» »இமாச்சல பிரதேசத்தின் மலானா பற்றி நாம் ஏன் தெரிந்துகொள்ளவேண்டும்?

இமாச்சல பிரதேசத்தின் மலானா பற்றி நாம் ஏன் தெரிந்துகொள்ளவேண்டும்?

Written By: Udhaya

இமாச்சல பிரதேசத்தின் இந்த குறிப்பிட்ட பகுதியில் இன்றளவும் வாழும் மக்கள் சில மர்மங்களை தங்களுக்குள் மறைத்து வைத்துள்ளனர் என்பது பல அறிஞர்களின் கூற்று. அவர்கள் இந்தியாவுடன் எந்தவிதத் தொடர்பும் இன்றி, வெளியுலகத்தொடர்பற்று பன்னெடுங்காலமாக வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவுக்குள் இருந்து இந்த ஊருக்குள் யாராவது நுழைய முயற்சித்தால்....? என்ன நடக்கும் தெரியுமா? கொஞ்சம் காத்திருங்கள். அதற்கு முன் இந்த கிராமத்தின் அழகை கொஞ்சம் பார்த்துவிட்டு வரலாம்.

மலானா

மலானா

இமாச்சல பிரதேசத்தின் குல்லு பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம்தான் மலானா.

தனக்கென தனி கலாச்சாரம், பண்பாடு, சமூக கட்டமைப்பு மற்றும் மொழி ஆகியன கொண்டு தனி நாடாகவே தங்களை நினைத்து வாழ்ந்து வருகின்றனர் என்பது நமக்கு நிச்சயம் அதிர்ச்சியைத் தரும். இந்திய அரசே நினைத்தாலும் இந்த கிராமத்துக்குள் நுழைய முடியாது என்று இந்த கிராமமக்கள் தீரமாக நம்புகின்றனர் என்பது நிச்சயம் நம்பதகுந்த செய்தி அல்ல.

Vikram Singh

மாவீரர் அலெக்சண்டரின் படை

மாவீரர் அலெக்சண்டரின் படை


மாவீரர் அலெக்சான்டரின் படை இந்தியாவுக்குள் வந்து பல இடங்களை ஆக்கிரமித்தது என்பது வரலாறு. இது நம்மில் பலருக்கு தெரிந்ததுதான் என்றாலும், அவரது மரணம் தொடர்பான தகவல்கள் இன்றும் துல்லியமானதாக இல்லை என்றுதான் கூறவேண்டும்.

அப்படி அதிர்ச்சி நிறைந்த தகவல்களுடன், அலெக்சாண்டருக்கு இந்த குக்கிராமத்துடன் என்ன தொடர்பு இருந்தது என்பதையும் நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

morisius cosmonaut

இந்திய சாட்சிகள்

இந்திய சாட்சிகள்


அலெக்சாண்டர் இந்தியாவுக்கு படையெடுத்து வந்ததற்கு ஆதாரம் என்றால், அது இக்கிராமத்தின் மூத்தகுடிமக்கள்தான் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அவர்கள் வேறு யாருமல்ல. அலெக்சாண்டரின் படைகளில் இருந்த வீரர்கள்தான். அவர்கள் வயது முதுமை காரணமாகவும், உடல் நலக் குறைவு காரணமாகவும் இங்கேயே தங்கிவிட்டனர் என்கிறார்கள் வரலாற்று அறிஞர்கள்.

பெர்சியாவை வென்ற அலெக்சாண்டர் பின் இந்தியாவுக்கு நுழைகிறார். ஆனால், அவரால் அவ்வளவு எளிதாக பஞ்சாப் மன்னரை வீழ்த்த முடியவில்லை. ஜீலம் நதிக் கரையில் நடக்கும் போரை கடினப்பட்டு வெல்கிறார் அலெக்சாண்டர்.

Parthiv Haldipur

கனாஷி

கனாஷி

தனக்கென தனி வழியும் தனி மொழியும் கொண்ட ஊர் மலானா. இவர்களுக்கு வேறு எந்த மொழியும் தெரியாது. ஒரு சிலர் மட்டும் இந்தி மொழியை கற்றுக்கொண்டுள்ளனர். மேலும் இந்தமொழி கனாஷி என்று அழைக்கப்படுகிறது. இது கிரேக்க - சமேஸ்கிரத மொழிகளின் கலவையாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

Sajith T S

 ஜனநாயக முறைப்படி ஆட்சி

ஜனநாயக முறைப்படி ஆட்சி

இந்த கிராமத்தில்தான் உலகின் முதல் ஜனநாயக ஆட்சி நடைபெற்றது என்றும் கூறுகிறார்கள். அதாவது மன்னர்கள் ஆட்சிகாலத்திலேயே இங்கு ஜனநாயக ஆட்சி நடைபெற்றது என்றும் கூறுகிறார்கள்.

இந்த கிராமத்துக்குள் வெளியாட்கள் யாரும் அவ்வளவு சீக்கிரம் நுழைந்துவிட முடியாது. கிராம ஆட்சியாளர்களிடம் முறைப்படி உரிய அனுமதி வாங்க வேண்டும். அப்படி நுழைந்தாலும், இங்குள்ள எந்த வொரு பொருளையும் தொட யாருக்கும் அனுமதி தரமாட்டார்களாம். அது தீட்டு என்றும், அதைக் கழிக்க ஆட்டை பலி கொடுக்கவேண்டும் என்றும் நம்புகின்றனர் இந்த மக்கள்.

genobz

விழாக்கள்

விழாக்கள்

விழாக்கள் தான் ஒரு இனத்தின் பண்பாட்டை அறிந்து கொள்வதற்கான எளிமையான மூலமாகும். அந்த வகையில் இவர்களின் விழாக்கள் சிறப்பானதாக இருக்கும். படோ மேளா, பஃடி மேளா உள்ளிட்ட இன்னும் சில விழாக்கள் அவ்வப்போது கொண்டாடப்பட்டு வருகிறது.

Sajith T S

கிரேக்கர்கள் பேசிய மொழி

கிரேக்கர்கள் பேசிய மொழி

கனாஷி மொழியைப் பற்றி ஏற்கனவே படித்தோம். அது கிரேக்கர்களின் மொழி என்றும் நம்பப்படுகிறது. அதாவது கிரேக்கத்தின் ஆதி மொழி இன்றும் பேசப்பட்டுவருகிறது.

Sajith T S

குட்டி கிரீஸ்

குட்டி கிரீஸ்

இங்கு செல்பவர்கள் உண்மையில் கிரீஸில் இருப்பதுபோல் உணர்வார்கள். அப்படி இந்த கிராமத்தில் என்னதான் இருக்கிறதோ தெரியவில்லை என்று இந்த கிராமத்துக்கு சென்று வந்தவர்கள் கூறுகின்றனர்.

Sajith T S

Read more about: travel, himachal pradesh