» »இந்தியாவிலும் சகோதரிகள் நகரம் இருக்கு எங்கே தெரியுமா?

இந்தியாவிலும் சகோதரிகள் நகரம் இருக்கு எங்கே தெரியுமா?

Posted By: Udhaya

இந்தியா பல்வேறு நம்பிக்கைகளுக்கு கட்டுப்பட்டு பாரம்பரியம், கலாச்சாரம் போற்றி பாதுகாக்கப்படும் ஒரு நாடு ஆகும்.

இங்கு மற்ற நாடுகளைப் போலல்லாமல், உலகின் பல்வேறு பாரம்பரியங்களும் ஒன்றர கலந்து எந்த வித சிக்கல்களும் நேராமல் ஒரே தேசமாக நாம் வாழ்ந்து வருகிறோம்.

அப்படி ஒரு பாரம்பரியம்தான் சகோதரத்தும். இது அண்டை, அயலார், உற்றார் உறவினரோடு நில்லாமல், யாராகினும் அன்போடு பாசம் காட்டி பேசும் மக்கள் இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் வாழ்கின்றனர்.

அதிலும் சகோதரி பாசம் என்றால் கொஞ்சம் அதிரச் செய்துவிடுவோம் நம் அண்ணன் - தம்பிகள். ஆம் சகோதரிக்கென விழா எடுப்பது நம் நாட்டில் மட்டும்தானே. சரி அது இருக்கட்டும்.

இந்தியாவிலும் சகோதரி நகரங்கள் உள்ளன தெரியுமா? அதும் ஒன்றல்ல இரண்டல்ல.. பத்து.

டாப் 10 சகோதரி நகரங்களைப் பற்றி இங்கு காண்போம்.

அகமதாபாத் - காந்திநகர்

அகமதாபாத் - காந்திநகர்

  • குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள இந்த இரண்டு நகரங்களும் இரட்டை நகரங்களாகும்.
  • உலகத் தரம்வாய்ந்த நகரங்களான இவை இரண்டும் 24 கிமீ தொலைவில் அருகருகே அமைந்துள்ளன.
  • காந்தி நகர் பசுமை நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அகமதாபாத் வளர்ந்துவரும் நகரமாக உள்ளது.

அஹமதாபாத் - வளர்ந்து வரும் நவீனப்பெருநகரம்

காந்திநகர்- குஜராத்தின் தலைநகரம்!

en.wikipedia.org

 கட்டக் - புவனேஸ்வர்

கட்டக் - புவனேஸ்வர்

ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள இந்நகரங்கள் 28 கிமீ தொலைவில் மகாநதி ஆற்றால் பிரிக்கப்பட்டுள்ளது.

ஒடிசாவின் தலைநகரம் புவனேஸ்வர் கோயில் நகரமாகவும், பழமையான நகரமாகவும் அறியப்படுகிறது.

கட்டாக் - வரலாற்றுப் பெருமை வாய்ந்த நகரம்!

புபனேஷ்வர் - மஹோன்னத கோயிற்கலை அம்சங்கள் ஜொலிக்கும் அபூர்வ நகரம்!

Shouvik Seal

ஹைதராபாத் - செகந்தராபாத்

ஹைதராபாத் - செகந்தராபாத்


தெலங்கானா மாநிலத்தின் இரட்டை நகரங்களாக அறியப்படும் இடங்கள் ஹைதராபாத் மற்றும் செகந்தராபாத் ஆகும்.

ஒன்பது கிமீ இடைவெளியில் அமைந்துள்ள இந்நகரங்கள் பழமையான வரலாற்று சான்றுகள் பல கொண்டவையாகும்.

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத். இங்கு சார்மினார், கோல்கொண்டா கோட்டை, மெக்கா மசூதி ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

ஹைதராபாத் - நிஜாம் வம்சத்தின் ராஜரீக தடங்கள் பதிந்த மண்

செகந்தராபாத், ஹைதராபாத்

wiki commons

புனே - பிம்ப்ரி

புனே - பிம்ப்ரி

மகாராட்டிர மாநிலத்தில் அமைந்துள்ள இவை இரட்டை நகரங்களாகும்

15 கிமீ இடைவெளியில் அமைந்துள்ள இந்த இரண்டு நகரங்களும் வளர்ச்சியடைந்து வரும் நகரங்களாக பட்டியலிடப்பட்டுள்ளது.

புனே- மும்பை மாநகரத்தின் நுழைவாயில்

en.wikipedia.org

ராஜநாகங்களின் தலைநகரமா இது? எவ்வளவு பாம்பு ஆத்தாடி!

 கொல்கத்தா - ஹௌரா

கொல்கத்தா - ஹௌரா

மேற்கு வங்க மாநிலத்தில் அமைந்துள்ள இரு நகரங்கள் கொல்கத்தா மற்றும் ஹௌரா.

தலைநகர் கொல்கத்தாவுக்கும் ஹைராவுக்கும் இடையே பாலமாக இருப்பது 4 பாலங்களாகும்.

அதில் ஒன்றுதான் உலகப் புகழ் பெற்ற ஹௌரா பாலம் ஆகும்.

கொல்கத்தா - பாரம்பரிய கலாச்சாரங்களின் சங்கமம்!

en.wikipedia.org

கொச்சி - எர்ணாகுளம்

கொச்சி - எர்ணாகுளம்

அலறியடித்து ஓட்டம்பிடிக்கும் பக்தர்கள் 6 மணிக்கு மேல் கல்லாகும் மனிதர்கள் எங்கே தெரியுமா?

இந்தியாவின் மிக முக்கிய துறைமுக நகரம் கொச்சி. இது கேரள மாநிலத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ளது.

எர்ணாகுளம் நகரமும் கொச்சியும் இரட்டை நகரங்களாகும்.

இவையிரண்டும் இந்தியாவின் மிகச் சிறந்த சுற்றுலாத் தளங்கள் என்ற பெயர் பெற்றவை.

கொச்சி - பாரம்பரியமும் நவீனமும் சேர்ந்த கலவை

Basavaraj Hombli

ஹுப்ளி - தார்வாட்

ஹுப்ளி - தார்வாட்

கர்நாடக மாநிலத்தின் இரட்டை நகரங்களான ஹுப்ளி மற்றும் தார்வாட் 20 கிமீ தொலைவில் அருகருகே அமைந்துள்ளது.

கர்நாடகத்தின் அதிவேகத்தில் வளரும் நகரங்களில் ஹுப்ளியும் ஒன்றாகும்.

இங்கு சந்திரமௌலீஸ்வரர் கோயில், உங்கள் ஏரி மற்றும் ருபட்டுங்கா மலைக்குன்று உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தளங்கள் உள்ளன.

ஹுப்ளி - தென்னிந்தியாவில் ஒரு இரட்டை நகரம்

துர்க் - பிலாய்

துர்க் - பிலாய்


சட்டீஸ்கர் மாநிலத்தின் இரட்டை நகரங்கள் துர்க் மற்றும் பிலாய் ஆகும்.

துர்க் நகரத்திலிருந்து 10 கிமீ தொலைவில் பிலாய் அமைந்துள்ளது.

இது சட்டீஸ்கரின் தொழிற்நகரமாகும்.

துர்க் - யாத்ரீகர்களின் நகரம்!

en.wikipedia.org

ராஞ்சி - ஹடியா

ராஞ்சி - ஹடியா

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள இரட்டை நகரங்களாகும்.

ராஞ்சி - நீர்வீழ்ச்சி நகரம்!

ranchi.nic.in

திருநெல்வேலி - பாளையங்கோட்டை

திருநெல்வேலி - பாளையங்கோட்டை

திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை ஆகியவை இரட்டை நகரங்களாகும்.

திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி என்றாலும், பாளையங்கோட்டை தனித்து வளர்ந்த நகரம். இங்கு பெரிய காய்கறி சந்தை உள்ளது. மேலும் அரசு அருங்காட்சியகம், அறிவியல் மையம், புவியியல் ஆராய்ச்சி மையம் முதலிய பல இடங்கள் உள்ளன.

திருநெல்வேலி - திக்கெல்லாம் புகழுறும் நெல்லை!

Vashikaran Rajendrasingh

Read more about: travel