» »ராமாயணத்தில் வந்த உண்மையான இடங்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

ராமாயணத்தில் வந்த உண்மையான இடங்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

Posted By: Staff

ஆணும் பெண்ணும் இணைந்து வாழும் குடும்பம் தான் மனித நாகரீகத்தின் அடிப்படையாக இருக்கிறது. குடும்பம் என்பது சரியாக இயங்கும் போது தான் சமூகமும், நாடும் தொய்வின்றி இனிமையாக இருக்கும். அப்படி ஒரு ஆணும் பெண்ணும் கணவனும் மனைவியுமாக எப்படி வாழ வேண்டும் என்று உலகுக்கு எடுத்துரைத்த பெருங்காப்பியம் தான் ராமாயணம் ஆகும்.  

திருமணமான தம்பதியரை ராமனும், சீதையும் போல வாழுங்கள் என்று பெரியோர் ஆசிர்வதிப்பதை இன்றும் நம் வீடுகளில் காணலாம். இதோடு மட்டுமில்லாமல் சகோதரத்துவத்தின் எடுத்துக்காட்டாக திகழ்ந்த லக்ஷ்மணன், நட்பின் வடிவான அனுமன் என இந்த காப்பியத்தில் வரும் பாத்திரங்கள் ஒவ்வொன்றும் அற்புதமாக படைக்கப்பட்டிருக்கும்.

வாருங்கள், இன்றும் அப்படியே இருக்கும் ராமாயணத்தில் வரும் சில முக்கியமான இடங்களை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.  

அயோத்தி :

அயோத்தி :

ரகு வம்சத்தின் தவ புதல்வனான ஸ்ரீ ராமன் பிறந்த புண்ணிய பூமி தான் அயோத்தி ஆகும். உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள இந்த அயோத்தி நகரமானது 9000 வருடங்களுக்கு முன்னாள் வேதத்தில் குறிப்பிடப்படும் முதல் மனிதரான 'மனு' என்பவரால் நிர்மாணிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

Ramnath Bhat

அயோத்தி :

அயோத்தி :

வால்மீகி ராமாயணத்தின் தொடக்கத்தில் அயோத்தி நகரை 'கடவுளால் கட்டப்பட்டது போல தோற்றமளிக்கிறது, தேவலோகத்துக்கு நிகரான செழிப்பை கொண்டிருக்கிறது' என்று வர்ணித்துள்ளார்.

கருட புராணத்தில் ஹிந்துக்களின் 7 புனித நகரங்களுள் (சப்தகிரி) ஒன்றாக அயோத்தியும் சொல்லப்பட்டுள்ளது.

शीष भटनागर

அயோத்தி :

அயோத்தி :

ராமபிரான் பிறந்த இடமான அயோத்தியில் அவருக்கு மிகப்பெரிய கோயிலொன்று இருந்ததாகவும், அதனை இடித்துவிட்டு கோயில் இருந்த இடத்திலேயே முகலாய மன்னன் பாபரால் மசூதி ஒன்று கட்டப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த முரண்பாடு ஏராளமான மதக்கலவரங்களுக்கும், உயிரிழப்புகளுக்கும் வழிவகுத்திருக்கிறது.

Vishwaroop2006

அயோத்தி :

அயோத்தி :

ராமனின் பிறப்பிடம் என்பதை தாண்டியும் ஏராளமான சிறப்புக்களை தன்னிடத்தே கொண்டிருக்கிறது அயோத்தி நகரம்.

ஜைன மதத்தை தோற்றுவித்த ரிஷிப தேவ முனிவர் மற்றும் அவரை தொடர்ந்து வந்த இரண்டு தீர்த்தங்கரர்கள் அயோத்தியில் பிறந்ததாக சொல்லப்படுவதால் ஜைனர்களுக்கும் புனித பூமியாக இந்நகரம் திகழ்கிறது.

அயோத்தி :

அயோத்தி :

மேலும் குப்தர்கள் காலத்தில் பௌத்த மதம் இங்கே பிரதானமாக இருந்ததென்றும் ஆயிரகணக்கான புத்த கோயில்கள் மற்றும் மடாலயங்கள் இருந்ததாகவும் பாக்சியான் என்ற சீன பயணி தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

அயோத்தி :

அயோத்தி :

அயோத்தில் நாம் நிச்சயம் சென்று பார்க்க வேண்டிய இடங்களில் முக்கியமானது நகர மையத்தில் அமைந்திருக்கும் 'ஹனுமான் கர்ஹி' கோயில் ஆகும். கோட்டை போன்ற மிகப்பெரிய மதில்களை கொண்டிருக்கும் இக்கோயில் இருக்கும் இடத்தில் தான் அனுமன் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது.

அயோத்தி நகரை பற்றிய மேலும் பல சுவையான தகவல்களையும், அந்நகரை எப்படி சென்றடைவது என்பது பற்றிய விவரங்களையும் தமிழின் ஒரே பயண வழிகாட்டி இணையதமான தமிழ் நேடிவ் பிளானட்டில் தெரிந்துகொள்ளுங்கள்.

Vishwaroop2006

நாசிக்:

நாசிக்:

ராமாயணத்தில் நிகழ்த்த முக்கியமான திருப்புமுனைகளில் ஒன்று சீதையை கொல்ல முயலும் இலங்கை மன்னன் ராவணின் தங்கையான சூற்பனகையின் மூக்கை ராமனின் சகோதரன் லக்ஷ்மணன் அறுத்தது தான்.

அது நடந்த இடம் தான் மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கும் 'நாசிக்' ஆகும்.

Jean-Pierre Dalbéra

நாசிக்:

நாசிக்:

இராமாயண காலத்தில் நாசிக் நகரில் இருக்கும் பஞ்சவடி என்ற வனப் பகுதியில் தான் ராமன் தனது வனவாச காலத்தில் குடிலமைத்து வாழ்ந்து வந்திருக்கிறார்.

Jagadguru Rambhadrachar

நாசிக்:

நாசிக்:

நாசிக்கில் ஏராளமான ஆன்மீக ஸ்தலங்கள் இருக்கின்றன. இங்கு வாழ்ந்த நாட்களில் ராமர் குளித்த இடமாக சொல்லப்படும் இடம் இன்றும் 'ராம குண்டம்' என பக்தர்களால் வணங்கப்படுகிறது.

இங்குள்ள 'கலராம்' என்ற கோயிலில் கருப்பு நிறத்தில் ராமபிரான் அருள்பாலிக்கிறார்.

படம் : ராம குண்டம்

நாசிக்:

நாசிக்:

படம் : சீதையுடன் அருள்பாலிக்கும் கலராமர்.

நாசிக்:

நாசிக்:

நாசிக் நகரில் ஒவ்வொரு 12 வருடத்திற்கு ஒருமுறை 10கோடி பக்தர்கள் பங்குபெறும் 'கும்ப மேளா' நடக்கிறது.

இங்குள்ள 'திரிம்பகேஷ்வர்' 12ஜோதிர்லிங்க கோயில்களுள் ஒன்றாகும். இங்கு வீற்றிருக்கும்திரிம்பகேஷ்வரரை வழிபட்டால் முக்தி அடைவது நிச்சயம் என பக்தர்களால் நம்பப்படுகிறது.

ஹம்பி :

ஹம்பி :

கவர்ந்து செல்லப்பட்ட காதல் மனைவியை மீட்க தமையனின் துணையை மட்டுமே நம்பி தெற்கே லங்கையை நோக்கி வந்துகொண்டிருந்த ராமன் வானர சேனையை எதிர்கொண்ட இடம் கிஸ்கிந்தை ஆகும்.

இந்த கிஸ்கிந்தை கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹம்பி நகரை ஒட்டி அமைந்திருந்ததாக சொல்லப்படுகிறது.

ஹம்பி :

ஹம்பி :

துங்கபத்திரை நதிக்கரையில் அமைந்திருக்கும் ஹம்பி ஒரு காலத்தில் உலகத்திலேயே மிகச் செழிப்பான நகரமாக இருந்திருக்கிறது. 15நூற்றாண்டில் விஜயநகர மன்னர்களின் பொற்கால ஆட்சியின் தலைநகராக இது திகழ்ந்திருக்கிறது.

அவர்களின் ஆட்சி காலத்தில் கிஸ்கிந்தையும் ஹம்பி நகரின் ஒரு பகுதியாக இருந்திருக்கிறது.

ஹம்பி :

ஹம்பி :

நாம் இன்றும் நினைத்துகூட பார்க்க முடியாத நாகரீக உச்சத்தை அடைந்த ஹம்பி நகரம் காலப்போக்கில் அழிந்து போய் இன்றும் மனிதர்களே வசிக்காத பகுதியாக இருக்கிறது. ஆனாலும் விஜயநகர பேரரசின் காலத்தில் கட்டப்பட்ட கோயில்கள் இன்றும் இருக்கின்றன.

இங்கிருக்கும் 'கற்தேர்' விஜயநகர சிற்பிகளின் வல்லமைக்கு ஒரு சான்றாகும்.

ஹம்பி :

ஹம்பி :

புதுமையான இடங்களுக்கு செல்வதில் ஆர்வமிருக்கும் எவரும் வாழ்கையில் நிச்சயம் வந்து பார்க்க வேண்டிய இடங்களில் ஹம்பியும் ஒன்றாகும்.

ஹம்பி நகரை எப்படி சென்றடைவது என்பது பற்றிய தகவல்களை தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

ஹம்பி :

ஹம்பி :

படம் : ஹம்பியில் உள்ள கோயில் தூண்களை பார்க்கும் போது இவை கல்லில் வடிக்கப்பட்டவையா? அல்லது களி மண்ணில் செய்யப்பட்டவையா? என்ற ஆச்சர்யம் எழுவது தவிர்க்க முடியாததாகும்.

ராமேஸ்வரம் :

ராமேஸ்வரம் :

இந்திய தேசத்தின் தென்கோடி முனையில் அமைந்திருக்கும் புண்ணிய ஸ்தலம் தான் ராமேஸ்வரம் ஆகும்.

கவர்ந்து செல்லப்பட்ட தனது மனைவியை மீட்க ராவணனுடன் போருக்கு செல்லும் முன்பாக ராமன் தனது படைவரிவாரங்களுடன் கூடாரம் அமைத்து தங்கிய இடம் தான் ராமேஸ்வரம்

ராமேஸ்வரம் :

ராமேஸ்வரம் :

சீதையை மீட்க நடந்த யுத்தத்தில் பெரும் சிவ பக்தனான ராவணனை வதம் செய்த பாவத்தில் இருந்து மோட்சம் பெற சிவ பெருமானை வழிபட்ட இடம் தான் இப்போதிருக்கும் ராமலிங்க சுவாமி கோயிலாகும்.

இங்கே கருவறையில் இருக்கும் லிங்கமானது சீதையால் செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.

ராமேஸ்வரம் :

ராமேஸ்வரம் :

ஒவ்வொரு ஹிந்துவும் தனது வாழ்நாளில் ஒருமுறையேனும் காசிக்கும், ராமேஸ்வரதிற்கும் சென்று வழிபட வேண்டும்.

இங்கு வரும் பக்தர்கள் அனைவரும் ராமலிங்க சுவாமி கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களில் ஸ்நானம் செய்தால் நாம் செய்த பாவங்கள் நீங்கி மோட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே இருக்கிறது.

ராமேஸ்வரம் :

ராமேஸ்வரம் :

ராமேஸ்வரத்தில் இருக்கும் தனுஷ்கோடியில் இருந்து தான் ராமர் வானரங்கள் உதவியுடன் இலங்கைக்கு பாலம் அமைத்ததாக சொல்லப்படுகிறது.

ராமேஸ்வரம் :

ராமேஸ்வரம் :

படம் : ராமர் மிதக்கும் பாறைகளை கொண்டு பாலம் அமைத்தார் என்பதற்கு சான்றாக ராமேஸ்வரத்தில் இருக்கும் மிதக்கும் பாறை.

ராமேஸ்வரம் :

ராமேஸ்வரம் :

ராமேஸ்வரம் நகரை பற்றிய இன்னும் பல சுவையான தகவல்கள் மற்றும் அங்கிருக்கும் ஹோட்டல்கள் பற்றிய விவரங்களை தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்