» »பெங்களூர்னா குளுகுளு பார்க் மட்டும்தான் ஸ்பெஷலா? இந்த முருகன் கோவிலும்தான்!!

பெங்களூர்னா குளுகுளு பார்க் மட்டும்தான் ஸ்பெஷலா? இந்த முருகன் கோவிலும்தான்!!

Written By: Bala Karthik

இந்து மதத்தின் ஒருங்கிணை பகுதியாக காணப்படுகிறது இந்த நாக தெய்வம். இந்த ஆலயத்தின் வரலாறாக பல வகை நாக தெய்வங்களும் புராணமாக பேசப்படுகிறது. கார்த்திகேய கடவுள் (சுப்பிரமணியா) அனைத்து வகை நாகங்களுக்கும் கடவுளாக கருதப்படுகிறது. ஆகையால், பல ஆலயங்களில் சுப்பிரமணிய கடவுளவர் நாகத்தின் வடிவமாக வணங்கப்படுகிறது. பெங்களூருவின் அருகாமையில் காணப்படும் கட்டி சுப்பிரமணியா ஆலயம், சுப்பிரமணியா கடவுளை ஏழு தலைக்கொண்ட நாகமாக வணங்கப்படுவதாக தெரியவருகிறது.

கட்டி சுப்பிரமணியா காணப்படுமிடம்:

கட்டி சுப்பிரமணியா காணப்படுமிடம்:

பெங்களூருவிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது கட்டி சுப்பிரமணியா. இவ்விடமானது கர்நாடகாவின் தொட்டாபல்லாபூரில் காணப்படுகிறது. நீங்கள் இங்கே யெலங்கா - தேவனஹல்லி சாலை வழியாக தொட்டாபல்லாபூரை அடைகிறோம். தொட்டாபல்லாபூரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது இந்த கட்டி சுப்பிரமணிய ஆலயம்.

கட்டி சுப்பிரமணியாவின் புராணக்கதை:

புராணத்தின்படி, சுப்பிரமணியரவர் தன்னுடைய தவத்தை பாம்பு வடிவத்தில் செய்தார். அந்த நேரத்தில், கருடனால் நாக குடும்பத்திற்கு ஆபத்து என்பதையும் அவர் அறிந்தார். அதனால், அவர் விஷ்ணு பெருமானிடம் வேண்டிக்கொள்ள, தங்களுடைய நாகக்குடும்பத்தை அந்த கருடன் எதுவும் செய்துவிடக்கூடாது என வேண்டிக்கொண்டார். அதனால், சுப்பிரமணியனும், விஷ்ணுவும் அங்கே வெளிப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.


கட்டி சுப்பிரமணியாவின் சுவாரஸ்யமான விஷயங்கள்:


நாம் இங்கே சுப்பிரமணியரின் சிலையையும் (ஏழு தலைக்கொண்ட நாகம்) விஷ்ணு பெருமானையும் பிரதான கருவறையில் காண்கிறோம். இங்கே கார்த்திகேய பெருமான் கிழக்கில் பார்த்திருக்க, நரசிம்ம பெருமான் மேற்கில் பார்த்தவாறும் இருக்கிறார். அதனால், ஒரு கண்ணாடியானது கருவறைக்கு மேலே வைக்கப்பட்டிருக்க, பக்தர்களால் இரு சிலைகளையும் பார்க்க முடிகிறது.

ஆகையால், நாகத்தை வணங்குவதற்கு கட்டி சுப்பிரமணியா புகழ்பெற்று விளங்க, நரசிம்மா ஆலயத்தையும் கொண்டிருக்கிறது. இதுதான் கட்டி சுப்பிரமணியாவின் அதீத சுவாரஸ்யமாக அமைய, அது நம்மை வியக்கவும் வைக்கிறது.

PC: Rejenish

 கட்டி சுப்பிரமணியாவின் கட்டிடக்கலை:

கட்டி சுப்பிரமணியாவின் கட்டிடக்கலை:


இந்த ஆலயமானது சந்தூரின் கொர்படே ஆட்சிப்படி கட்டப்பட்டிருக்கிறது. அதன்பின்னர், மற்ற ஆட்சியாளர்களாலும் இது மேம்படுத்தப்பட்டது. இந்த ஆலயமானது திராவிடக்கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த ஆலயமானது பிரதான ஆலயத்தை கொண்டிருக்க, நாக பிரதிஷ்டபானே இடத்தையும் நம்மால் காண முடிகிறது. (இவ்விடம் தான் பக்தர்களால் நிறுவப்பட்ட பல சிலைகளை கொண்ட இடம்)

கட்டி சுப்பிரமணியா திருவிழா:


நாகரா பஞ்சமி மற்றும் நரசிம்ம ஜெயந்தி விழாவானது ஆலயத்தில் கொண்டாடப்படும் முக்கிய விழாவாகும். மிகப்பெரிய வருடாந்திர விழாவாக புஷ்ய சுத்த சஷ்டி காணப்பட, இந்த விழாவானது ஆலயத்தின் பிரகாரத்திலும் காணப்படுகிறது.

PC: Akshatha Inamdar

கட்டி சுப்பிரமணியாவை நாம் அடைவது எப்படி?

கட்டி சுப்பிரமணியாவை நாம் அடைவது எப்படி?


பெங்களூருவிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது கட்டி சுப்பிரமணியா. பெங்களூருவிலிருந்து கட்டி சுப்பிரமணியாவிற்கு நேரடி பேருந்துகள் காணப்படுகிறது. கட்டி சுப்பிரமணியாவிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது தொட்டாபல்லாபூர் இரயில் நிலையமாகும். சுற்றுலா பயணிகளால் ஆட்டோ அல்லது பேருந்துகள் (KSRTC) எடுத்து செல்ல நம்மால் ஆலயத்தையும் அடைய முடிகிறது.

(குறிப்பு: தற்போது சாலையானது வேலைப்பார்த்துக் கொண்டிருக்கப்பட, இந்த பயணமானது மெதுவாக செல்ல, தொட்டாபல்லாபூர் வரை ஒரு வழிக்கோடாகவும் காணப்படுகிறது. தொட்டபல்லாபூரிலிருந்து 15 கிலோமீட்டர் பரந்து விரிந்து காணப்பட ஆலயம் நோக்கிய எளிதான பயணமாகவும் அமைய, சிறந்த நிலையிலும் காணப்படுகிறது.)

கர்நாடகாவின் தலை சிறந்த ஆலயமாக கட்டி சுப்பிரமணிய க்ஷெத்ரம் விளங்குகிறது. பெங்களூருவின் (பெங்களூர்) அருகாமையில் புகழ்பெற்ற நாக ஆலயமானது காணப்படுகிறது. சர்ப்ப தோஷம் மற்றும் நாகரா ப்ரதிஷ்டபனே போன்ற தோஷ பூஜைகளும் இங்கே நடத்தப்படுகிறது.

பெங்களூருவிலிருந்து 2 மணி நேரப்பயணமாக கட்டி சுப்பிரமணியா அமைகிறது. அதனால், சுற்றுலாவிற்கு ஏற்ற இடமாக இது அமைய, கர்நாடகாவின் கிராமப்புற பக்கமாகவும் அமையக்கூடும்.

PC: Vedamurthy J

Read more about: temples, religious travel