Search
  • Follow NativePlanet
Share
» »டிஸ்னி படத்தை நேரில் பார்த்து போல் இருக்கும் இந்தியாவில் மாயாஜாலம் காட்டும் 10 இடங்கள்

டிஸ்னி படத்தை நேரில் பார்த்து போல் இருக்கும் இந்தியாவில் மாயாஜாலம் காட்டும் 10 இடங்கள்

டிஸ்னி படங்களில் வரும் காட்சியைப் போல் உணர வைக்கும் பல அற்புத இடங்கள் நம் இந்தியாவில் உள்ளன. இந்த இடங்கள் பார்ப்பதற்கு பிரம்மிப்பாகவும், படங்களில் பார்ப்பது போன்ற உணர்வையும் தரும். அவை என்னென்ன இடங்கள், இந்தியாவில் அவை எங்கு உள்ளன என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Udaipur

உதய்பூர்

உதய்பூர், இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்திருக்கும் ஒரு அழகான நகரம். "கிழக்கின் வெனிஸ்" என்றும் "ஏரிகள் நகரம்" என்றும் அழைக்கப்படும் இந்த நகரம், அதன் பிரமாண்டமான அரண்மனைகள், ஏரிகள், மற்றும் கலாச்சாரப் பெருமைக்காக உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது.இங்குள்ள பிரம்மாண்டமான அரண்மனைகள், அலாவுதீனில் வரும் அரச அரண்மனையைப் போன்று தோற்றமளிக்கின்றன.

ஜல் மஹால்

ஜல் மஹால் அல்லது "நீரின் அரண்மனை" ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் அமைந்துள்ள ஓர் அற்புதமான கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகும்.ஜல் மஹால் ராஜபுத்திர மற்றும் முகலாய கலை வடிவங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது.இது இளவரசர் எரிக் கோட்டையை போல் தோற்றமளிப்பதால் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கிறது.

பூக்களின் பள்ளத்தாக்கு

இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள இமயமலைகளில் ஒரு அதிசயமான இயற்கைச் சிறப்பிடம்.இந்த இடம். உலகளவில் புகழ்பெற்ற யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத்தளங்களில் ஒன்று. இங்குள்ள அழகான பூக்கள் ராபன்ஸலின் கதைகளில் வரும் அழகிய ராஜ்யத்தை நினைவுபடுத்துவதாக தோன்றும்.

Chitrakot Falls

சித்ரகோட் அருவி

மாய காடுகளால் சூழப்பட்ட சித்ரகோட் அருவி சத்தீஸ்கர் மாநிலத்தின் பாஸ்டர் மாவட்டத்தில், இந்திராவதி நதியில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் நயாகரா அருவி என்று அழைக்கப்படும், நாட்டின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி ஆகும்.

ரான் ஆஃப் கட்ச்

குஜராத் மாநிலத்தின் அமைந்துள்ள ஒரு மிகப்பெரிய உப்புநிலப் பாலைவனங்களில் ஒன்றாகும்.முழுமையாக வெள்ளை நிறத்தில் பரந்திருக்கின்ற இப்பகுதி, எல்சாவின் பனி ராஜ்யத்தில் வரும் பிரமிக்க வைக்கும் வெள்ளை பனி மலைகளை போல காட்சியளிக்கிறது.

மேகாலயாவின் வாழும் வேர் பாலங்கள்

வேர்கள், பல ஆண்டுகள் வளர்ந்து வலுவான பாரம்பரிய பாலங்களாக மாற்றப்பட்டுள்ளன. இயற்கையாகவே வளர்ந்து பழமையானவையாக இருந்தாலும், இவை பசுமையாக மற்றும் அழகாக காணப்படுகின்றன.மாயாஜாலமும் இயற்கையும் இணக்கமாக பின்னிப்பிணைந்திருக்கும் மேகாலயாவில் வாழும் வேர் பாலங்கள் பார்ப்பதற்கு பிரம்மிப்பான அனுபவத்தை அளிக்கும்.

ஹம்பி

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகும். இது யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களங்களில் ஒன்றாகும்.இதன் கோயில்கள், மணிக்கட்டுகளால் ஆன கட்டிடங்கள், கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்ட சிற்பங்கள் இவை அனைத்தும்,லயன் கிங் மூவியில் வரும் பிரம்மாண்ட காட்சிகளை போல் தோற்றமளிக்கிறது.

நுப்ரா பள்ளத்தாக்கு

இது இந்தியாவின் லடாக் பகுதியில் அமைந்துள்ள மிக உயர்ந்த பாலைவன பள்ளத்தாக்குகளில் ஒன்றாக விளங்குகிறது.மலைகளால் சூழப்பட்ட நீல வானம், மணல் மேடுகள், மண் சிதறிய குன்றுகள் மற்றும் பச்சை ஆற்றங்கரைகள் இவை எல்லாம் நுப்ரா பள்ளத்தாக்கை அலாவூதினின் சாகசங்களில் வரும் ஒரு மந்திரக்காட்சியை போல் நினைக்க தோன்றும்.

லோக்தக் ஏரி

இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் அமைந்துள்ள வடகிழக்கு இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் அழகான நீர்நிலையாகும். இது உலகின் ஒரே மிதவை ஏரி என்ற சிறப்பினைப் பெற்றுள்ளது.லோக் தாக்கின் மாயாஜால பச்சை வட்டங்கள் நெதர்லாந்து போல உணர வைக்கும் ஒரு அற்புதமான நிலப்பரப்பாகும்.

சுந்தர்பன்ஸ்

சுந்தர்பன்ஸ், இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகள் பகிர்ந்துள்ள உலகின் மிகப்பெரிய மாங்கிரோவ் வனமாகும். இது யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தளமாக உள்ளது. சுந்தரி மரங்கள் மற்றும் ராயல் பெங்கால் புலிகள் கொண்டதால் இந்த இடம் புகழ்பெற்றது.

More News

    Read more about: udaipur chhattisgarh hampi
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+