Search
  • Follow NativePlanet
Share
» »இந்த காலத்தில ‘நண்பன்’ திரைப்பட பாணியில இப்படி ஒரு பள்ளியா – தருமபுரி புவிதம் பள்ளி!

இந்த காலத்தில ‘நண்பன்’ திரைப்பட பாணியில இப்படி ஒரு பள்ளியா – தருமபுரி புவிதம் பள்ளி!

இந்த காலத்தில இப்படியொரு பள்ளியான்னு நம்மை அசர வைக்கிறது தருமபுரியில் இருக்கின்ற புவிதம் நர்சரி பள்ளி. புத்தகமோ சீருடையோ தேவையில்லை, விவசயமமும் தற்சார்பு பொருளாதாரமும் தான் இங்கு கற்றுத்தரப்படுகிறது. இயற்கையோடு கற்போம் என்பது இந்த பள்ளியின் முக்கிய அம்சமாகும். இந்த சிறப்பு வாய்ந்த பள்ளியின் சிறப்பம்சங்களைப் பற்றி தெரிந்துக் கொள்வோம் வாருங்கள்!

1

இயற்கை சூழலுக்கு நடுவே பள்ளி

புவிதம் என்பது மனிதாபிமான மற்றும் குழந்தைகளை மையமாகக் கொண்ட கல்விச் சூழலை வழங்கும் ஒரு மாற்றுப் பள்ளி அல்லது கற்றல் மையமாகும். புவிதம் என்றால் பூமியின் மீது அன்பு என்று பொருள். இந்த வினோதமான பள்ளி இப்போது தன் 22 ஆவது வயதில் கால் எடுத்து வைத்துள்ளது. உள்ளே நுழைந்த உடனேயே பள்ளியின் இயற்கை சார்ந்த கட்டமைப்பை கண்டு நாம் வியந்து போவது உறுதி.

2

புத்தகங்களை விட தற்சார்பு செயல்பாடுகளுக்கே முன்னுரிமை

கற்றல் மையமாக புவிதத்தின் முக்கிய குறிக்கோள் நிலையான வாழ்க்கை. பரீட்சை, ரேங்க் அல்லது புத்தகம், சீருடை எதுவும் இந்த பள்ளியில் இல்லை. ஒரு நபரின் அன்றாட நிலையான வாழ்க்கைக்கு தேவையான விவசாயம் முதல் சமையல் வரை அனைத்தும் மாணவர்களுக்கு இங்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மட்டுமே அவர்கள் NCERT புத்தகங்களை கற்கிறார்கள். மீதி 6 மணி நேரத்தில் தோட்டக்கலை, விவசாயம், தற்சார்பு பொருளாதாரம் ஆகியவை கற்பிக்கப்படுகிறது.

3

இரு மொழிகளிலும் பாடம்

புவிதத்தில் நிலையான வாழ்வுக்கான பாடத்திட்டம் சூரியன், பூமி, நீர், காற்று மற்றும் வளிமண்டலம் என ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகுப்பிற்கான பாடத்திட்டம் NCERT வழிகாட்டுதல்கள் மற்றும் கற்பவர்களின் வயது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்படுகிறது. ஒவ்வொரு தொகுதியும் இரண்டு மொழிகளில் நான்கு கதைகளைக் கொண்டுள்ளது. காலை அமர்வின் போது அவர்கள் தமிழில் எதைக் கற்றுக்கொண்டாலும் பிற்பகல் அமர்வின் போது ஆங்கிலத்தில் கற்பிக்கப்படுகிறது.

சோப்பு உற்பத்தி முதல் கைவினைப்பொருட்கள் தயாரிப்பு வரை

குழந்தைகள் செயல்பாடுகள் மற்றும் விளையாட்டுகள் மூலம் புதிய கருத்துக்களை அறிமுகப்படுத்துகிறார்கள். சோப்பு உற்பத்தி, விவசாயம், சமையல், மரவேலை, கலை மற்றும் கைவினைப்பொருட்கள் அவர்களின் பாடத்திட்டத்தின் இன்றியமையாத அம்சங்களாகும். உலகமே பிரதான கல்வி முறைகளை துரத்திக் கொண்டிருக்கும் போது, மூளை இயந்திரங்களுக்குள் கட்டமைக்கப்படாத, உயிருள்ள மற்றும் சுவாசமுள்ள உயிரினங்களாக வளர்க்கப்படும் குழந்தைகள் புவிதத்தில் வடிவமைக்கப்படுகிறார்கள் என்பதே பிரதான கருத்து.

4

இயற்கை விவசாயம் பள்ளியாக மாறிய வினோதம்

இந்தப் பள்ளியின் நிறுவனர் மீனாட்சி மற்றும் உமேஷ் ஆவர், மீனாட்சியும் அவரது வாழ்க்கைத் துணைவர் உமேஷும் 1992 ஆம் ஆண்டு நாகர்கூடல் கிராமத்திற்கு வந்து எளிமையான வாழ்க்கையை வாழவும், இயற்கையான முறையில் தங்கள் உணவைப் பயிரிடவும், மீனாட்சியின் கல்விக் கருத்துக்களைப் பற்றி ஆராய்வதற்காகவும் வந்தனர். 1992-ல் வாங்கிய 12 ஏக்கர் தரிசு நிலமே இன்றைய புவிதம் நர்சரி கற்றல் மையமாக மாறியுள்ளது.

இயற்கை சார்ந்த கல்வியை புகட்ட முயற்சி

மீனாட்சி தனது சொந்த அனுபவங்களின் காரணமாக தனது குழந்தைகள் பிரதான கல்வி முறைகளில் படிப்பதை விரும்பவில்லை. அதிக போட்டி மனப்பான்மை மற்றும் இரட்டை நடத்தையின் வெளிப்பாடாக இயற்கையை நோக்கி அழிவுகரமான மனநிலையை பிரதான கல்வி வளர்க்கிறது என்பதால் இயற்கை சார்ந்த கல்வியை தன் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும் என்பதற்காக இந்த புவிதம் புவிதம் நர்சரி கற்றல் மையத்தை நிறுவியுள்ளார்.

5

அன்றாட வாழ்க்கைக்கு தேவையான கல்விமுறை

புவிதத்தில் நடைமுறைப்படுத்தப்படும் வாழ்க்கை முறையும், விவசாய முறைகள் தண்ணீர் பற்றாக்குறையை நிர்வகிப்பதற்கு பெரிதும் உதவுகின்றன. உலர் கழிப்பறைகள் மற்றும் அவர்கள் சாகுபடிக்கு பயன்படுத்தும் சிறுநீர்-நீர் கலவை ஆகியவை இதற்கு இரண்டு சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும்.

எங்கே இருக்கிறது

தருமபுரியில் இருந்து 18 கிமீ தொலைவிலும், இந்தூர் என்கிற இடத்திலிருந்து 6 கிமீ தொலைவிலும் அமைந்துள்ள நாகர்கூடல் எனும் இடத்தில் தான் இந்த புவிதம் நர்சரி பள்ளி அமைந்துள்ளது. மேலும் தகவல்களுக்கு http://puvidham.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.

More News

    Read more about: dharmapuri
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+