Search
  • Follow NativePlanet
Share
» »லாண்ஸ்டவுனின் புத்துயிரூட்டும் மலையேற்றப் பயணம் செல்வோம்!

லாண்ஸ்டவுனின் புத்துயிரூட்டும் மலையேற்றப் பயணம் செல்வோம்!

By Udhaya

உத்திரகண்ட் மாநிலத்தில் மலைத் தொடரின் மேல் 1706 அடி உயரத்தில் அமைந்துள்ள சூப்பரான டிரெக்கிங் தளம் இந்த லாண்ஸ்டவுன். போர் நினைவு சின்னம் ட்ரெண்ட்டை சேர்ந்த அப்போதைய இந்திய தலைமை கமாண்டரன லார்ட் ராவ்லின்ஷன்' என்பவரால் 1923 ம் ஆண்டு நவம்பர் 11 ம் தேதி நிறுவப்பட்டது. கார்வாலி உணவகம் 1888 இல் பிரிட்டிஷாரால் கட்டப்பட்ட பழமையான கட்டிடங்களில் ஒன்று. கார்வாலி உணவகம் தற்போது ஆசியாவின் மிக முக்கியமான அருங்காட்சியமாக திகழ்கிறது. இங்கு நிறைய இடங்கள் சுற்றிப் பார்க்கவும், சாகச விளையாட்டுக்காகவும் அமைந்துள்ளது. வாருங்கள் அந்த இடத்துக்கு ஒரு மலையேற்றப் பயணம் செய்வோம்.

ஏரியும் தேவாலயுமும்

ஏரியும் தேவாலயுமும்

புல்லா டால், லாண்ஸ்டவுனில் உள்ள மற்றொரு முக்கியமான இடமாகும். இது கர்வால் ரைஃபிள்ஸின் இளம் வீரர்களுக்காக உருவாக்கப்பட்ட அழகான செயற்கை ஏரி. இந்த ஏரியின் பெயரான புல்லா என்பது ஒரு கார்வாலி வார்த்தையாகும்.

ராயல் பொறியாளரான கலோனல்` A.H.B. ஹியூம்' என்பவரால் 1895 ல் கட்டப்பட்ட `செயின்ட் மேரி' தேவாலயம் மற்றுமொறு குறிப்பிடத்தக்க சுற்றுலா மையம் ஆகும். 1947 இல் கைவிடப்பட்ட இத்தேவாலயத்தை , கர்வால் ரைஃபிள் ராணுவ மையம் புதுபித்துக் கட்டியது. இங்கு சுதந்திர காலத்திற்கு முந்தய இந்தியாவின் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. .

Sudhanshu.s.s

சுற்றுலா மையங்கள்

சுற்றுலா மையங்கள்

ராணுவ அருங்காட்சியகம், துர்கா தேவி கோவில், புனித ஜான் சர்ச், ஹவாகர், மற்றும் டிப்-ன்-டாப் ஆகியன குறிப்பிடத்தக்க சுற்றுலா மையங்கள் ஆகும்.

Sudhanshusinghs4321

சாகச பயணிகள்

சாகச பயணிகள்

சாகசத்தை விரும்பும் பயணிகள் மலையில் ட்ரெக்கிங் செய்தும், காடுகளில் உலவியும் மகிழலாம். இங்கே உள்ள `காதலர்களின் பாதை' தலைசிறந்த மலைப்பாதையாக கருதப்படுகிறது. இப்பாதையில் ட்ரெக்கிங் செய்வது நமக்கு நம்பமுடியாத அனுபவத்தை தருகிறது.

Mishra.vishesh620

காடுகளில் உலா

காடுகளில் உலா

இப்பகுதியில் உள்ள பச்சைப்பசேல் காடுகள், பலவகையான தனித்தன்மை வாய்ந்த தாவரங்கள் மற்றும் விலங்கினங்களால் நிரம்பியுள்ளது. சுற்றுலா பயணிகள் இங்கு உள்ள அழகான காடுகளில் உலவி வரலாம். இங்கு உள்ள பல சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்கள், மிகக் குறைந்த செலவில் ட்ரெக்கிங் மற்றும் சஃபாரி முதலியவற்றை ஏற்பாடு செய்து தருகின்றனர்.

Mishra.vishesh620

எப்படி அடைவது

எப்படி அடைவது

லாண்ஸ்டவுனை விமானம், ரயில், மற்றும் சாலை மார்கமாக எளிதில் அணுகலாம். டேராடூனில் அமைந்துள்ள `ஜாலி கிராண்ட்' விமான நிலையம் லாண்ஸ்டவுனுக்கு அருகில் உள்ள விமான நிலையம் ஆகும். கோட்வாரா ரயில் நிலையம் லாண்ஸ்டவுனுக்கு மிக அருகில் உள்ளது. மார்ச் முதல் நவம்பர் வரை உள்ள 9 மாதங்கள் லாண்ஸ்டவுனை சுற்றி பார்ப்பதற்கு மிகவும் உகந்த பருவமாகும். அச்சமயங்களில் இப்பகுதியில் சாதகமான சூழ்நிலை நிலவும்.

Sandeep Brar

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

டிப்-ன்-டாப்

டிப்-ன்-டாப், லாண்ஸ்டவுனில் உள்ள செயின்ட் மேரி தேவாலயம் அருகே மலைமுகட்டில் அமைந்துள்ள ஒரு பிரபலமான சுற்றுலா பகுதியாகும். இது டிஃபன் டாப் என்றும் அழைக்கப்படுகின்றது.

பயணிகள் இங்கிருந்து பனி படர்ந்த இமாலயத்தின் அற்புதமான காட்சிகளை கண்டு களிக்கலாம். மேலும், இங்கிருந்து திபெத்தின் சில பகுதிகளை பார்க்க முடியும்.

புனித ஜான் சர்ச்

புனித ஜான் சர்ச், லாண்ஸ்டவுனின் `மால்' சாலையில் அமைந்துள்ள ஒரு குறிப்பிடத்தக்க மதச்சின்னமாகும். இது பிரிட்ஷ் கால கட்டடக்கலைக்கு சான்றாக உள்ளது. முந்தைய கலத்தில், ஒரு காட்டு பங்களாவாக இருந்த இந்த ரோமன் கத்தோலிக்க திருச்சபை, 1980-ம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது.

லாண்ஸ்டவுனில் உள்ள ஓரே தேவாலயம் இதுவாகும். தேவாலயத்தின் கட்டுமானம் 1936-ஆம் ஆண்டு ஆக்ரா மறை மாவட்டத்தின் வழிகாட்டுதலின் படி ஆரம்பிக்கப்பட்டு, 1937-ல் நிறைவு பெற்றது.

ஜங்கிள் சஃபாரி

லாண்ஸ்டவுனுக்கு சுற்றுலா வரும் பயணிகள், ஜங்கிள் சஃபாரியில் ஈடுபடுவதில் அதிக ஆர்வக் காட்டி வருகின்றனர். இங்கு இயற்கையின் மடியில் அமைந்துள்ள பச்சைப்பசேலான ஓக் மற்றும் பைன் மரங்கள், பார்வையாளர்களுக்கு மனதை விட்டு நீங்காத பரவசத்தை தருகின்றன.

இக்காடுகளில், தனித்துவம் வாய்ந்த ஏராளமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் உள்ளன. எனவே, இவ்விடம் உயிரியல் ஆராய்ச்சிக்கு மிகவும் உகந்ததாக கருதப்படுகின்றது.

இப்பகுதியில் ஆண்டு முழுவதும் இதமான வானிலையே நிலவுகிறது.

கன்வ ஆஸ்ரமம்

லாண்ஸ்டவுனின் மிக முக்கியமான சுற்றுலா தலமாகிய, கன்வ ஆஸ்ரமம், பச்சைப்பசேல் காடுகள் மற்றும் குன்றுகளின் மத்தியில் அமைந்துள்ளது. இவ்வாஸ்ரமத்தின் அழகை அதிகரிக்கும் மாலினி நதி, ஆஸ்ரமத்திற்கு மிக அருகில் பாய்ந்து ஓடுகிறது.

இது தியானம் புரிய ஒரு சிறந்த இடமாக கருதப்படுகிறது. இங்கு பக்தர்கள் தங்க வசதியான விடுதிகள் உள்ளன. மேலும் `ஸகஸ்தரதாரா' நீர்வீழ்ச்சி எனும் அழகிய நீர்வீழ்ச்சி ஆஸ்ரமத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது.

இந்து புராண கதைகளின் படி, பிரபல ராஜரிஷி, விஸ்வாமித்திரர் இந்த இடத்தில் தவம் புரிந்தார். அவரின் கடுந்தவம் சொர்கத்தின் அரசன் இந்திரனை பயத்தில் ஆழ்தியது. எனவே இந்திரன், விஸ்வாமித்திரரின் தவத்தை கலைக்க, மேனகை என்கிற தெய்வீக கன்னியை அனுப்பினான்.

துர்கா தேவி கோயில்

துர்கா தேவி கோயில் லாண்ஸ்டவுனேவிலிருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு குடவரை கோவில் ஆகும். அது கஹொஹ் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்த துர்கா தேவி கோவில், நாட்டில் உள்ள பழமையான சித்த பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

Sudhanshusinghs4321

Read more about: travel temple india
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more