» »மனதிற்கு உற்சாகமூட்டும் பயணம் தேவையா? அப்போ பீமேஷ்வரிக்கு கிளம்புங்க!!

மனதிற்கு உற்சாகமூட்டும் பயணம் தேவையா? அப்போ பீமேஷ்வரிக்கு கிளம்புங்க!!

Written By: Bala Karthik

கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்திலுள்ள பீமேஷ்வரி, எண்ணற்ற செயல்களை கொண்டிருக்க, பெங்களூருவிலிருந்து தோராயமாக 100 கிலோமீட்டர் தொலைவிலும் காணப்படுமோர் சிறிய நகரமும் கூட. எண்ணற்ற சாகசங்களை காண ஏங்கும் ஆர்வலர்களுக்கு, தங்களுடைய நகரத்து நெரிசல் வாழ்க்கையை உடைத்தெறிவதோடு, பீமேஷ்வரிக்கு பொட்டிப்படுக்கைகளை கட்டிக்கொண்டும் புறப்பட தயாராகக்கூடிய உற்சாகமூட்டும் ஒரு இடமும் கூட.

சுற்றுச்சூழல் இடத்திற்கு பெயர்பெற்ற இவ்விடம், காவேரியில் வாழும் இயற்கை மீனாக மஷீரையும் கொண்டிருக்க, உலகிலே சிறந்த மீன்வகைகளுள் ஒன்றாகவும் இது இருக்கிறது. அதே காரணத்தால், மீன் பிடி முகாமையும் பீமேஷ்வரி கொண்டிருக்க, சுற்றுல பயணிகள் பொதுவாக இவ்விடத்தில் நிறுத்தி சிறந்த மீன்களையும் பார்க்கின்றனர்.

இந்த மீன்பிடி முகாமை தவிர்த்து, எண்ணற்ற சாகசங்களான வெள்ளை-நீர் படகுசவாரி, ட்ரெக்கிங்க், கயாகிங்க் என பெயர் சொல்லும் சிலவற்றிற்கும் சிறந்த இடமாக இது அமையக்கூடும். இவ்விடமானது சிவானசமுத்ர வீழ்ச்சி மற்றும் மேகதாதுவிற்கு இடையே அமைந்தும் காணப்படுகிறது. பீமேஷ்வரியை காண சிறந்த நேரமாக அக்டோபரிலிருந்து பிப்ரவரி வரையில் காணப்படுகிறது.

 பெங்களூருவிலிருந்து பீமேஷ்வரிக்கான வழி:

பெங்களூருவிலிருந்து பீமேஷ்வரிக்கான வழி:

வழி 1: ராஜா ராம்மோகன் ராய் சாலை/ மைசூரு சாலை. - NICE மைசூரு - பெங்களூரு விரைவுவழி - தேசிய நெடுஞ்சாலை 209 - பசவன்னா பேட்டா காடு - பீமேஷ்வரி (105 கிலோமீட்டர் - 3 மணி நேரம்)

வழி 2: கஸ்தூரிபா சாலை. - சங்கி சாலை. - CNR கீழ்வழி/ CV ராமன் சாலை. - தேசிய நெடுஞ்சாலை 75 - தேசிய நெடுஞ்சாலை 48 - தேசிய நெடுஞ்சாலை 275 - பில்லாகெம்பனஹல்லி - தேசிய நெடுஞ்சாலை 209 - பசவன்னா பேட்டா காடு - பீமேஷ்வரி (126 கிலோமீட்டர் - 3 மணி நேரம் 30 நிமிடங்கள்)

வழி 3: ராஜா ராம்மோகன் ராய் சாலை./ மைசூரு சாலை. - NICE மைசூரு - பெங்களூரு விரைவுவழி - தேசிய நெடுஞ்சாலை 275 - சன்னாப்பட்னா - மாண்டியா - மாலவள்ளியின் தேசிய நெடுஞ்சாலை 209 - பசவன்னா பேட்டா காடு - பீமேஷ்வரி (171 கிலோமீட்டர் - 4 மணி நேரம்)

முதலாம் வழியானது விரைவாக நம் பயணத்தை கனகப்புரா வழியாக கொண்டு செல்கிறது. இந்த சிறிய நகரத்தில் எண்ணற்ற நீர்வீழ்ச்சியும், இயற்கை இடங்களும் சுற்றிக்காணப்படுகிறது.

சன்னாப்பட்னா:

சன்னாப்பட்னா:

இந்த நகரமானது நாம் செல்லக்கூடிய மூன்றாம் வழியில் காணப்பட, இவ்விடம் மரப்பொம்மை கைத்திறன் என, எண்ணற்ற சுவாரஸ்யமான இடங்களையும் கொண்டிருக்கிறது. அவற்றுள் பிடாடி, ராமநகர், ஆப்ரமேய சுவாமி ஆலயங்களும் அடங்கும். அற்புதமான பட்டுக்கும், தேங்காய் உற்பத்திக்கும் பெயர் பெற்ற ஒரு இடமும் கூட.

PC: Pratheepps

மத்தூர்:

மத்தூர்:

சன்னப்பட்னாவிலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் நகரம் தான் மாண்டியா மாவட்டத்திலுள்ள மத்தூராகும். மாண்டியாவிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் வைத்திய நாதேஷ்வர ஆலயமானது காணப்பட சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அமைதியான ஆலயமும் கூட. ஷிம்ஷா நதிக்கரையை தழுவி இந்த ஆலயம் காணப்பட, அழகிய பசுமையான நெல் நிலங்களைக்கொண்டும் சூழ்ந்து காணப்படுகிறது. மத்தூர், சுவையூட்டும் மத்தூர் வடாவிற்கு பிரத்திப்பெற்ற இடமாக, ரவை மற்றும் வெங்காயம் கொண்டு உருவாக்கப்படும் ஒரு ருசித்தரும் சிற்றுண்டியும் இதுவேயாக, மிஸ் பண்ணாம சாப்பிடுங்களேன்.

PC: Ashwin Kumar

கொக்கரே பெல்லூர் பெலிகன்ரி:

கொக்கரே பெல்லூர் பெலிகன்ரி:


மத்தூரிலிருந்து 13 கிலோமீட்டர் நாம் செல்ல, கொக்கரே பெல்லூர் கிராமத்தை அடைய, பெயர்பெற்ற கொக்கரே பெல்லூர் பெலிகன்ரியையும் அடைகிறோம். இந்த பறவைகள் சரணாலயத்தில் அழிந்துக்கொண்டுவரும் பல பறவையினங்கள் காணப்பட, அவை புள்ளி வைத்த பிளைட் பெலிகன் என அதோடு இணைந்து வண்ணம் தீட்டப்பட்ட நாரைகளும் காணப்படும். இந்த வண்ணம் தீட்டப்பட்ட நாரைகளால் இந்த கிராமத்துக்கு இப்பெயரானது கிடைக்கப்பட, கன்னடாவில் கொக்கரி என்றும், பெல்லூர் என்றால் இனிப்புகளின் கிராமம் எனவும் பொருள் தர, எண்ணிலடங்கா அளவிலான கரும்பு உற்பத்தியானது இங்கே காணப்படுகிறது.

PC: Koshy Koshy

 மாண்டியா:

மாண்டியா:


பீமேஷ்வரி செல்லும் வழியில் காணப்படும் மாவட்டம் தான் மத்தூரிலிருந்து 19 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் மாண்டியாவாகும். மாண்டியாவில் புகழ்பெற்ற கிருஷ்ண ராஜ சாகர் அணை (KRS), பிருந்தாவன் தோட்டம் ஆகியவையும், KRS அணை, கோவிந்தனாஹல்லி, ஆதிச்சுஞ்சனகிரி மலை மற்றும் மெலுகோட்டேவிக்கு அடித்தளத்தில் அமைந்திருக்கிறது. இருப்பினும், இவ்விடங்களை காண நமக்கு ஒட்டுமொத்த நாளும் தேவைப்பட, மாண்டியாவில் உங்களுடைய நேரத்தை செலவிட திட்டமிடுவது நல்லதாகும்.

PC: sree.cet

சிவானசமுத்திர வீழ்ச்சி:

சிவானசமுத்திர வீழ்ச்சி:

மாண்டியாவிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் பீமேஷ்வரியின் கம்பீரமான சிவான சமுத்ர வீழ்ச்சியை நாம் அடைய 1 மணி நேரம் ஆகக்கூடும். இதனை இலக்கிய ரீதியாக "சிவா வீழ்ச்சி" என அழைக்க, மிகவும் பிரசித்திப்பெற்ற சுற்றுலா தளங்களுள் ஒன்றாகவும் இருக்கிறது. காவேரி நதியானது 90 மீட்டர் உயரத்திலிருந்து விழ, இரண்டு பகுதியாகவும் பிரிந்திட, அதனை தான் ககனசுக்கி மற்றும் பராசுக்கி என நாம் அழைக்க, இதனை சேர்த்து சிவானசமுத்ர வீழ்ச்சி எனவும் அழைக்கிறோம். இவ்விடம் தற்போது வேகமாக வளர்ந்துவர, 1905ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஆசியாவின் முதல் நீர்மின் நிலையத்தையும் கொண்டிருக்கிறது. இந்த மாபெரும் நீர்வீழ்ச்சியை நாம் காண ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலான காலங்கள் அமையக்கூடும்.

PC: Hareey3

 முத்தாதி:

முத்தாதி:

இதனை ‘முத்தட்டி' எனவும் அழைக்க, மாலவள்ளி கிராமத்தின் காவேரி நதிக்கரையிலும் இது காணப்படுகிறது. இவ்விடம் கண்களுக்கு விருந்தாக அமைய, பசுமையான புல்வெளிகளும், மரங்களுமென நீர் நிலை அற்ற அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது. இங்கே நாம் அமர்ந்து இவ்விடத்தை ரசிக்க ஏதுவாக அமையக்கூடும். இருப்பினும் தற்போதைய நீர் நிலையானது அதிகரித்து காணப்பட, இங்கே நீந்த வேண்டாமெனவும் பரிந்துரை செய்யப்படுகிறது.

PC: Aravindb21

 காவேரி வனவிலங்கு சரணாலயம்:

காவேரி வனவிலங்கு சரணாலயம்:


முத்தாதியிலிருந்து ஒரு மணி நேரப்பயணம் மூலமாக நாம் காவேரி வனவிலங்கு சரணாலயத்தை அடைய, இதனை சில நேரங்களில் பீமேஷ்வரி வனவிலங்கு சரணாலயமெனவும் அழைக்கப்படுகிறது. இங்கே காவேரி நதியானது அழகிய இலையுதிர் காடுகள் வழியாக பாய்ந்தோடுகிறது. இவ்விடமானது எண்ணற்ற மரங்களுக்கும், விலங்குகளான மலபார் பெரும் அணில், நரைத்த பெரும் அணில்களுக்கும் வீடாக காணப்பட, அவை அழிந்துக்கொண்டுவரும் விலங்கின பட்டியலிலும் முக்கிய இடத்தை பிடித்திடக்கூடும். இவற்றை கடந்து, இந்த சரணாலயமானது 280 வகையான பறவை இனங்களை கொண்டிருக்க, ஊர்வனைவைகளும், பசவன் பேட்டா (நந்தி மலை) காடுகளில் காணப்படுகிறது.

PC: Palmfly

 பீமேஷ்வரி:

பீமேஷ்வரி:


சிறந்த சாகசம், இயற்கை, மீன்பிடி முகாமென கர்நாடகாவின் பீமேஷ்வரி புகழ்பெற்று விளங்க, இங்கே அனைத்து விதமான விளையாட்டுகளும், சாகச செயல்களும் அடங்கும். காவேரி நதிக்கரையின் மேற்கு தொடர்ச்சியின் பின்புலத்தில் இது காணப்படுகிறது.

இப்பகுதியில் வெள்ளை நிற படகுப்போட்டியானது பிடித்தமான விளையாட்டாக அமைய, மாறுதல்களும், காவேரி நதியின் பாய்ந்தோடும் தன்மை என ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மாதங்கள் சிறந்து காணப்பட, பருவமழை நீரானது நதியை சூழ்கிறது.

மற்றுமோர் செயலாக ஆங்கிளிங் காணப்பட, குறிப்பாக மீன் பிடிப்பவர்களுக்கு இந்த பகுதியில் எண்ணற்ற மஷீர் மீனானது கிடைக்கிறது. உள்ளூர் கூடாரங்களும், அற்புதமான வனவிலங்கு வாழ்க்கை பயணமெனவும் இவ்விடமானது காணப்படுகிறது.

பரிசல் பயணம் மற்றும் கயாகிங்க் ஆகிய இரண்டும் மற்ற இரு விளையாட்டுகளாக அமைய, இந்த சாகச செயல்களால் உங்களுடைய மனமானது ஒய்வு நிலையிலும் இருக்கக்கூடும்.

PC: Anne Roberts