» »கோவாக்கு பக்கத்துல ஒரு குக்கிராமம்..ஒரு நதி!! இந்த இடத்த சினிமாக்காரங்க பார்த்தா அவ்ளோதான்!!

கோவாக்கு பக்கத்துல ஒரு குக்கிராமம்..ஒரு நதி!! இந்த இடத்த சினிமாக்காரங்க பார்த்தா அவ்ளோதான்!!

Written By: Bala Karthik

காளி நதிக்கரையில் காணப்படும் சிறு குக்கிராமம் தான் டன்டேலி எனப்பட அவ்விடமானது வனவிலங்கு வாழ்க்கை, பசுமையான காடுகள், சாகச விளையாட்டுகள், மூழ்கிய அழகு என கண்கவர் காட்சியை தருகிறது. இந்த மதிமயக்கும் நகரமானது வனவிலங்கு வாழ்க்கை மற்றும் சில ஆர்வத்தை தரும் பறவைகளுக்கு வாழிடமாக விளங்குகிறது.

கோவாவிலிருந்து 125 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் டன்டேலியை 'விரிவுப்படுத்தப்பட்ட கோவா' என அழைக்கிறோம். இங்கே காணப்படும் காடுகளின் அமைதி பெருமையில் குளிர்காயும் நீங்கள், சவுகரியமான கூடாரத்தையும் கொண்டிருக்க, பசுமைமாறா காடுகளும், இயற்கையின் பிடித்தமும் என புகைப்படக்கருவிக்கு விருந்தாக அமைகிறது.

இங்கே காடுகளின் நீர் பாய்ச்சலானது சாகச விரும்பிகளுக்கு த்ரில்லாக அமைய, இங்கே காணப்படும் வெள்ளை நீர் படகு சவாரியை நாம் தவிர்த்திடக்கூடாத தாகவும் அமையும். இந்த 'சாகசம்' என்னும் வார்த்தையானது உங்களுடைய அட்ரினலினை அதிவேகத்தில் சுரக்க செய்ய, எண்ணற்ற செயல்களான கயாகிங்க், பரிசல் பயணம், மலை பயணம், கயிறு மூலம் ஏறுதல் மற்றும் நதி கடப்பு என பலவும் இங்கே காணப்படுகிறது.

நீங்கள் ஒரு சாகச விரும்பி என்றால், இவ்விடத்தை கண்டிப்பாக பாருங்கள்.

வழியின் வரைப்படம்

தொடக்க புள்ளி: பெங்களூரு

இலக்கு: டன்டேலி

 டன்டேலியை நாம் காண சிறந்த நேரங்கள்:

டன்டேலியை நாம் காண சிறந்த நேரங்கள்:


குளிர்காலமானது இவ்விடத்தை காண சிறந்த நேரமாக அமைகிறது. இருப்பினும், அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்கள் இவ்விடத்தை நாம் காண ஏதுவாக அமைகிறது. கோடைக்காலத்தில் இவ்விடமானது மிதமாக அமைய, இந்த கால நிலையில் நம்மால் இவ்விடத்தை காணவும் முடிகிறது. பருவமழைக்காலமானது குறைவான அறிவுறுத்தல்கொண்டு இப்பயணத்திற்கு ஏற்று அமைகிறது.

டன்டேலியை நாம் அடைவது எப்படி?

டன்டேலியை நாம் அடைவது எப்படி?

சாலை மார்க்கமாக அடைவது எப்படி?

பெங்களூருவிலிருந்து டன்டேலிக்கான ஒட்டுமொத்த தூரமாக தோராயமாக 460 கிலோமீட்டர் இருக்க, வழியாக முதலாம் வழியும் அமைய, இரண்டாம் வழியாக நாம் பயணிப்பதன் மூலம் 550 கிலோமீட்டரும் காணப்படுகிறது. இவ்விடத்தை நாம் அடைய இரு வழிகளானது காணப்படுகிறது.

வழி 1: பெங்களூரு - ஷிமோகா சாலை - ராஜாஜி நகரின் தும்கூர் பிரதான சாலை - கல்கட்கி - ஹலியல் கலகட்கி சாலை வழி தேசிய நெடுஞ்சாலை 48.

வழி 2: பெங்களூரு - ஹைதராபாத் நெடுஞ்சாலை - ஸ்ரீ நகர் கன்னியாகுமரி நெடுஞ்சாலை வழி தேசிய நெடுஞ்சாலை 48.

முதலாம் வழியானது பரிந்துரை செய்யப்படுகிறது. இவ்வழியால் நாம் இலக்கை எட்ட 7.5 மணி நேரங்கள் ஆக, இரண்டாம் வழியாக 9.5 மணி நேரமாகவும் நீண்ட தூரமாக அமைகிறது.

 பெங்களூரு முதல் டன்டேலி ஷிமோகா சாலை:

பெங்களூரு முதல் டன்டேலி ஷிமோகா சாலை:

இவ்விடத்திற்கான போக்குவரத்தாக பல வழிகள் அமைய, அவற்றுள் ஒன்றுதான் சாலை வழியாகும். நாம் சரியான வழியை தேர்ந்தெடுக்க, இயற்கை அற்புதத்தையும் அது நமக்கு தவறாமல் தர! நீண்ட தூர பயணத்தில் அசதியும் நமக்கு காணப்படுவதில்லை என்பதோடு, இந்த வழியில் நாம் செல்வதன் மூலம் தாவி தாவி (ஆள் மாற்றாக) வண்டியை ஓட்டியும் மனமகிழலாம். நீங்கள் உங்களுடைய காரை எடுத்து செல்ல விரும்பாவிட்டால் வாடகைக்கு காரை எடுத்து செல்வது நலம்.

பெங்களூருவிலிருந்து அதிகாலையில் நாம் புறப்பட, அதிவேகத்தில் இந்த தொலைத்தூரத்தை நாம் அடைகிறோம். தும்கூர் வழியாக நாம் குறைவான நேரத்தில் இவ்விடத்தை அடைகிறோம். இவ்வழியில் காணப்படும் பாரம்பரிய பெங்களூருவாசிகளின் காலை உணவையும் சுவைக்கிறோம்.

பெங்களூருவிலிருந்து 70 கிலோமீட்டர் பயணமாக நாம் தும்கூர் மாவட்டத்தை அடைகிறோம். இந்த பயணத்தில் ஆலயங்கள் சூழ்ந்திருப்பது சந்தேகமற்ற அழகையும் நமக்கு தந்திடும். நீங்கள் இங்கே சில மணி நேரங்கள் செலவிடுவதன் மூலம் சித்தகங்கா எனப்படும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான கோயிலை கண்டு ரசித்திடலாம். இந்த கல்வி மையத்தை தவிர்த்து, இவ்விடமானது யாத்ரீகத்தளத்தையும், மாணவர்களின் சுவையூட்டும் உணவையும் கொண்டிருக்க, இலவசமாகவும் அது தரப்படுகிறது.

தும்கூரிலிருந்து தோராயமாக 50 கிலோமீட்டர் இருக்க, சிராவை நாம் அடைகிறோம். நீங்கள் நெருக்கமான வாழ்க்கை விட்டு வெளி வர நினைத்தால், அதற்கு சிரா உங்களுக்கு கண்டிப்பாக உதவக்கூடும். வல்லப்புரம் மந்திர் மற்றும் ஸ்ரீ குருகுந்தபிரமேஷ்வரா நாம் காண வேண்டிய இடமாக அமைகிறது.

தாவனங்கரே:

தாவனங்கரே:


அடுத்த நிறுத்தமாக, சிராவிலிருந்து 143 கிலோமீட்டரில் காணப்படும் தாவனங்கரே:, ‘தென்னிந்தியாவின் ஆடை தலைநகரம்' என அழைக்கப்படுகிறது. இவ்விடமானது எண்ணற்ற தொழிற்சாலைகளையும், ஆலைகளையும், சுற்றுலா இடங்களையும் கொண்டிருக்கிறது. இவ்விடமானதில் நாம் ஓரிரு நாட்கள் தங்க, உங்கள் சட்டை பையில் நேரத்தை பத்திரப்படுத்தி இருந்தால், இந்த தூரத்தை அழகாக அமைதியாக மெதுவாக நாம் கடக்க! குண்டுவாடா கேரி, தீர்த்த ராமேஷ்வரா, ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி ஆலயம், ஈஸ்வர ஆலயம் என ஈர்க்கும் பலவற்றையும் நம்மால் இங்கே காண முடியும்.

கல்கட்கி:

கல்கட்கி:

தாவனங்கரேயிலிருந்து 156 கிலோமீட்டர் நாம் செல்ல, யெல்லப்பூரில் மிக அழகிய சூரிய அஸ்தமனத்தை நாம் பார்க்கிறோம். இங்கே காணப்படும் நிறுத்தமானது மலையில் விரிவடைந்து பள்ளத்தாக்குகளை கொண்டும் காணப்படுகிறது. சத்தோடி வீழ்ச்சி, மகோட் வீழ்ச்சி, சந்திரமௌலேஷ்வர ஆலயம், ரூபாத்துங்கா மலை என எண்ணற்ற சிறந்த ஈர்ப்புகளையும் இவ்விடம் கொண்டிருக்கிறது.

கல்கட்கியிலிருந்து 61 கிலோமீட்டர் தொலைவில், இலக்கை நாம் அடைய! டன்டேலியில் ஒளிந்திருக்கும் மர்ம அழகையும் நாம் ரசிக்க தொடங்குகிறோம்.

போக்குவரத்துக்கான மற்ற பிற வழிகள்:

போக்குவரத்துக்கான மற்ற பிற வழிகள்:

ஆகாய மார்க்கமாக அடைவது எப்படி?

பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஹுப்பிலிக்கு (ஐந்து விமானங்கள் வாரந்தோரும்) காணப்படுகிறது. இந்த பயணத்துக்கான நேரமாக தோராயமாக 1.5 மணி நேரங்கள் ஆகிறது.

தண்டவாள மார்க்கமாக அடைவது எப்படி?

பெங்களூரு சந்திப்பிலிருந்து தினமும் இராணி சென்னம்மா செல்கிறது. நீங்கள் பெல்கௌம் சந்திப்பில் இறங்கிட, அவ்விடம் பல முக்கிய நகரங்களுடன் இணைந்து காணப்படுகிறது. இங்கிருந்து 85 கிலோமீட்டர் தொலைவில் டன்டேலி காணப்படுகிறது. பெங்களூருவிலிருந்து அல்னாவர் சந்திப்பிற்கு இரயில்கள் ஓடிக்கொண்டிருக்கிறது. அல்னாவர் சந்திப்பிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் டன்டேலி காணப்படுகிறது.


சாலை மார்க்கமாக அடைவது எப்படி?

பெங்களூரு மற்றும் டன்டேலிக்கு நேரடியாக பேருந்து காணப்படுகிறது. இதற்கான விலையாக 600 ரூபாயும் இருக்கிறது.

டன்டேலியில் நாம் பார்க்க வேண்டிய இடங்களும் செய்ய வேண்டிய செயல்களும்:


பயணம் செல்லுதல் (மலை ஏறுதல்) என்பது டன்டேலியில் முக்கியமாக அமைகிறது. மேலும் இந்த பயணம் பற்றி நாம் பல தகவலை தெரிந்துக்கொள்ளலாம்.

நதிப் படகு சவாரி:

நதிப் படகு சவாரி:

காளி நதிக்கரையில் டன்டேலி அமைந்திருக்க, வெள்ளை நிற நதிப்படகு சவாரிக்கு இவ்விடம் சிறந்த இடமாக விளங்குகிறது. இந்த நதியானது வேகமாக பாய அது ஆஸ்திரிய மன நிலைக்கொண்டவருக்கும், கொந்தளிப்புடன் இருப்பவருக்கும் மன அமைதியை தரும் இடமாக அமையக்கூடும். வெள்ளை நிற நதிப்படகுப்பயணமானது மறுவடிவம் தந்து த்ரில்லர் அனுபவத்தை மனதில் பதிக்கிறது.

கயாகிங்க் மற்றும் பிற சாகச செயல்கள்:

கயாகிங்க் மற்றும் பிற சாகச செயல்கள்:

நதி நீர் படகுசவாரிக்கு பின்னர், டன்டேலியில் காணப்படும் இரண்டாவது சாகச செயல் தான் கயாகிங்க் ஆகும். இந்த கயாக் எனப்படுவது ஒற்றை நபர் படகாக அமைய, அனுபவமிக்க நபரின் உதவியால் இந்த நதியை நம்மால் கடக்கவும் முடிகிறது. கயாகிங்கை கடந்து, அனுபவமிக்க பரிசல் பயணம், ரெப்பெல்லிங்க், ட்ரெக்கிங்க், பறவை பார்த்தல் என பலவற்றையும் கொண்டிருக்கிறது இந்த காளி நதிக்கரை. கயிற்று செயல்கள், வில் வித்தை, குழாய், நதிக்கடப்பு என பல வித சாகச செயலையும் கொண்டு மனதில் மகிழ்ச்சியை தருகிறது.

நீர் சாகசங்கள் மற்றும் காட்டு சவாரி:

நீர் சாகசங்கள் மற்றும் காட்டு சவாரி:

டன்டேலியில் நாம் எங்கே சென்றாலும், நீர் விளையாட்டு சாகசம் என்பது கண்டிப்பாக செய்ய வேண்டிய ஒன்றாக அமைகிறது. தூய்மையான காற்று மத்தியில், இரகசியங்கள் மனதை தழுவ அழகிய இலையுதிர் காடுகளும் மனதை இதமாக்க முயல்கிறது. காட்டின் வழியே உலாவ, விதவிதமான கவர்ச்சிகரமான பறவைகளையும், விலங்கையும் பார்த்திட, உள்ளூர் கலாச்சாரத்தின் அழகையும் நாம் காண்பதோடு நெருப்பு மூட்டி, இனிமையான உணவை உண்ணுதல், நாடோடி பழங்குடியினரின் நடனமென சிறப்பாகவும் செல்லக்கூடும்.

கவலா குகைகள்:

கவலா குகைகள்:

டன்டேலி வனவிலங்கு சரணாலயத்தின் இதயமாக, ஆன்மீக உணர்வுடன் கூடிய சிவலிங்கா காணப்பட, பெரும் கசித்துளிப்படிவுடன் இயற்கையாக உருவாகி இருக்கிறது. 375 படிகளை நாம் இறங்க, குகையின் நுழைவாயில் காணப்பட, இங்கே காணப்படும் தெய்வத்தையும் நாம் பிரார்த்தனை செய்து வலம் வருகிறோம்.

டன்டேலி வனவிலங்கு சரணாலயம்:

டன்டேலி வனவிலங்கு சரணாலயம்:

மிகவும் ஈர்க்கும், இரண்டாவது பெரிய வனவிலங்கு சரணாலயமாக கர்நாடகாவில் அமைந்திருக்கும் இவ்விடம், இப்பகுதியில் பலவித பறவையினத்தையும் கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். இந்த அழகிய காடானது நம்மை ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல் அசாதாரண ஒளியையும் தர, அத்துடன் கறுப்பு சிறுத்தைப் புலிகள், சிறுத்தைப்புலிகள், புலிகள், ஹோர்ன்பில், மீன்கொத்தி என பலவற்றையும் கொண்டிருக்கிறது. இவ்விடத்திற்கான வசதியை நாம் முன்பதிவு செய்வதோடு, வரைப்படம் என நம்முடைய பயண திட்டத்தையும் தீட்ட வேண்டியது அவசியமாகிறது.

Read more about: travel, temple