Search
  • Follow NativePlanet
Share
» »16500 அடி உயரத்தில் சொர்க்கம் போல இருக்கும் ரூப்குன்ட் ஸ்பெஷல் என்ன தெரியுமா?

16500 அடி உயரத்தில் சொர்க்கம் போல இருக்கும் ரூப்குன்ட் ஸ்பெஷல் என்ன தெரியுமா?

16500 அடி உயரத்தில் சொர்க்கம் போல இருக்கும் ரூப்குன்ட் ஸ்பெஷல் என்ன தெரியுமா?

By Balakarthik Balasubramanian

16500 அடி உயரத்தில் அமைந்துள்ள ரூப்குன்ட் பள்ளத்தாக்குப் பகுதிக்கு ஒரு முறையாவதுச் சென்று வரவேண்டுமென்பது மலை ஏறும் ஆர்வலர்களின் எண்ண ஓட்டமாக இருந்துவரும் ஒரு பெரியக் கனவு என்றேக் கூறலாம். உணர்வினைக் கட்டுப்படுத்தமுடியாமல் செல்லும் அளவிற்கு அப்படி என்ன தான் ஆச்சரியம் இங்கு உள்ளது! என்னும் கேள்வி உங்கள் மனதில் உருவாகலாம். அந்தக் கேள்விக்கான பதிலைக் கீழ்வரும் பத்தியின் மூலம் நான் உங்களுக்கு சமர்ப்பிக்க முயற்சிச் செய்திருக்கிறேன்.

ஒவ்வொரு வருடத்தின் ஏப்ரல் மாதம் என்பது கட்டுப்பாடற்ற சுதந்திரம் வழிய, "விட்டாச்சு லீவு என்று இந்தியாவில் உள்ள மூலை முடுக்குவரை மகிழ்ச்சிக் குரல் கேட்க, பயணங்களைப் பட்டியலிட்டு மனதினைப் புத்துணர்ச்சிக் கொள்ள செய்யும் ஒரு மாதம்தான் இது. எங்கள் மனதில் அந்த மாதத்திற்கு முன்பு ஏற்பட்டதொரு மாற்றம், மலைகள் மேல் ஏறவும், சாலையில் சென்று மனதினை அமைதிப்படுத்தவும் துடிக்க, கூட்டமாக அமர்ந்து விடுமுறைக் கொண்டாட்டம் பற்றி திட்டங்களை வகுத்துக்கொண்டிருந்தோம். தேர்வினைக் கண்டால் தொங்கிவிடும் எங்கள் உணர்வுக்குத் தீனிப்போடும் வகையில் ஒரு உற்சாகமான இடத்தினை நாங்கள் தேடிக்கொண்டிருக்க, எங்கள் தோழனான ஒருத் தீவிர பயணப் பிரியனின் வாய்மொழியாக ரூப்குன்ட் பகுதியினைத் தேர்வுச் செய்தோம்.

அங்குக் காணப்படும் அற்புதமான மலைகளைப் பற்றியும், ஏரிகளில் தேங்கிக் கிடக்கும் எண்ணிலடங்கா ரகசியங்களைப் பற்றியும் என்றோ ஒரு நாள் கதைகளின் வாயிலாக நாங்கள் கேட்டதுண்டு. பொதுவாக ரகசியம் என்றாலே, தூங்கிக்கொண்டிருக்கும் மனிதனும் விழித்துக்கொள்வது வழக்கம் தான். அப்படி இருக்க எங்கள் மனதிற்கு மட்டும் என்ன விதிவிலக்கா என்ன? அதனால், அந்த அழகிய இடத்தினைக் காண கண்கள் துடிக்க, இதயம் அந்த அழகுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் மர்மத்திற்கான பதில் வெளிப்படுமா என ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தது.

ரூப்குன்ட், இமயமலையிலிருந்து 16,500 அடி உயரத்தில் காணப்படும் ஒரு உறைப் பனி சூழ்ந்த ஏரியாகும். இந்தப் பயணத்தின் மூலமாகப் பசுமையானக் காடுகளையும், பனியால் மூடிய மலைகளையும், வண்ணம் தீட்டப்பட்டச் சிறிய ஆறுகளையும், தெள்ளத் தெளிவாகக் காட்சியளிக்கும் ஏரிகளையும், பாறைகளையும் கண்டு அவற்றின் அழகை ரசித்து இன்பமானதொரு அனுபவித்தினை அடையலாம்.

இந்த ரூப்குன்ட் ஏரியின் கவர்ச்சியில் கொள்ளைப் போகும் சுற்றுலாப் பயணிகளின் மனம், ஆழம் நோக்கி ஆராய, ஒன்பதாம் நூற்றாண்டில் தொலைந்துப் போன நூற்றுக்கும் மேற்பட்ட மர்மமான மனிதனின் எழும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டது எனவும் நம்பப்படுவதனை அறிந்த நம் மனம் நெகிழ்ச்சி அடையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம். அதனால், இந்த ஏரிக்கு "மர்ம ஏரி" மற்றும் "எலும்புக்கூடு ஏரி" என்றும் மக்கள் புனைப்பெயர் சூட்டி மேலும் இந்த இடத்தின் மீது உள்ள எதிர்ப்பார்ப்பை அதிகரிக்க செய்து நம் மனதினை மர்மம் நோக்கி அழைத்துச் செல்கின்றனர். இந்த இடத்தின் தன்மை, ஏப்ரல் முதல் ஜூன் வரை நம் மனதினைப் பனியால் சூழ்ந்துக் குளிரூட்டச் செய்வதுடன் செப்டம்பர் முதல் நவம்பர் வரைப் பசுமையானக் காட்சிகளால் இதமாக்கி நம் மனதினை இன்புறச் செய்கிறது என்று தான் கூறவேண்டும்.

{photo-feature}

More News

    Read more about: travel hills
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+