Search
  • Follow NativePlanet
Share
» »பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!

பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!

ஈரோடு, கோவை, திருப்பூர் மக்களா நீங்கள்? அப்போ இந்த வாரம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ஜாலியா நீங்கள் செல்ல வேண்டிய ஒரு சூப்பரான ஸ்பாட் பற்றி நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்! கிட்டத்தட்ட 700 வருடங்களுக்கு முன்னர் பவானி ஆற்றின் நடுவே கற்களை கொண்டு 'தன நாயகன் கோட்டை பற்றி தான் சொல்கிறோம். ஆற்றுக்கு நடுவே கம்பீரமாக நிற்கும் இந்த கோட்டையை நீங்கள் இன்னும் 2 மாதங்களுக்கு மட்டுமே காணலாம். அதற்குள் இங்கு சென்று வாருங்கள்!

திப்பு சுல்தான் கட்டிய கோட்டை

சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் திப்பு சுல்தான் பவானி அணை கட்டுவதற்கு முன்னதாக ஆற்றின் நடுவே கம்பீரமான தன நாயகன் கோட்டையை கட்டினார். இந்த கோட்டை பெத்திகுட்டையிலிருந்து 15 கிமீ தொலைவில் உள்ளது. இந்த கோட்டையின் எஞ்சிய பகுதி ஒரு கோவில் மட்டுமே. கோயிலுக்குள் சிலை இல்லை (யாரோ திருடிவிட்டார்கள் என்று கூறப்படுகிறது). சுவாரஸ்யமான பகுதி என்னவென்றால், கோவிலுக்குள் ஒரு ரகசிய பாதாள பாதை உள்ளது, இப்போது அது சேற்றால் நிரப்பப்பட்டுள்ளது.

how to reach dhana nayakan temple

பவானி ஆற்றின் நடுவே தன நாயக்கன் கோட்டை

திப்பு சுல்தானின் கீழ் பெத்திகுட்டை மற்றும் பவானிசாகர் பகுதிகளின் சிறிய ஆட்சியாளரான தன நாயகன் பெயருக்கு ஏற்றவாறு தன நாயக்கன் கோட்டை அல்லது தன நாயகன் கோட்டை கட்டப்பட்டது. கோட்டையைச் சுற்றி ஒரு சிறிய கிராமம் இருந்தது. 1955 இல் பவானி சாகர் அணை கட்டப்பட்டபோது, அணையின் நீர்த்தேக்கம் கிராமத்தையும் கோட்டையையும் மூழ்கடித்தது.

நீர்மட்டம் 45 அடிக்கு கீழே செல்லும் போதெல்லாம் கோட்டையை காணலாம்

அப்போது அங்கு வாழ்ந்த மக்கள் பவானிசாகரைச் சுற்றியுள்ள இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு விவசாயிகளுக்கு மாற்று நிலங்கள் வழங்கப்பட்டன. கோட்டைக்குள் ஒரு கோவில் இருந்தது. கோயிலுக்குள் இருந்த அனைத்து சிலைகளும் அணைக்கு அருகில் புதிதாக கட்டப்பட்ட கோயிலுக்கு மாற்றப்பட்டன; இருப்பினும் கோவில் சுவர்கள் மற்றும் ஒட்டுமொத்த அமைப்பும் தீண்டப்படாமல் விடப்பட்டது. அணையின் நீர்மட்டம் 45 அடிக்கு கீழே செல்லும் போதெல்லாம், தன நாயகன் கோட்டை தண்ணீரில் இருந்து வெளியேறுவதைக் காணலாம்.

5 ஆண்டுகளுக்கு பின்னர் வெளியே வந்த கோட்டை

கடைசியாக இந்த கோட்டை 5 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியே தெரிந்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு இப்போது தான் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது. யார் கண்ணுக்கும் தெரியாமல் 5 ஆண்டுகளாக நீருக்குள் மூழ்கியிருந்து தற்போது வெளியே தெரியும் அதிசய கோட்டையை காண மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏனென்றால், 2 நீர்வரத்து அதிகமாகும் போது கோட்டை மறுபடியும் மூழ்கினால் மீண்டும் எப்போது நாம் பார்ப்போம் என்று யாருக்கும் தெரியாது.

பரிசல் சவாரி செய்து கோட்டையை அடையுங்கள்

இந்த இடத்திற்கு நீங்கள் பொது போக்குவரத்தில் செல்ல முடியாது. சொந்த வாகனம் இருந்தால் தான் வர முடியும். செல்லும் வழியெல்லாம் சற்று கரடு முரடாக இருப்பதனால் கவனமாக செல்லவும். நீங்கள் இந்த இடத்தை அடைந்தவுடன் உங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு சிறிது நேரம் நடந்து செல்ல வேண்டும். அங்கே இருக்கும் பரிசல்களில் ஏறி கோட்டையை நீங்கள் அடையலாம். காலை 8 முதல் மதியம் 1 மணி வரை இந்த இடத்திற்கு செல்ல முடியும்.

மறக்காமல் சென்று வாருங்கள் மக்களே

நீங்கள் இங்கே செல்லும் போது, குடை, தொப்பி, சிறிது ஸ்நாக்ஸ், முக்கியமாக தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்லுங்கள். 700 வருடங்களாக நீருக்கு அடியில் இருந்தாலும் கூட கோட்டை சிறிதளவு சேதம் இல்லாமல் கம்பீரமாக இருக்கிறது. பாசியை கூட நம்மால் பார்க்க முடியாது என்று சென்று வந்தவர்கள் கூருகின்றனர். இன்னும் 2 மாதங்களுக்கு மட்டுமே நீங்கள் இந்த கோட்டையை காண முடியும். அதற்கு பின்னர், பவானி அணையில் தண்ணீர் நிரம்பி விடும் என்பதால் இப்போதே இந்த இடத்திற்கு சென்று வாருங்கள் மக்களே!

More News

Read more about: erode bhavani river
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+