Search
  • Follow NativePlanet
Share
» »பெங்களுரு நகரின் அரிய புகைப்படங்கள்

பெங்களுரு நகரின் அரிய புகைப்படங்கள்

பெங்களுரு, நவீன இந்தியாவின் தலையெலுத்தை தீர்மானிக்கும் ஒரு நகரம். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக கடந்த 20 ஆண்டுகளில் இந்த நகரம் பல லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை அளித்துள்ளது. இதனாலேயே பெங்களுரு நகரின் மக்கள் தொகை பல ஐரோப்பிய நாடுகளின் மக்கள் தொகையை விட அதிகம்.

அருமையான குளுகுளு சீதோஷணம், இந்தியாவின் பல மூலைகளில் இருந்தும் வந்து வசிக்கும் மக்கள் என ஒரு கலாசார கேந்திரமாகவே பெங்களுரு நகரம் மாறிவிட்டது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த இந்த நகரின் பழைய புகைப்படங்களின் தொகுப்பை காணலாம் வாருங்கள்.

M.G Road :

M.G Road :

பெங்களுரு நகரின் மிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் ஒன்றான மகாத்மா காந்தி சாலையின் (M.G Road) 100 ஆண்டுகளுக்கு முந்தைய புகைப்படம்.

Photo: WIkimedia

பெங்களுரு உயர் நீதி மன்றம் :

பெங்களுரு உயர் நீதி மன்றம் :

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு இங்கு நடைபெற்றதன் காரணமாக சமீப காலமாக தமிழக செய்திகளில் அதிகம் இடம் பிடித்த பெங்களுரு உயர் நீதி மன்றத்தின் அரிய புகைப்படம்.

Photo: Wikimedia

பெங்களுரு உயர் நீதி மன்றம் :

பெங்களுரு உயர் நீதி மன்றம் :

திப்பு சுல்த்தானின் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் 18 முக்கிய அரசு அலுவலகங்கள் இந்த கட்டிடத்தில் இயங்கியிருக்கின்றன. அப்போது இந்த கட்டிடம் 'அட்டாரா கச்சேரி' என்று அழைக்கப்பட்டிருக்கிறது.

Photo: Wikimedia

பெங்களுரு உயர் நீதி மன்றம் :

பெங்களுரு உயர் நீதி மன்றம் :

இப்போதைய கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையம் வருவதற்கு முன்பாக பெங்களுருவின் விமான நிலையமாக செயல்பட்ட ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவன விமான நிலையம்.

Photo: WIkimedia

லால் பாக் :

லால் பாக் :

பெங்களுரு நகருக்கு செல்லும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டிய இடம் 'லால் பாக்' பூங்கா ஆகும். பசுமை நிறைந்த இந்த பூங்காவின் பழைய புகைப்படமொன்று.

Photo: Wikimedia

கப்பன் பார்க் :

கப்பன் பார்க் :

பெங்களுரு உயர்நீதி மன்றத்துக்கு வெகு அருகிலேயே அமைந்திருக்கும் இடம் 'கப்பன் பார்க்' ஆகும். பெங்களுருவில் இருக்கும் மிக மிக அழகான இடமென்றால் சந்தேகமே இல்லாமல் அது கப்பன் பார்க் தான். கிட்டத்தட்ட 150 ஆண்டுகள் பழமையான இந்த பூங்காவின் பழைய புகைப்படம்.

கம்மர்சியல் ஸ்ட்ரீட் :

கம்மர்சியல் ஸ்ட்ரீட் :

பெங்களுருவின் மிகவும் பரபரப்பான பகுதிகளில் ஒன்று 'கம்மர்சியல் ஸ்ட்ரீட்' எனப்படும் வர்த்தக வீதியின் அறிய புகைப்படம். ஷாப்பிங் செய்ய விரும்புகிறவர்கள் கட்டாயம் இந்த இடத்திற்கு செல்ல வேண்டும்.

கண்டோன்மென்ட் :

கண்டோன்மென்ட் :

பெங்களுரு நகரையும் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கேரளா மாநிலங்களையும் இணைக்கும் ரயில் நிலையம் அமைந்திருக்கும் முக்கிய பகுதியான 'கண்டோன்மென்ட்' பகுதியின் பழைய புகைப்படம்.

அவென்யு வீதி :

அவென்யு வீதி :

பெங்களுருவின் கல்லூரி மாணவர்கள் கூடும் இடம் இந்த அவென்யு வீதியாகும். பெங்களுரு மத்திய பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் அமைந்திருக்கும் 'மெஜஸ்டிக்'க்கு அருகில் இருக்கும் இந்த வீதியில் கிடைக்காத கல்வி சார்ந்த புத்தகங்களே இல்லை எனலாம். அப்படிப்பட்ட இந்த வீதியின் நூறு ஆண்டுகளுக்கு முந்தைய புகைப்படம்.

Photo: WIkimedia

பெங்களுரு கோட்டை :

பெங்களுரு கோட்டை :

பெங்களுரு நகருக்கு அடித்தளமிட்டவர் என்று சொல்லபப்டும் விஜயநகர பேரரசின் தளபதியான 'கெம்பே கௌடா' என்பவரால் 15ஆம் நூற்றாண்டில் மண்ணால் ஆன கோட்டையாக இது முதலில் கட்டப்பட்டிருக்கிறது.

பெங்களுரு கோட்டை :

பெங்களுரு கோட்டை :

பின்னர் வந்த சுல்தான் அரசர்களான ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோரால் கற்களை கொண்டு உறுதியான கோட்டையாக இது வலுப்படுத்தப்பட்டிருக்கிறது.

பெங்களுரு கோட்டை :

பெங்களுரு கோட்டை :

பெங்களுரு அரண்மனையின் ஒரு பழைய புகைப்படம்.

பெங்களுரு அரண்மனை :

பெங்களுரு அரண்மனை :

பெங்களுரு அரண்மனையின் உட்புறம்.

Photo: Wikimedia

லேடி கர்சன்' மருத்துவமனை

லேடி கர்சன்' மருத்துவமனை "

பெங்களுருவில் இருக்கும் மிகப்பழமையான மருத்துவமனைகளில் ஒன்றான 'லேடி கர்சன்' மருத்துவமனை.

பசவங்குடி :

பசவங்குடி :

பசவங்குடி பகுதியில் நடைபெறும் உப்பு சத்தியாகிரக போராட்டத்தின் ஒரு காட்சி.

அருங்காட்சியகம்

அருங்காட்சியகம்

பெங்களுரு அரசு அருங்காட்சியகம்.

Photo: WIkipedia

 உல்சூர் ஏரி:

உல்சூர் ஏரி:

உல்சூர் ஏரி.

புனித மார்க்ஸ் சர்ச் :

புனித மார்க்ஸ் சர்ச் :

புனித மார்க்ஸ் சர்ச்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X