Search
  • Follow NativePlanet
Share
» »நீங்க எவ்ளோதான் பெரிய பீர் பிரியரா இருந்தாலும்... இந்த இடங்கள்ல குடிக்குற சுகம் இருக்கே!

நீங்க எவ்ளோதான் பெரிய பீர் பிரியரா இருந்தாலும்... இந்த இடங்கள்ல குடிக்குற சுகம் இருக்கே!

அன்றாடப் பிரச்சனைகளில் இருந்து சற்று விலகி, மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சியைக் கொடுக்கும் நல்ல மருந்து சுற்றுலா. அதிலும் ஐடி முதல் கல்லூரி இளைஞர்களுக்கு சுற்றுலா என்பது மிகமிக அத்யாவிசயமான ஒன்றாகிவிட்டது. நம்ம இளைஞர்கர்கள் சுற்றுலான்னு சொன்னா, சொல்லவா வேண்டும். ஒரு நாள் என்றாலும் சரி, ஒரு வாரம் என்றாலும் சரி மது இன்றி அந்த சுற்றுலா நிறைவு பெறாததுதானே.

சுற்றுலா சென்ற இடத்தில் மது அருந்தி மகிழ்வது ஒரு விதம் என்றால் மது அருந்துவதற்காகவே ஏற்ற சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வது வேற லெவல்ன்னு தாங்க சொல்லனும். சரி அப்படி பீர் குடிச்சுட்டே சுற்றிப்பார்க்க, மன நிம்மதியுடனும், புத்துணர்ச்சியுடனும் நண்பர்களிடம் நேரம் செலவிட ஏற்ற இடம் இந்தியாவுல எங்க இருக்குதுன்னு தெரியுமா ?. வாங்க, அப்படிப்பட்ட சொர்க்கத்தைப் பற்றி பார்க்கலாம்.

1. மஸ்டி கா பத்சாலா - நாகர்கர் கோட்டை

1. மஸ்டி கா பத்சாலா - நாகர்கர் கோட்டை

நாகர்கர் கோட்டை இராஜஸ்தான் மாநிலத் தலைநகரம் செய்ப்பூர் நகரத்திற்கு அருகில், ஆரவல்லி மலைத்தொடர் முனையில் அமைந்துள்ளது. ரங் டி பசந்தி படத்தில் ஒரு கட்டிடத்தின் மீது நின்று பீர் அருந்தியவாறே ஒரு நீர்குட்டையில் ஷர்மன் ஜோஷி விழுவார் நியாபகம் இருக்கிறதா ?. அந்தக் கட்டிடம் தான் நாகர்கர் கோட்டை. நீங்களும் எவ்வித கட்டுப்பாடுமின்றி ஷர்மன் ஜோஷி போல சுதந்திரமாக பீர் குடித்துவிட்டு மகிழ ஆசைப்பட்டால் இந்தக் கோட்டைக்கை ஒரு முறை சென்று வாருங்கள்.

2. லேய்ட்லும் கேன்யன்- சில்லாங்

2. லேய்ட்லும் கேன்யன்- சில்லாங்

PC : Simbu123

இந்தியாவில் உள்ள சிறிய மாநிலங்களில் ஒன்றான மேகாலயா மாநிலத்தின் தலைநகரம் சில்லாங். இது கடல் மட்டத்தில் இருந்து 1525 மீட்டர் உயரத்தில் உள்ளது. மேகக் கூட்டங்கள் உரசிச் செல்ல சில்லென்ற மலைப் பிரதேசத்தில் நண்பர்களுடன் அமர்ந்து பீர் குடிக்க விரும்புவோருக்கு சில்லாங் சூப்பர் சாய்ஸ் தான். இங்குள்ள லேய்ட்லும் கேன்யன் பள்ளத்தாக்கு பயணம் உங்களுக்கு புதுவித அனுபவத்தைக் கொடுக்கும்.

3. பனிப் பொழிவும், ஒரு பீரும்

3. பனிப் பொழிவும், ஒரு பீரும்

PC : Virdi

இந்தியாவில் மிகவும் பிரசிதிபெற்ற சுற்றுலாத் தலங்களில் மிக முக்கியமான பங்கு வகிப்பது மணாலி என நாம் அறிவோம். ஆனால், அங்கே மலைப் பிரதேசங்களின் நடுவே அமர்ந்து பீர் குடித்த அனுபவம் உங்களுக்கு உண்டா ?. நண்பர்களுடன் பீர் ஒன்றைப் பகிர்ந்து கொள்ளும் போது, அதில் கிடைக்கும் அனுபவத்தை எதுவும் வெல்ல முடியாது. பனிப்பொழிவும், பசுமையான பைன் காடுகளும், உறைய வைக்கும் காற்று, மனதைக் கொள்ளைகொள்ளும் காட்சிகள் வேறெதுக்கும் ஈடாகாது.

4. கூர்கில் ஓய்வுடன் ஒரு பாட்டில் பீர்

4. கூர்கில் ஓய்வுடன் ஒரு பாட்டில் பீர்

PC : Kmkutty

மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்கே கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு மாவட்டம் கூர்க். இம்மாவட்டத்தில் மிகவும் பிரசிதிபெற்றது காவிரி. காவிரியும் அதன் துணை ஆறுகளும் இம்மாவட்டத்தை வளப்படுத்துகின்றன. இங்குள்ள அடர்ந்த வனப்பகுதியும், கொஞ்சம் திகிலும் நிறைந்த காட்சிகளுடன் பீர் குடித்த அனுபவம் உங்களுக்கு இருக்கா.? நிசப்தமான அமைக்கு நடுவே எழும் பறவைகளின் பாடல், நீரோடையின் ராகம் கூர்க் காட்டில் நீங்கள் அருந்தும் ஒவ்வொரு ச்சிப் பீரும் சும்மா கின்னுன்னு போதையேத்தும்.

5. ஜெய்சல்மேர் பாலைவன முகாமில் ஒரு ராயல் டேல்

5. ஜெய்சல்மேர் பாலைவன முகாமில் ஒரு ராயல் டேல்

PC : Archan dave

ஜெய்சல்மேர் என்பது இராஜஸ்தான் மாநிலத்தின் "தங்க நகரம்" என்ற செல்லப் பெயர் கொண்ட நகரம் ஆகும். மஞ்சள் நிற மணற்கல் முகடுகள், கோட்டைகளால் சூழப்பட்டுள்ள இங்கு தார் பாலைவன இதயத்தில் முகாம், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மணல், கையில் குளிர்ந்த பீர் ஆகியவற்றின் அழகு... கூடுவே, உங்களுக்காக பாடல்பாடும் உள்ளூர் கலைஞர்கள்... தங்க மணல் மீது உள்ளாசமாக பொழுதைக் கழிக்க ஜெய்சல்மேரை அடித்துக்கொள்ள முடியாதுதான்.

6. ரண்தம்போர் வனப்பகுதி

6. ரண்தம்போர் வனப்பகுதி

PC : https://www.flickr.com/photos/anilr/

வட இந்தியாவில் அமைந்துள்ள பெரிய தேசியப் பூங்காக்களுள் ஒன்று ரண்தம்போர் தேசியப் பூங்கா. இது ராஜஸ்தான் மாநிலத்தில் சவாய் மாதோபூர் நகரத்தின் அருகே அமைந்துள்ளது. வனவிலங்குகள் நடமாட்டம் நிறைந்த ரண்தம்போர் வன தேசியப் பூங்காவில் முகாம் அமைத்து திகைப்பூட்டும் இரவில் நண்பர்களுடன் மதுவை பகிர்ந்து கொள்வது எவ்வளவு வேடிக்கை நிறைந்தது தெரியுமா ?. ஜில்லென்ற பீருடன் நண்பர்களுடன் மகிழ்ச்சியான தருணத்தை அனுபவிக்க விரும்புவோர் யாரும் இதை வெறுக்க மாட்டார்கள்.

7. கொஞ்சம் போதையும், திகில் கோட்டையும்

7. கொஞ்சம் போதையும், திகில் கோட்டையும்

PC : Shahnawaz Sid

அடர் இருள் சூழ, திகைப்பூட்டும் கோட்டைக்குள் சும்மா நுழைந்தாலே கொஞ்சம் டர்ர்ராகும். இதுல பீரைக் குடிச்சுட்டு ஒரு கோட்டைக்குள்ள போனா எப்படி இருக்கும். அதுலயும் நெருங்கிய நண்பர்களுடன். இந்த அனுபவம் வேணும்னு விரும்புனீர்கள் என்றார் ராஜஸ்தானில் உள்ள பங்கார் கோட்டைக்கு சென்று பாருங்கள். செம என்டர்டாயின்மென்ட் தான்...

8. ஜான்ஸ்கர் பள்ளத்தாக்கு, லடாக்

8. ஜான்ஸ்கர் பள்ளத்தாக்கு, லடாக்

PC : Ahtih

ஜனவரி முதல் பிப்ரவரி மாதங்களில் லடாக் சுற்றுப்பயணத்தில் ஜான்ஸ்கர் பள்ளத்தாக்கில் இருக்கும் போது, உங்கள் பீரை முடிந்தவரை விரைவில் முடிப்பதற்கான ஒரு தெளிவான காரணம் இருக்கும்! ஆமா, நீங்க ஜில்லுன்னு பீர் வச்சுருக்கிங்களா, இல்ல பீர் கட்டி வச்சுருக்கிங்களா ?

9. நமக்கு ஒரு பீரெல்லாம் பத்தாதுங்க

9. நமக்கு ஒரு பீரெல்லாம் பத்தாதுங்க

PC : Schwiki

நீங்கள் பீருடன் சாகசமான, கொஞ்சம் திகிலான பகுதியில் அமர்ந்து பீர் குடிக்க விரும்பினால் உங்களுக்கான இடம் ரூப்குன்ட் ஏரிதான். கடினமான மனம்படைத்தோருக்கு இந்த ஏரியில் ஒரு இரவைக் கடக்க ஒன்று அல்லது இரண்டு பீர் போதுமானது. இலகிய, பலவீனமா என்னைப் போன்ற மனம்படைத்தோருக்கு அந்த இரவைக் கடக்க குறைந்தது 5, 6 பீரு வேணுங்க...

10. மாஜூலி செல்லும் வழியில் ஒரு பீர்

10. மாஜூலி செல்லும் வழியில் ஒரு பீர்

PC : Kalai Sukanta

உலகின் மிகப்பெரிய ஆற்றுத் தீவாகத் திகழும் மாஜூலித் தீவு அசாம் மாநிலத்தில் யோர்ஹாட்டில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்குள்ள பறவைகளைக் காணவும், பழங்குடியினரின் கைவினைப் பொருட்களை வாங்கவும், தீவினைச் சுற்றிப்பார்க்கவும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இந்தியாவில் மிகவும் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான மஜூலியை சுற்றிப்பார்க்க படகு சவாரி எடுத்துக் கொள்ளுங்கள், அந்த நேரத்தில் உங்களது நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் ஒவ்வொரு பீரும் ஒவ்வொரு மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்.

11. கையில் பீரும்... கடல் பயணமும்...

11. கையில் பீரும்... கடல் பயணமும்...

PC : Axis of eran

இந்தியாவின் கர்நாடக மாநிலம் வட கன்னட மாவட்டத்தில் அமைந்துள்ள கோவில் நகரம் கோகர்ணா. இங்கு செல்லக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தால் அதுதான் உங்களது வாழ்வில் அழகிய விடுமுறைச் சுற்றுலாவாக இருக்கும். இகு புதுவித மகிழ்ச்சியும் அனுபவமும் கிடைக்கும். கையில் பீர், குளிர் கடல் காற்று, உடன் உங்கள் நண்பர்கள்... இந்த பூமியில் இத விட வேற என்னங்க வேண்டும்.?

12. உறவை நெருக்கப்படுத்தும் சிவபுரி பீச்

12. உறவை நெருக்கப்படுத்தும் சிவபுரி பீச்

PC : David Adam Kess

ரிஷிகேஷில் உள்ள அனைத்து வேடிக்கை மற்றும் சாகசங்கள் நிறைந்த பயணத்திற்குப் பிறகு உங்களது சோர்வைப் போக்க உண்மையில் தேவைப்படுவது ஒரு பீர்! சாகச விளையாட்டுகளில் பங்கேற்காவிட்டாலும் சரி, சிவபுரி கடற்கரையை சுற்றியுள்ள கவர்ச்சியும், முகாம்களையும் பீர் அருந்தியவாரே சுற்றுப்பார்த்துவிட்டு சக கேம்பர்களுடன் கதைகள் பகிர்ந்து கொள்ளலாம்.

13. மாத்தேரான் மலைகல் மற்றும் சமவெளிகள் இடையே

13. மாத்தேரான் மலைகல் மற்றும் சமவெளிகள் இடையே

PC : Ccmarathe

உங்களது கற்பனைகள் அனைத்தும் உண்மையானதாக மாறிவிட்டால், லூயிசா காட்சி முனையில் கையில் ஒரு பீருடன் சற்று நினைத்துப்பாருங்கள். அந்த அனுபவத்தை வெறும் வார்த்தைகளால் வரையறுக்க முடியாது!

14. கட்சத் தீவின் நடுவே...

14. கட்சத் தீவின் நடுவே...

PC : Darshjoshi

வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து கவலைகளையும் நீங்கள் எப்படி வெளியேற்றுகிறீர்கள் ? அல்லது உங்களை எரிச்சலூட்டும் முதலாளிக்கு 'குட்பை' என்று சொல்வது சாத்தியமா ? இதைக் கொஞ்சம் நினைத்துப்பாருங்கள். சொல்லப்போனால் இது உண்மையில் சாத்தியமில்லை! ஆனால் இவற்றில் இருந்து சற்று விலகி மன ஓய்வைப் பெற ஏற்ற இடம்தான் அமையும், பசுமையும் நிறைந்த கட்சத் தீவுக் காடு. தீவின் நடுவே அமர்ந்து ஒரு கோப்பை மதுவுடன் நீங்கள் செலவிடும் ஒவ்வொரு மணி நேரமும் எங்களது வெறுப்பை, சோர்வை வெளியேற்றி புத்துணர்வை அளிக்கும்.

15. கனவுகளை நினைவாக்கும் லொனவாலா

15. கனவுகளை நினைவாக்கும் லொனவாலா

PC : Ravinder Singh Gill

உங்கள் பீர் எப்படி இருக்க வேண்டும்? சுற்றியுள்ள மலைகளின் பரந்த புல்வெளிகளின் நடுவே ? அல்லது நகர வாழ்க்கையின் அவசரத்தில்..? ஒரு மலையின் உச்சியில் உட்கார்ந்திருக்கும்போது, அந்த தென்றல் உரசிச் செல்ல கொஞ்சம் கொஞ்சமாக அருந்தும் பீர்... மகாராஸ்டிராவின் புனே மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நகரமான லொனவாலா-வில் உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற அனைத்து வழிகளையும் காண்பீர்கள்!

16 இயற்கை உறையும் சாங்கு ஏரி

16 இயற்கை உறையும் சாங்கு ஏரி

PC : Indrajit Das

சிக்கிம் மாநிலத்தின் கிழக்குப் பகுதியில், சிக்கிம் மாநிலத்தின் தலைநகரான கேங்டாக் நகரத்தில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் 3,780 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது சாங்கு ஏரி. புயல் மையம் கொண்டதைப் போல வானம், பிரம்மாண்டமான மலைகள், புல்வெளியின் அழகு மற்றும் கையில் ஒரு பீர்..! சிக்கிமில் உள்ள சாங்கு ஏரி அருகே கிடைக்கும் இந்த அனுபவத்தை வேறு எதுவும் வெல்ல முடியாது! பீர் ஜில்லுன்னு இல்லைன்னு கவலைப்பட வேண்டாம், இந்த ஏரியில் உங்களது பாட்டிலை கொஞ்சம் முடக்கி, பின் குடித்துப் பாருங்கள்...

17 அந்தமான் மீது அன்பில் விழக் காரணம்

17 அந்தமான் மீது அன்பில் விழக் காரணம்

PC : Ritiks

அந்தமான் தீவு என்பது வங்காள விரிகுடாவில் உள்ள ஒரு தீவுக் கூட்டம் ஆகும். இது இந்தியாவின் அந்தமான் நிகோபார் தீவுகளின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. இந்தத் தீவில் அமர்ந்து நீங்கள் பீர் அருந்துகிறீர்கள் என்றால் உங்களையே அறியாமல் அந்தத் தீவின் மீது ஒரு வித காதல் ஏற்பட்டு விடும். காதலும், கவிநயமும் மிக்கவராக நீங்கள் இருந்தால் அந்த அழகியக் கவிதைகள் பல, ஊற்றுப் போல வெளித்தோன்றும்.

18. இத விட வேற என்னங்க வேணும் ?

18. இத விட வேற என்னங்க வேணும் ?

PC : sushmita balasubramani

ஜீப் சவாரி அல்லது குதிரை சவாரி சென்று ஒரு கிராமத்தை அடைந்த பின் நீங்கள் விரும்பிய பீர் ஒன்றை அருந்துவதை கற்பனை செய்து பாருங்கள்! அதுவும், ராஜஸ்தானில் நீண்டதூர மணல் பாலைவன பயணத்திற்குப் பிறகு கிம்ஷாரில் ஒரு சிறிய நீர்க்குட்டை அருகே உள்ள முகாமில் ஜில்லுன்னு ஒரு பீர்...

19. இராணுவ அனுபவத்துடன் கொஞ்சம் பீர்

19. இராணுவ அனுபவத்துடன் கொஞ்சம் பீர்

PC : Saurabh Lall

இந்திய ராணுவ வீரர்களின் அன்றாட பணிகளை கண்டபடியே உறைபணியில் ழுர் குடிக்க ஏற்ற இடம் கார்கில். இந்தப் பகுதி நிறைய ஆபத்து நிறைந்த பகுதி என்றாலும், நம் இராணுவ வீரர்களை நம்பி தாராளமாகச் சென்று மகிழ்ந்து வரலாம்.

20. மகிழ்ச்சியைப் பகிரும் தால் ஏரி

20. மகிழ்ச்சியைப் பகிரும் தால் ஏரி

PC : Basharat Shah

நீங்கள் ஒரு பீர் விரும்பியாக இருந்தால், உங்களது வாழ்க்கையில் மிகச் சிறந்த ஏதாவது ஒன்றை இழந்துவிட்டீர்கள் என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் ஒரு முறை காஷ்மீர் பல்லத்தாக்கில் அமைந்துள்ள தால் ஏரிக்குச் சென்று விரும்பமான பீரை அருந்தி வாருங்கள். சூரியன் மறையும் ஏரியின் அழகு, தளுவும் தென்றல் காற்று கண்களில் ஒரு சில நீர்த்துளிகளுடன் வாழ்வை புதுப்பிக்கும்.

21. சுந்தர்வனக் காட்டில் உங்கள் பீரின் மகிழ்ச்சியை கலந்து விடுங்கள்

21. சுந்தர்வனக் காட்டில் உங்கள் பீரின் மகிழ்ச்சியை கலந்து விடுங்கள்

PC : V Malik

ராயல் பெங்கால் புலிகளின் இயற்கையான வாழ்விடங்களுக்கான வழிகளில் உங்களுக்கு விருப்பமான பீர் ஒன்றைக் கழிக்க முடியாவிட்டால், என்ன வேடிக்கை? கங்கை ஆற்றின் மீது ஒரு பாரம்பரிய படகில் வாடகைச் சவாரி... பயணத்தை ஒரு சில மணி நேரம் ஒரு சில பீர்களுடன் அனுபவிக்கலாம் வாங்க.

22. ஆசையைத் தூண்டும் காசிரங்கா வனக்காடு

22. ஆசையைத் தூண்டும் காசிரங்கா வனக்காடு

PC : Anupom sarmah

காசிரங்கா nதசியப் பூங்கா இயற்கை எழிலும் வளமும் கொட்டிக் கிடக்கும் வடகிழக்கு இந்திய மாநிலங்களில் பெரிய மாநிலமான அஸ்ஸாம் மாநிலத்தின் கோலாகட் மற்றும் நகாவோன் மாவட்டங்களில் அமைந்துள்ளது. இந்த தேசிய பூங்கா மற்றும் அதன் வனவிலங்கு சரணாலயத்தின் சதுப்பு நிலங்கள் அற்புதமான வனவிலங்கு சுற்றுப்பயணத்திற்கு உதவுகின்றன. அது மட்டுமல்ல, பூங்காவின் கவர்ச்சிகரமான அழகு மற்றும் பசுமை நிறைந்த காடு ஒரு பீர் வேண்டுமென்றே உங்களை கவர்ந்துவிடும்!

23. மேகத்தை தொட்டுக்கிட்டே பீர் அடிக்கலாமா ?

23. மேகத்தை தொட்டுக்கிட்டே பீர் அடிக்கலாமா ?

PC : solarshakti

வெஸ்ட் பெங்காலின் மலை ஊச்சியில் மேகக் கூட்டங்களை தொட்டுக் கொண்டே பீர் அடித்துப்பாருங்கள். வழக்கத்தை விட கொஞ்சம் அதிகமாகத்தான் இங்கு பீர் தேவைப்படும்.

24. மால்பே கடற்கரையை சுற்றி ரிலாக்ஸ் செய்யுங்கள்

24. மால்பே கடற்கரையை சுற்றி ரிலாக்ஸ் செய்யுங்கள்

PC : Neinsun

எங்கு சென்றாலும் ஒரு மன நிறைவில்லாமல் உள்ளீர்கள் என்றால் உங்களுடைய கடைசித் தேர்வு kல்பே கடற்கரையாகத்தான் இருக்க வேண்டும்.

உங்களுடைய கடைசி பீர் எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கிறதோ, அதேப்போன்றுதான் அந்தப் பொழுதே இருக்கும். இந்த நேரத்தில், கர்நாடகாவில் உள்ள உடுப்பி மால்பே கடற்கரை நகரத்திற்குச் செல்லுங்கள், அதே பாட்டில் மந்திரம் மற்றும் கவர்ச்சியை நீங்கள் உணரலாம்.

Read more about: பயணம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more