» »குதிரை சவாரி போக சௌகரியமான இடங்கள் இந்தியாவில் எங்கெல்லாம் இருக்கு?

குதிரை சவாரி போக சௌகரியமான இடங்கள் இந்தியாவில் எங்கெல்லாம் இருக்கு?

Written By: Bala Karthik

உலகிலேயே குதிரை சவாரி என்பது தான் மிகவும் பழமையான போக்குவரத்தாக அமைய, தற்போது மீளுருவாக்க செயல்கள் மற்றும் விளையாட்டு போட்டிகளுக்கு குதிரைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை குதிரையேற்றம் எனவும் அழைக்கப்பட, இந்த செயலை நாம் செய்ய ஒழுங்கான திறனானது தேவைப்படுகிறது. குதிரை மற்றும் குதிரைக்காரனுக்கு இந்த செயல்களை செய்ய பயிற்சிகளும் வழங்கப்படுகிறது.

எதை நாம் போக்குவரத்திற்கு பயன்படுத்தி வந்தோமோ, தற்போது அதுதான் ஆடம்பரமான செயலுக்கு பயன்பட, வழக்கமாக முதலாளித்துவ சமூக மக்களுக்கு இது புகழை சேர்க்கிறது இதனால், இருப்பினும், குதிரை சவாரி அனுபவம் என்பது நம் வாழ்க்கையில் ஒருமுறையாவது காண வேண்டிய ஒரு விஷயமாக அமைய, இந்த அனுபவத்தை போலொரு அனுபவம் வேறு எதிலும் நமக்கு கிடைத்திடாது.

நீங்கள் உங்களுடைய விடுமுறையை, குதிரை சவாரியுடன் இணைந்து சென்றிட, உங்களுக்கு நீங்களே ராஜா என்பது போல் உணர்வானது கிடைத்திட, அடுத்த விடுமுறைக்கு நீங்கள் செல்லக்கூடிய இடமாக இதுவும் அமையலாம்.

பஹல்கம், ஜம்மு & காஷ்மீர்:

பஹல்கம், ஜம்மு & காஷ்மீர்:

மகிழ்ச்சி தரும் இடமாக காஷ்மீர் காணப்பட, அழகானது பரந்து விரிந்து இயற்கை ஆதாரங்களான பசுமையான நிலப்பரப்புகளையும், பனி மூடிய மலையையும், தனித்துவமிக்க வனவிலங்கையும் கொண்டிருக்கிறது. இந்த சாகச விளையாட்டுக்களை தவிர்த்து, பனிச்சறுக்கானதும் குளிர்க்காலத்தில் காணப்பட, ஆங்கிளிங், ட்ரெக்கிங்க் என பலவும் காணப்பட, புகழ்மிக்க செயலாக குதிரை சவாரியானது குறிப்பாக பஹல்கம்மில் அமைகிறது.

ஸ்ரீநகரிலிருந்து 88 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் நெகிழவைக்கும் மலைப்பகுதியான பஹல்கம், இயற்கை அழகை ஆராய வழி தர, வழியில் குதிரை சவாரியும் நம்மை குதூகலிக்க வைக்கிறது. சவுகரியமான கால நிலையானது பஹல்கம்மில் காணப்பட, அழகிய மலையும், பசுமையும் என பலவும் அழகுக்கு ஆக சிறந்த எடுத்துக்காட்டாய் அமையக்கூடும்.

யும்தாங்க் பள்ளத்தாக்கு, சிக்கிம்:

யும்தாங்க் பள்ளத்தாக்கு, சிக்கிம்:

மலர்களானது பள்ளத்தாக்கில் சிறந்து காணப்பட, அத்துடன் குதிரை சவாரியென்றால் வேறு என்ன வேண்டும் நமக்கு? சிக்கிமின் யும்தாங்க் பள்ளத்தாக்கை மலர்களின் பள்ளத்தாக்கு என அழைக்க, இங்கே ஷிங்க்பா ரோடென்ட்ரென் சரணாலயமும் காணப்படுகிறது. நம்மால் 24 வகையான மதிமயக்கும் பள்ளத்தாக்கின் ரோடென்ட்ரென் மலரை பார்க்க முடிகிறது.

இந்த யும்தாங்க் பள்ளத்தாக்கை நாம் காண வர, சிறந்த நேரமாக பிப்ரவரி முதல் ஜூன் மாதம் மத்தி வரை அமைய, இங்கே அழகிய மலர்களால் பள்ளத்தாக்கானது போர்வையாக மூடப்பட்டும் இந்த கால நிலையில் காணப்படுகிறது.

மத்தேரான், மகாராஷ்டிரா:

மத்தேரான், மகாராஷ்டிரா:

மகாராஷ்டிராவின் கண்கொள்ளா காட்சி நிறைந்த மலைப்பகுதியாக மத்தேரான் காணப்பட, மும்பையிலிருந்து 90 கிலோமீட்டர் தொலைவிலும் காணப்படுகிறது. 2,625 அடி உயரத்தில் இவ்விடம் காணப்பட, மத்தேரான் என்பதற்கு காட்டின் முன் தலைப்பகுதி எனவும் இலக்கிய ரீதியாக பொருள்தருகிறது. இங்கே, முன் தலை என்பது மாபெரும் மேற்கு தொடர்ச்சியின் உச்சியை உணர்த்துகிறது.

இதன் அற்புதமான உயரமானது, மத்தேரானை 38 பெயர் பெற்ற காட்சி புள்ளிகளுக்கு இடமாக அமைத்திட, இங்கிருந்து அற்புதமான நகரத்தின் ஒட்டுமொத்த காட்சியை நாம் பார்க்க, அதன் பெயர் தான் நேரல் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆசிர்வதிக்கப்பட்ட குதிரை சவாரியானது மத்தேரான் மலை சரிவில் காணப்பட, குறிப்பாக, பயணம் செய்வது அல்லது இயற்கை நடைப்பயணத்திற்கு ஏற்ற இடமாக இது ஒரு கப் தேனீருடன் அமைகிறது.

 டிகா, மேற்கு வங்காளம்:

டிகா, மேற்கு வங்காளம்:


மேற்கு வங்காளத்தின் ஒதுக்குப்புறமான நகரமான டிகா, கொல்கத்தாவிலிருந்து 183 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது. இங்கே தலைச்சிறந்த கடல் உணவுகள், குறிப்பாக மீன் கிடைக்க, குடில்களானது டிகா கடற்கரையில் வரிசை கட்டி வரவேற்க, உள்ளூர் ஆபரணங்களுடனான சிறு கடைகளும் அருகாமையில் காணப்படுகிறது.

இவ்விடமானது திரைப்படத்தில் நாம் காண்பதுபோல் அற்புதமான இடமாக குதிரை சவாரிக்கு அமைய, டிகா கடற்கரையில் சவாரிகளை நம்மால் காண முடிகிறது. இங்கே உள்ளூர் வாசிகளிடம் விலைப்பேசி குதிரை சவாரி செய்திட, விலையோ நியாயமான(பெயரளவு) விலையாகவே அமைகிறது.

உதய்பூர், ராஜஸ்தான்:

உதய்பூர், ராஜஸ்தான்:


ஏரிகளின் நகரமென நம்மால் அழைக்கப்படும் உதய்பூர், மதிமயக்கும் இலக்காக ராஜஸ்தானில் அமைய, இந்தியாவில் காணப்படும் தலைச்சிறந்த அரண்மனைகளுக்கு வீடாகவும் விளங்குகிறது. உதய்பூரில் நாம் காண வேண்டிய அரண்மனையாக நகர அரண்மனை, குல் மஹால், ஜக் மந்தீர் என பெயர் சொல்லும் பலவும் காணப்படுகிறது. அத்துடன் மிளிரும் உதய்பூர் ஏரியான பிச்சோலாவிற்கும், பத்தேஹ் சாகர் ஏரி, என பலவற்றிற்கும் நாம் செல்வதன் மூலம் மனதானது சிலிர்க்கப்படுகிறது.

உதய்பூரில் பல உள்ளூர் சேவைகள் காணப்பட, அவை அரச குடும்பத்து வழக்கப்படியும் நம்மை பின் நோக்கி அழைத்து செல்கிறது. இங்கே எந்த வித இடங்களில் வேண்டுமானாலும் நம்மால் தொடர்பில் இருக்க முடிய, உதய்பூர் குதிரை சவாரி அனுபவமானது உங்களுக்கு கண்கொள்ளா காட்சியை விருந்து படைத்திடுகிறது.