் நட்சத்திரத்தில், ஒவ்வொரு சனிக்கிழமையும் கொண்டாடப்படும். இத்திருவிழா சமயத்தில் இங்கு செல்வது சிறப்பாக இருக்கும்.



Click it and Unblock the Notifications