• Follow NativePlanet
Share
» »ஸ்வீட் சாப்பிட பிடிக்குமாங்க உங்களுக்கு..வாங்க தேடி தேடி சாப்பிடலாம்

ஸ்வீட் சாப்பிட பிடிக்குமாங்க உங்களுக்கு..வாங்க தேடி தேடி சாப்பிடலாம்

நம் வாழ்கையில் நடக்கும் ஆனந்தமான தருணங்களை இன்னும் இனிமையாக்குவது இனிப்புகள் தான். திருமணம், குழந்தை பிறப்பு, பிறந்த நாள், பதவி உயர்வு என எல்லா இனிமையான தருணங்களையும் மற்றவர்களுடன் நாம் இனிப்பின் மூலமே பகிர்ந்து கொள்கிறோம். அப்படிப்பட்ட இந்த இனிப்புகளை தேடி ஒரு சுவாரஸ்யமான பயணம் போகலாமா?. இந்தியா முழுக்க எந்தெந்த இடங்களில் என்ன மாதிரியான இனிப்பு வகைகள் பிரபலம் என்பதை தெரிந்து கொள்வோம் இங்கே.

HDFC வங்கியை பயன்படுத்துபவரா நீங்கள்? விமான கட்டணங்களில் 10% தள்ளுபடிக்கான கூப்பனை இங்கே பெற்றிடுங்கள்

 ராஜஸ்தான் - கீவர் :

ராஜஸ்தான் - கீவர் :

இந்தியாவின் சுற்றுலா தலைநகரம் என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் வாழ்நாளில் ஒரு முறையாவது நிச்சயம் செல்ல வேண்டிய இடமாகும். இந்திய அரசர்களின் ஆடம்பரமான ராஜ வாழ்க்கையை பற்றி அறிந்துகொள்வதோடு மட்டும் நின்றுவிடாமல் அவர்கள் வாழ்ந்த அரண்மனையிலும் தங்கி மகிழலாம். அப்படிப்பட்ட ராஜஸ்தான் மாநிலத்தின் பிரபலமான இனிப்பு பண்டம் தான் 'கீவர்' ஆகும்.

Photo:Onef9day

 ராஜஸ்தான் - கீவர் :

ராஜஸ்தான் - கீவர் :

மைதா, நெய், பால் போன்றவற்றை கொண்டு எளிமையாக தயாரிக்கப்படும் இந்த இனிப்பு பலகாரம் பெரும்பாலும் 'தீஜ்' என்னும் வசந்தகாலத்தை வரவேற்கும் பண்டிகையின் போது வீடுகளில் தாயாரிக்கப்படுகிறது. இந்த கீவரிலேயே சாதாரண கீவர், மலாய் கீவர், மாவா கீவர் என பல வகைகள் உண்டு.

கடையில் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கீவர்.

Photo:Rajesh_India

 ராஜஸ்தான் - கீவர் :

ராஜஸ்தான் - கீவர் :

இதன் அற்புதமான சுவை காரணமாக ராஜஸ்தானை ஒட்டியுள்ள பக்கத்து மாநிலங்களான ஹரியானா, பஞ்சாப், டெல்லி, குஜராத், உத்தர பிரதேசம் போன்ற இடங்களில் வாழும் மக்களும் பண்டிகை காலங்களில் தங்கள் வீடுகளில் கீவரை தயாரிகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தை பற்றிய இன்னும் பல சுவையான தகவல்களை தமிழின் No.1 பயண இணையதளமான தமிழ் நேடிவ் பிளானட்டில் அறிந்து கொள்ளுங்கள்.

கீவரை சுவைபார்க்கும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணி ஒருவர்.

Photo:Eric Parker

மைசூர் - மைசூர் பாக் :

மைசூர் - மைசூர் பாக் :

நம்மவர்களுக்கு ரொம்பவுமே பிடித்த, ரொம்பவும் சுவையான இனிப்பு பண்டம் தான் மைசூர் பாக் ஆகும். கிட்டத்தட்ட எல்லா தமிழர் வீட்டு சுப நிகழ்ச்சிகளிலும் பிரதான இடம் பிடிக்கும் இந்த இனிப்பு எங்கே முதன்முதலில் தயாரிக்கப்பட்டது என்பதை இதன் பெயரில் இருந்தே நாம் அறிந்துகொள்ள முடியும். இது முதன் முதலில் மைசூர் மகாராஜாவின் அரண்மனையில் தயாரிக்கப்பட்டதாலேயே இதற்கு மைசூர் பாக் என்ற பெயர் வந்திருக்கிறது.

Photo:Charles Haynes

மைசூர் - மைசூர் பாக் :

மைசூர் - மைசூர் பாக் :

இந்த இனிப்பை கண்டுபிடித்தவர் மைசூர் அரண்மனை சமையல் அறையில் பணிபுரிந்த காகாசுர மதப்பா என்பவராவார். கடலை மாவு, நெய் போன்றவை கொண்டு தாயரிக்கப்படும் இந்த மைசூர் பாக்கிற்கு மிகவும் பெயர் போன கடையென்றால் அது கோயம்பத்தூரில் இருக்கும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தான். மற்ற எந்த இடத்தில் தயாரிக்கப்படும் மைசூர் பாக்கை காட்டிலும் இங்கே தயாரிக்கப்படுபவை அதிக தித்திப்புடன், வாயில் வைத்ததுமே கரைந்துவிடும் பக்குவத்தில் இருக்கின்றன.

அடுத்த முறை கோயம்பத்தூருக்கு சென்றால் நிச்சயம் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கடையில் மைசூர் பாக்கை சுவைத்து பார்க்க மறந்து விடாதீர்கள்.

ஆக்ரா - பேத்தா :

ஆக்ரா - பேத்தா :

உலகின் மிக உன்னதமான கட்டிடமொன்று காலத்தை வென்ற காதலை தன்னுள் கொண்டு யமுனை ஆற்றின் கரையில் வீற்றிருக்கும் நகரம் ஆக்ரா. வாழ்கையில் எல்லோரும் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமான தாஜ்மஹால் அமைந்திருக்கும் இடமான ஆக்ராவின் பிரபலமான இனிப்பு வகை பேத்தா எனப்படும் அரசானிக்காய் அல்வா ஆகும்.

ஆக்ரா - பேத்தா :

ஆக்ரா - பேத்தா :

பொதுவாக வெள்ளை நிறத்தில் இருக்கும் இது வட இந்தியா மட்டுமில்லாது பாகிஸ்தானிலும் மிக பிரபலமான இனிப்பு வகையாகும். இன்றுபலகார கடைகளில் கேசர் பேத்தா, அன்கூரி பேத்தா என விதவிதமாகவும் இவை கிடைகின்றன.

Photo:Garrett Ziegler

மகாராஷ்டிரா - மோதகம் :

மகாராஷ்டிரா - மோதகம் :

நம்ம ஊரில் கொழுக்கட்டை என்று சொல்வோமே அதே தான் மகாராஷ்டிரா மாநிலத்தில் மோதகம் என்று அழைக்கப்படுகிறது. மோதகம் விநாயகருக்கு பிடித்த உணவாக அறியப்படுகிறது. மராத்தியர்களின் விருப்பத்துக்குரிய கடவுளாக விநாயகர் இருப்பதாலேயே அங்கு அதி சுவையான மோதகம் தயாரிக்கப்படுகிறது.

Photo:Sudhamshu Hebbar

மகாராஷ்டிரா - மோதகம் :

மகாராஷ்டிரா - மோதகம் :

அரிசி மாவு, தேங்காய் துருவல் போன்றவை கொண்டு தயாரிக்கப்படும் இவை விநாயகர் சதுர்த்தியின் போது பிரசாதமாக வழங்கப்படுகிறது. இன்று விதவிதமான வகைகளில் மோதகங்கள் கிடைக்கின்றன. வாழைப்பழ மோதகம், மோத்திசொர் மோதகம், சாக்லேட் மோதகம் போன்றவற்றை சுவைக்க உங்களுக்கு விருப்பமென்றால் வாய்ப்புக்கிடைக்கும் போது மகாராஷ்டிர மாநிலத்துக்கு சென்று வாருங்கள்.

மேற்கு வங்காளம் - ரோஷோ குல்லாஸ் :

மேற்கு வங்காளம் - ரோஷோ குல்லாஸ் :

நாம் ராசா குல்லா என விளிப்பது தவறானது. இவை வங்காள மொழியில் 'ரோஷோ குல்லாஸ்' என்றே அழைக்கப்படுகின்றன. இன்று இவை மேற்கு வங்காளத்தின் முக்கியமான அம்சங்களில் ஒன்றாக பார்க்கப்பட்டாலும் உண்மையில் இவை ஓடிஸா மாநிலத்தில் தான் தோன்றியிருகின்றன.

Photo:Shalu Sharma

மேற்கு வங்காளம் - ரோஷோ குல்லாஸ் :

மேற்கு வங்காளம் - ரோஷோ குல்லாஸ் :

வங்காளத்தில் கிடைக்கும் ரோஷோ குல்லாஸ் சிறிய வெள்ளை நிற மெது மெது பந்து போல இருக்கின்றன. சர்க்கரை நீரில் ஊறவைக்கப்பட்ட இவை அற்புதமான சுவையுடையவை. வங்காளத்தில் மட்டும் இல்லாது ஓடிஸா மற்றும் மொரிசியஸ் நாட்டிலும் இவை தாயாரிக்கப்படுகின்றன. ஆனால் அவை வங்காளத்தில் இருப்பதை காட்டிலும் நிறம் மட்டும் சுவையில் சற்று மாறுபடுகின்றன. மேற்கு வங்காளத்தில் இந்த ரோஷோ குல்லாஸ்ஸை சுவைக்க சிறந்த இடமாக கே.சி. தாஸ் பேக்கரி சொல்லப்படுகிறது.

Photo:Sundari C

ஸ்ரீவில்லிப்புத்தூர் - பால்கோவா :

ஸ்ரீவில்லிப்புத்தூர் - பால்கோவா :

ஒரு முறை பால்கோவாவை சுவைத்தவர்கள் பிறகு வாழ்க்கை முழுவதற்கும் அதற்கு அடிமையாகி விடுவார்கள். பாலில் இருந்து பலவகையான இனிப்புகள் தயாரிக்கப்பட்டாலும் அவை எல்லாவற்றை விடவும் அதிக சுவையானது பால்கோவா தான். இந்த பால்கோவா தயாரிப்புக்கு மிகவும் பெயர் போன இடம் தமிழ் நாட்டிலுள்ள ஸ்ரீ வில்லிப்புத்தூர் நகரம் தான்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் - பால்கோவா :

ஸ்ரீவில்லிப்புத்தூர் - பால்கோவா :

இங்குள்ள மக்கள்பரம்பரை பரம்பரையாக குடிசைத்தொழிலாக பால்கோவா தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளூர்களுக்கு மட்டுமில்லாது வெளிநாடுகளுக்கும் இவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நவீன யுகத்தில் பல இணையதளங்கள் மூலமும் இவை விற்பனைக்கு வந்துவிட்டன.

ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள புகழ் பெற்ற ஆண்டாள் கோயில் கோபுரம்.

More News

    Read more about: agra rajasthan travel food travel
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+