» »பெங்களூர் பக்கத்துல இருக்கிற சென்னப் பட்ணால என்ன ஸ்பெஷல்னு தெரியுமா? இதப் படிங்க!!

பெங்களூர் பக்கத்துல இருக்கிற சென்னப் பட்ணால என்ன ஸ்பெஷல்னு தெரியுமா? இதப் படிங்க!!

Written By: Bala Karthik

வார விடுமுறைக்கு வெளியேற வேண்டுமா? ஆம், பெங்களூருவின் நகர வாழ்க்கை உங்களை நாள் தோரும் நசுக்கிட, எங்காவது அமைதியான நகரத்துப்பக்கம் நீங்கள் போக வேண்டுமென ஆசைக்கொண்டால் சென்னப்பட்ணாவிற்கு செல்லுங்களேன்.

எழுபது கிலோமீட்டர் தூரத்தில் காணப்படும் இவ்விடத்திற்கு முழுமையான இரண்டு மணி நேர பயணமாக நமக்கு அமையக்கூடும் என்பதால், கிராமப்புறமான சென்னப்பட்ணா பெங்களூருவின் புற நகரில் காணப்படுகிறது. இவ்விடமானது மர பொம்மைகள் விற்கப்பட பிரசித்திப்பெற்று விளங்க, அவை மாடர்னாகவும், மிருதுவான தொடுதிறனையும் நமக்கு தருவதோடு நம் குழந்தைகளையும் ஆரவாரத்தில் குதுகலிக்க செய்திடும்.

பொம்மைகளை தவிர்த்து, தேங்காய் உற்பத்தி பொருளுக்கும், மூலப்பட்டுக்கும் பெயர் பெற்ற ஓர் இடமாகவும் சென்னப்பட்ணா காணப்படுகிறது. இவை அனைத்தையும் சிறந்த விலைக்கு நீங்கள் பெற்றிட, ஷாப்பிங்க் பிரியர்களுக்கு இவ்விடமானது சிறந்ததாக அமையக்கூடும்! இதனை கடந்து சென்னப்பட்ணாவில் சிறு யாத்ரீக தளங்களும், எண்ணற்ற ஆலயங்களும் பார்ப்பதற்காக நம்மை வரவேற்கிறது.

சென்னப்பட்ணாவை நாம் அடைய விதவிதமான வழிகள்:

சென்னப்பட்ணாவை நாம் அடைய விதவிதமான வழிகள்:

அடிப்படை அமைப்பின்பால் மூன்று வழிகளை இவ்விடம் கொண்டிருக்க, சில நகரங்களை நாம் கடந்துதான் சென்னப்பட்ணாவை அடையவேண்டும். அவை கும்பல்கோடு, பிடாடி, ராம்நகர், சென்னப்பட்ணா.

வழி 1: ராஜாராம்மோகன் ராய் சாலை/ மைசூரு சாலை - NICE பெங்களூரு மைசூரு விரைவு சாலை - தேசிய நெடுஞ்சாலை 275 - சென்னப்பட்ணா (1 மணி நேரம் 35 நிமிடங்கள் - 66.7 கிலோமீட்டர்கள்)

வழி 2: கஸ்தூரிபா சாலை - சங்கி சாலை - CNR கீழ்வழிச்சாலை/ CV ராமன் சாலை - தேசிய நெடுஞ்சாலை 75 - தேசிய நெடுஞ்சாலை 48 - தேசிய நெடுஞ்சாலை 275 வழியாக வெளியே - சென்னப்பட்ணா (2 மணி நேரம் - 80.6 கிலோமீட்டர்கள்.

வழி 3: ராஜாராம்மோகன் ராய் சாலை - ஓசூர் சாலை - பொம்மனஹல்லியின் தேசிய நெடுஞ்சாலை 44 - தேசிய நெடுஞ்சாலை 275 வழியாக வெளியே - சென்னப்பட்ணா (2 மணி நேரம் - 83.6 கிலோமீட்டர்கள்)

 தூரஹல்லி காடு:

தூரஹல்லி காடு:


நீங்கள் மூன்றாம் வழியாக சென்றால், ஐந்து கிலோமீட்டரில் ஒரு வழி வர, தேசிய நெடுஞ்சாலை 48 இன் வழியாக NICE சாலையில் சென்று பெங்களூருவின் தூரஹல்லி காடு உள்ளே மறைந்திடலாம். இந்த எஞ்சியிருக்கும் பெங்களூருவின் காட்டினை குடும்பத்துடன் வருவதன் மூலமாகவோ அல்லது சிறு சுற்றுலா வருவதன் மூலமாகவோ செழிப்புடன் மனதை மாற்றலாம். இக்காடு பறவைகளை காணவும் நமக்கு வழியை தந்திட, இங்கே செல்ல நினைப்பவர்கள் தொலை நோக்கியை மறக்காமல் எடுத்துக்கொண்டு செல்லவும் அறிவுறுத்தப்படுகிறது.

PC: Shashank Bhagat

ஓம்கர் மலை:

ஓம்கர் மலை:


தூரஹல்லி காட்டிலிருந்து இன்னொரு ஐந்து கிலோமீட்டர் நாம் செல்ல, பிரசித்திப்பெற்ற ஓம்கர் மலையை நாம் பார்க்கிறோம். இந்த அமைதியான மலை இரு ஆலயங்களை கொண்டிருக்க, அதன் பெயர் மத்ய நாராயணா மற்றும் வதாச ஜோதிலிங்க ஆலயம் எனவும் தெரியவருகிறது. பெங்களூருவின் உயரிய புள்ளிகளுள் ஒன்றாக இவ்விடமிருக்க, இந்த ஓம்கர் மலையில் ஓர் ராட்சச கடிகார கோபுரம் காணப்பட, உலகிலேயே இரண்டாவது பெரிய கோபுரம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

PC: Sagar Sakre

 கோ-கார்டிங் மற்றும் பந்துவீச்சு:

கோ-கார்டிங் மற்றும் பந்துவீச்சு:


மைசூரு சாலையை அடையும் நீங்கள் முதல் செயலாக கோ-கார்டிங் மற்றும் பந்துவீச்சை தேர்ந்தெடுக்கவும் கூடும். இவ்விடம் காலை 10.30 மணிக்கு திறக்கப்பட, மாலை 6.30 மணி வரையில் காணப்படுவதோடு, இரு வகையான காரணத்திற்கு உகுந்த விலைகளையும் கார்டுகள் கொண்டிருக்கிறது. குழந்தைகள் கார்டு 160 ரூபாய்க்கும், இரட்டை கார்டுகள் 190 ரூபாய்க்குமென ஆறு தொடைகளுக்கான விலையாக இது காணப்படுகிறது. இந்த கோ-கார்டிங்கில் ஏற்கனவே அனுபவமற்று நீங்கள் இருப்பீர்களென்றால் நபரின் உதவியை இங்கே நம்மால் நாட முடிகிறது.

PC: Ashwin Kumar

டொட்டா அலாடா மாரா (பெரிய ஆலமரம்):

டொட்டா அலாடா மாரா (பெரிய ஆலமரம்):

ஓர் முக்கியமான சுற்றுத்தளமாக "தொட்ட அலாடா மரா" காணப்பட, அப்படி என்றால் பெரிய ஆலமரமெனவும் பொருளை தர, கும்பல்கோட் சந்திப்பிலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் மைசூரு சாலையின் (தேசிய நெடுஞ்சாலை 275) வலதுப்புறத்தில் காணப்படுகிறது.

இம்மரமானது சுமார் 4,000 வருடங்களுக்கு பழமையாக காணப்பட, 3 ஏக்கர்கள் பரந்து விரிந்தும் காணப்படுவதால்! இந்த மரத்தின் விழுதுகளாக சுமார் 1000 விழுதுகள் பெருமையுடன் வரலாற்றை பிடித்துக்கொண்டு நிற்கிறது.

ஓர் தசாப்தத்தை கடந்த இந்த வேர்கள், இயற்கை நோயால் பாதிக்கப்பட, இதன் வான்வழி வேர்கள் கிளைகளாக பிரிந்து பல மரங்களை போன்ற காட்சியையும் தருகிறது. இதனால், கர்நாடகாவின் பெரிய மற்றும் இந்தியாவின் இரண்டாவது பெரிய மரமாக இம்மரம் விளங்குகிறது.

PC: wikimedia.org

ஸ்ரீ முக்தி நாகா ஆலயம்:

ஸ்ரீ முக்தி நாகா ஆலயம்:


இந்த பெரிய ஆலமரத்திலிருந்து 3 கிலோமீட்டர் நாம் செல்ல, ரமோஹல்லியை அடைய, நாக தேவனின் மாபெரும் ஒற்றைக்கல் சிலையானது இங்கே காணப்படுகிறது. இந்த சிலை சுமார் 16 அடி உயரத்தில் காணப்பட, இதன் எடையோ 36 டன்கள் எனவும் தெரியவருகிறது.

இந்த ஆலயம் மற்ற ஆலயங்கள் மற்றும் சன்னதிகளைக்காட்டிலும் சிக்கலான அமைப்புடனே காணப்படுகிறது. ஸ்ரீ கர்ய சித்தி விநாயக ஆலயம் இதன் இடப்புறத்திலும் அமைந்திருக்க, சக்தி தாரா சுப்பிரமணியரின் ஒற்றைக்கல் சிலையும் இங்கே காணப்பட, அதன் உயரமானது 21 அடியும், எடை 56 டன்களும் இருக்கிறது.

PC: Temple Official Website

மச்சின்பெல்லே அணை:

மச்சின்பெல்லே அணை:


கும்பல்கோட் சந்திப்பிலிருந்து கொஞ்சம் தள்ளி செல்ல, வலதுப்புறத்தில் சோதனை சாவடி ஒன்று காணப்படுகிறது. இந்த சோதனை சாவடியிலிருந்து 13 கிலோமீட்டர் செல்ல, ஆர்காவதி நதியில் கட்டப்பட்டிருக்கிறது இந்த அழகிய மச்சின்பெல்லே அணையானது.

இந்த மலையின் உச்சிக்கு சிறுப்பயணம் நாம் செல்ல, பசுமையான காட்சிகளால் சூழ்ந்து இந்த ஆர்காவதி நதியானது நம் கண்களை கொள்ளைக்கொள்கிறது. அதோடு, நம்மால் சவன்துர்கா மலையையும் இதன் உச்சியிலிருந்து பார்க்க முடிகிறது.

PC: Manoj M Shenoy

பிடாடி:

பிடாடி:


இவ்விடம் வழக்கமான நிறுத்தமாக இருக்க, நீண்ட தூர பயணம் செய்யும் மக்களுக்காக இவ்விடத்தில் இருபத்து நான்கு மணி நேரமும் காபி ஷாப்பானது திறந்திருக்க, ஹாட்டான காபியை நம்மால் இங்கே சுவைக்கவும் முடியக்கூடும். மேலும் இவ்விடமானது தட்டை இட்லிகளுக்கும் பிரசித்திப்பெற்று காணப்பட! பிடாடியினை சுற்றி ஹக்தகிரி ஏரியையும் நம்மால் இங்கே பார்க்க முடிகிறது.

வொண்டர்லா மற்றும் புதுமையான திரைப்பட நகரம்:

வொண்டர்லா மற்றும் புதுமையான திரைப்பட நகரம்:

பிடாடியிலிருந்து ஒன்பது கிலோமீட்டர் நாம் செல்ல, பிடித்தமான நகரத்தை உங்களுடைய கண்களானது காண, அங்கே வொண்டர்லா பொழுதுப்போக்கு பூங்காவையும் பார்த்திடக்கூடும். அதோடு, இந்த நாள் முழுவதும் வொண்டர்லாவிலே உங்களுக்கு செல்ல, சேவைகளும், தங்குமிடங்களுமெனவும் இவ்விடமானது உங்களை சிறப்புடன் வரவேற்கிறது.

பிடாடியிலிருந்து ஏழு கிலோமீட்டர் இடதுப்புறம் செல்ல, விளையாட்டுகள் நிறைந்த இடத்தை நம்மால் பார்க்க முடிய, இந்த புதுமையான திரைப்பட நகரத்தில் வயது வரம்பின்றி அனைவரையும் வெகுவாக கவர, திரைப்பட ஸ்டூடியோ மற்றும் பொழுதுப்போக்கு பூங்காவையுமென கார்டூன் நகரம், டைனோ பூங்கா, என பிரசித்திப்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளான பிக் பாஸ் போன்றவற்றையும் நம்மால் இங்கே பார்க்க முடிகிறது.

PC: wikimedia.org

ராமநகர்:

ராமநகர்:

இந்த ஏழு மலை நிலங்கள், சிறந்த பட்டு மற்றும் நெய்தலுக்கு பிரசித்திப்பெற்று காணப்படுகிறது. மேலும் இந்த ராமநகரில் எண்ணற்ற செயல்களான பறவை பார்த்தல், மலை ஏறுதல், கூடாரமிடல், பயணம் செல்லுதல் எனவும் காணப்படுகிறது.

நீங்கள் காளிகாம்பா ஆலயத்தை ராமநகரின் வலதுப்புற தொடக்கத்தில் கண்டிடலாம். ராமநகரின் மற்ற சுவாரஷ்யமான செயல்களாக வைன் டூர் மற்றும் திராட்சை வடித்தல் காணப்படுகிறது. நீங்கள் உங்களுடைய நண்பர்களுடன் இணைந்து மதுவை ருசி பார்த்திடவும் கூடும்.

இப்பொழுது சென்னப்பட்ணாவை சுற்றி நாம் பார்க்க வேண்டிய இடங்களை பற்றி பார்க்கலாம்.

கன்வா நீர்த்தேக்கம்:

கன்வா நீர்த்தேக்கம்:


இந்த மனிதனால் உருவாக்கப்பட்ட நீர்த்தேக்கம் 1946ஆம் ஆண்டு கன்வா நதியில் கட்டப்பட்டது. இவ்விடம் பிரசித்திப்பெற்ற சுற்றுலா தளமாக அமைய, குறிப்பாக பருவமழைக்காலத்தின்போது இந்த ஏரி நிரம்பி வழிந்து நமக்கு காட்சியளிக்கிறது. இவ்விடம் பறவை ஆர்வலர்களுக்கு மற்றுமோர் சொர்க்கமாக அமையவும்கூடும். நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருப்பின், இங்கே இடம்பெயர்ந்து வரும் பறவைகளையும் உங்களால் பார்த்திட முடியும்.

PC: Redolentreef

அப்ரமேயா சுவாமி ஆலயம்:

அப்ரமேயா சுவாமி ஆலயம்:

சென்னப்பட்ணாவிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் மல்லூரில் காணப்படும் ஓர் ஆலயம் தான் அப்ரமேயா சுவாமி ஆலயமாகும். இந்த ஆலயத்தின் சிக்கல் அமைப்பாக கிருஷ்ண பெருமானின் (அம்பேகளு கிருஷ்ணா) சிலை ஊர்ந்து காணப்படக்கூடும்.

PC: Kiranravikumar

 பெட்டடா திம்மாப்பா:

பெட்டடா திம்மாப்பா:

சென்னப்பட்ணாவில் விற்கப்படும் பிரசித்திப்பெற்ற பொம்மையாக பெட்டடா திம்மாப்பா காணப்படுகிறது. சென்னப்பட்ணாவிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் இவ்விடம் காணப்படுகிறது. இவ்விடம், மதமுக்கியத்துவம் கொண்டு காணப்பட, பெட்டடா திம்மாப்பாவில் விஷ்ணு பெருமான் காட்சியளிக்கிறார்.

PC: HP Nadig

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்